5G phone https://www.91mobiles.com/tamil Fri, 30 Sep 2022 13:30:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஜியோ 5ஜி போனில் என்னென்ன இருக்கும்? https://www.91mobiles.com/tamil/jio-phone-5g-full-specifications-leaked-online-price-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-phone-5g-full-specifications-leaked-online-price-features Fri, 30 Sep 2022 13:30:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2703 5ஜி சேவை ஜியோ நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கூட தங்களது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோ நிறுவனம் 5ஜி சேவை அறிமுகம் செய்தவுடன் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

The post ஜியோ 5ஜி போனில் என்னென்ன இருக்கும்? first appeared on .

]]>

5ஜி சேவை

ஜியோ நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கூட தங்களது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோ நிறுவனம் 5ஜி சேவை அறிமுகம் செய்தவுடன் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

5ஜி ஸ்மார்ட்போன்

தற்போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

குறைந்த விலை

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,000 அல்லது ரூ.10,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதாவது மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது ஜியோ நிறுவனம்.

பிராசஸர்

புதிய ஜியோ போன் 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும். இந்திய சந்தையில் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த ஜியோபோன் 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜியோ போன் ட்ரூ 5ஜி

மேலும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Jio Phone True 5G(ஜியோ போன் ட்ரூ 5ஜி) எனும் பெயரில் அறிமுகமாகும் என்றுத் தெரிகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

டிஸ்ப்ளே

ஜியோபோன் 5ஜி ஆனது 6.5 அங்குல எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். கண்டிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

கேமரா

குறிப்பாக ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும். கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த ஜியோ 5ஜி போனில் வழங்கப்பட்டு இருக்கும்.

பேட்டரி

ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 4ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை 802.11, புளூடூத் 5.1, கூகுள் மொபைல் சேவைகள் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் எனப் பல சிறப்பான வசதிகள் உள்ளன. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது.

The post ஜியோ 5ஜி போனில் என்னென்ன இருக்கும்? first appeared on .

]]>