South Indian Movies https://www.91mobiles.com/tamil Wed, 23 Aug 2023 14:21:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OTTயில் சில சிறந்த ரஜினிக்காந்த் படங்கள் https://www.91mobiles.com/tamil/best-rajinikanth-movies-in-ott/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-rajinikanth-movies-in-ott Thu, 24 Aug 2023 04:30:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10309   1975 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி வைத்த ரஜினிக்காந்த் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தார். பின் தனக்கென ஒரு ஸ்டைலை (பாணி) பின்பற்றி ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஆராய்ந்து அதையே தன் படங்களில் வழங்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் சில கதையம்சமுள்ள படங்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்புத்திறனை நன்றாக வெளிப்படுத்தினார். பின் அதிலிருந்து மாறி தனி கதாநாயகன் ஆனதும் முழுவதும் பொழுதுபோக்குப் படங்களையே […]

The post OTTயில் சில சிறந்த ரஜினிக்காந்த் படங்கள் first appeared on .

]]>

 

1975 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி வைத்த ரஜினிக்காந்த் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தார். பின் தனக்கென ஒரு ஸ்டைலை (பாணி) பின்பற்றி ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஆராய்ந்து அதையே தன் படங்களில் வழங்க ஆரம்பித்தார்.

ஆரம்ப காலத்தில் சில கதையம்சமுள்ள படங்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்புத்திறனை நன்றாக வெளிப்படுத்தினார். பின் அதிலிருந்து மாறி தனி கதாநாயகன் ஆனதும் முழுவதும் பொழுதுபோக்குப் படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என அழைக்க ஆரம்பித்தனர். ரஜினிகாந்த், தமிழ் தவிர்த்து, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் ஆங்கில படங்களில் கூட நடித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் கதாநாயகனாகவே நடிப்பது மட்டுமின்றி வசூலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் சில OTTயில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இவரது பெரும்பாலான படங்களை அமேசான் ப்ரைம் வீடியோவிலும், சன் நெக்ஸ்ட் OTTயிலும் பார்க்க முடிகிறது. ரஜியின் முக்கிய படங்களான பில்லா, பாட்ஷா, படையப்பா போன்ற சிலபடங்களின் தமிழ் பதிப்பு எந்த OTTயிலும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்போது OTT தளத்தில் இருக்கும் படங்களில் சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

 

அமேசான் ப்ரைம் OTT

 

  • அபூர்வ ராகங்கள்
  • தளபதி
  • முள்ளும் மலரும்
  • சிவாஜி
  • 2.0
  • காலா
  • தர்பார்
  • குசேலன்
  • லிங்கா
  • 16 வயதினிலே
  • முரட்டுக்காளை
  • படிக்காதவன்
  • ப்ரியா
  • மன்னன்
  • பாயும்புலி
  • HUM
  • நான் அடிமை இல்லை
  • ராஜா சின்ன ரோஜா

மற்றும் பல..

அபூர்வ ராகங்கள்

இதுவே ரஜினியின் அறிமுகப்படம் ஆகும். இதில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கமல்ஹாசன். பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரஜினியின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. அதுவே அவரது அடுத்தடுத்த படங்களுக்கு காரணமாய் இருந்தது. இதில் கதாநாயகியாக ஸ்ரீவித்யா நடித்துள்ளார். அதிசய ராகம், ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே.. என  இதன் பாடல்கள் இன்றும் பிரபலம். MS விஸ்வநாதன் இதற்கு இசையமைத்து இருந்தார்.

 

முள்ளும் மலரும்

தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று முள்ளும் மலரும். ரஜினியின்  படங்களில் அவருக்கே பிடித்தமான படங்களில் ஒன்றும் இதுதான். இதை மகேந்திரன் இயக்கியிருந்தார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் வெளியான இப்படம் அண்ணன் – தங்கை உறவைப் பற்றி பேசியது. இதில் ரஜினியின் தங்கையாக ஷோபா நடித்திருந்தார். கல்கி இதழில் தொடர்கதையாக வெளியான உமா சந்திரனின் நாவலே இப்படமாக உருமாறியது. இந்த படம் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருதையும், ரஜினிக்கு தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றுத் தந்தது.

 

தளபதி

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே திரைப்படம் தளபதி. இதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். அரவிந்த்சாமி இந்த படத்தில் தான் அறிமுகமானார். மகாபாரத கதாபாத்திரமான கர்ணனின் கதை தான் இந்த தளபதி. இது அப்போது ரஜினி நடித்த மற்ற படங்களில் இருந்து அவரை முற்றிலும் வேறு மாதிரி காட்டியது. இதன் பாடல்கள் & வசனங்கள் இன்றளவும் பிரபலம். இளையராஜா இசையில் இந்த படம் வெளியானது.

 

சிவாஜி

மிகப்பெரிய, பழைய சினிமா தயாரிப்பு நிறுவனமான AVM நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம். பின்னாளில் 3D தொழிற்நுட்பத்திற்குகூட மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டது. 3 மணிநேரம் ஓடும் இந்த படத்தினை படத்தின் நீளம் தெரியாமல் பார்த்துக் கொள்வதில் படத்தின் திரைக்கதையும், எழுத்தாளர் சுஜாதாவின் வசனங்கள் முக்கிய பங்கு வகித்தன. இசை AR ரஹ்மான்.

 

சன் நெக்ஸ்ட் OTT

  • எந்திரன்
  • சந்திரமுகி
  • அண்ணாத்த
  • பேட்ட
  • கபாலி
  • முத்து
  • மாப்பிள்ளை

 

முத்து

இயக்குநர் KS ரவிக்குமார் இயக்கத்தில் பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பில் வெளியான இந்த படம் மலையாளப்படமான ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற படத்தின் ரீ-மேக் ஆகும். ஆனால், ரவிக்குமார் ரஜினிக்காக நிறைய மாற்றங்களைச் செய்து ஒரு முழுமையான ‘ரஜினி படம்’ ஆக மாற்றி இருப்பார். இதற்கு இசையமைத்தவர்  AR ரஹ்மான்.

 

எந்திரன்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வந்த இந்த திரைப்படம் முதலில் கமல்ஹாசனுக்காக எழுதப்பட்டது. பின் ஷாருக்கானுக்கு மாறி கடைசியாக ரஜினிக்கு வந்து சேர்ந்தது. சயின்ஸ்-பிக்ஷன் படமான இதிலும் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு பெரியது. கூடவே இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாக இருக்கும். இதற்கும் இசை AR ரஹ்மான்.

 

 

The post OTTயில் சில சிறந்த ரஜினிக்காந்த் படங்கள் first appeared on .

]]>
இந்த வார ஓடிடி ரிலீஸ் https://www.91mobiles.com/tamil/this-week-ott-release-movies-list/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=this-week-ott-release-movies-list Mon, 29 Aug 2022 08:54:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1863 திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்று ஒவ்வொரு படத்தையும் பார்ப்பது என்பது நடுத்தரக் குடும்பங்களுக்கு இயலாத நிலையில், இந்த ஓடிடி ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குள்ளான படங்களும் உள்ளன. ஓடிடி தளங்கள், சினிமா காதலர்களின் கனவுக்கு ஈடுகொடுத்து வருகிறது. இதன்மூலம் தேவையான படங்களை, தேவையான நேரத்தில் பார்த்துக் கொள்ள முடியும். சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான படங்கள், நேரடியாக வெளியாகும் படங்கள், பழைய […]

The post இந்த வார ஓடிடி ரிலீஸ் first appeared on .

]]>

திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்று ஒவ்வொரு படத்தையும் பார்ப்பது என்பது நடுத்தரக் குடும்பங்களுக்கு இயலாத நிலையில், இந்த ஓடிடி ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குள்ளான படங்களும் உள்ளன.

ஓடிடி தளங்கள், சினிமா காதலர்களின் கனவுக்கு ஈடுகொடுத்து வருகிறது. இதன்மூலம் தேவையான படங்களை, தேவையான நேரத்தில் பார்த்துக் கொள்ள முடியும். சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான படங்கள், நேரடியாக வெளியாகும் படங்கள், பழைய கிளாசிக் படங்கள் என இதன் பட்டியல் நீளுகிறது.

நமது விருப்பத்திற்குரிய ஹீரோக்களின் படங்களையும், அவரது பழைய படங்கள் முதல்கொண்டு ஓடிடி மூலம் பார்க்க முடிவது இதன் வசதி. முக்கியமான விஷயம். 4 பேர் கொண்ட குடும்பத்தினர் புதிய படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு குறைந்த பட்சம் ஸ்நாக்ஸ் உட்பட 1500 ரூபாய் செலவாகும். ஆனால் வீட்டில் ஹோம் தியேட்டருடன் அதே படத்தை சில வாரங்களில் ஓடிடியில் பார்ப்பதன் மூலம் அதே அனுபவத்தை பெற முடியும். செலவும் குறைவுதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. ஒவ்வொரு வாரமும் ஓடிடி, திரையரங்குகள் என பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழ்படங்கள் ஜோதி டெண்ட்கொட்டாவிலும், பேட்டரி சிம்ப்ளி சவுத்திலும் வெளியாகவுள்ளன.

இதேபோல தெலுங்கில் ரிபீட் ஹாட்ஸ்டாரிலும், ஒடேலா ரயில்வே ஸ்டேஷன் ஆஹா தமிழிலும் வெளியாகவுள்ளன. கன்னடப்படமான பெட்ரோமாக்ஸ் வூட்டில் வெளியாகிறது. இந்தியில் கிரிமினல் ஜஸ்டீஸ் 3 மற்றும் மகாராணி படங்கள் முறையே ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லைவில் வெளியாகவுள்ளது.

ஹாலிவுட் படங்கள் சமாரிட்டன் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதனிடையே விரைவில் விருமன், சீதாராமன் ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளன. மலையாள படமான தல்லுமல்லா, டோபாரா படங்கள் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளன. இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள தல்லுமல்லா படம் கோல்ட் மாஃபியாவை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

ஜீ 5ல் பிம்பிசாரா, ரக்ஷா பந்தன், கார்த்திகேயா 2 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. ஹாட்ஸ்டாரில் நான் தான் கேஸ் கொடு படமும், சோனி லைவில் ராமா ராவ் ஆன் ட்யூட்டி படமும் ரிலீசாகவுள்ளன. இதனிடையே, அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வூட் செலக்டில் வெளியாகவுள்ளது. அமீர்கானின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஸ்ரீகாந்த் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 10வது கிளாஸ் டைரீஸ் படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அதர்வா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான குருதியாட்டம் படம் வரும் செப்டம்பர் 2ம் தேதி ஆஹா தமிழில் வெளியாக இருக்கிறது.

திரையரங்குகளில் சென்று இந்தப் படங்களை பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடியில் பார்த்துக் கொள்ள முடியும். இந்தப் படங்கள் வரும் 26ம் தேதி மற்றும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், வாரயிறுதி நாட்களை சிறப்பாக ரசிகர்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

The post இந்த வார ஓடிடி ரிலீஸ் first appeared on .

]]>
கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. https://www.91mobiles.com/tamil/udhayanithi-satalin-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=udhayanithi-satalin-movie-update Tue, 26 Jul 2022 11:56:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1078 தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நேற்று (25-07-2022) சென்னையில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. அதில உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். உதயநிதி […]

The post கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. first appeared on .

]]>

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நேற்று (25-07-2022) சென்னையில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. அதில உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் – கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில், “15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

The post கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. first appeared on .

]]>