alavanthan https://www.91mobiles.com/tamil Fri, 15 Jul 2022 05:01:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கும் ஆளவந்தான். https://www.91mobiles.com/tamil/alavanthan-returns-with-new-technology/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=alavanthan-returns-with-new-technology Fri, 15 Jul 2022 05:01:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=909 கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களை குவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. தற்போது இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் வெளியான ஆளவந்தான் படத்தை புதிய தொழில்நுட்பத்துடன் ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளவந்தான் படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கமல் இரு வேடங்களில் நடித்திருந்த […]

The post புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கும் ஆளவந்தான். first appeared on .

]]>

கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களை குவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

தற்போது இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் வெளியான ஆளவந்தான் படத்தை புதிய தொழில்நுட்பத்துடன் ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆளவந்தான் படம்
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கமல் இரு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் வசூல் ரீதியாக கைக்கொடுக்கவில்லை என்றபோதிலும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக தேசிய விருதை பெற்றது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை சிறப்பாக கையாண்டிருந்தார் கமல்.

3டி & டால்பி தொழில்நுட்பம்
இந்நிலையில் தற்போது கமலின் விக்ரம் படம் கொடுத்துள்ள வெற்றியை தொடர்ந்து ஆளவந்தான் படத்தை மீண்டும் திரையிட தாணு முடிவெடுத்துள்ளார். 3டி மற்றும் டால்பி தொழில்நுட்பத்துடன் இந்தப் படம் விரைவில் ரசிகர்களை சந்திக்க திரையரங்குகளுக்கு வரவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது

The post புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கும் ஆளவந்தான். first appeared on .

]]>