Amazon Prime Video https://www.91mobiles.com/tamil Wed, 02 Aug 2023 13:30:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2023 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைமில் வெளியான நேரடி தமிழ் படங்கள் https://www.91mobiles.com/tamil/list-of-tamil-movies-released-in-prime-video-in-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-tamil-movies-released-in-prime-video-in-2023 Wed, 02 Aug 2023 13:30:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9823 இந்தியாவில் மிகப்பெரிய OTT தளங்களில் ஒன்று அமேசான் ப்ரைம் வீடியோ. இது இந்த ஆண்டு தமிழிலும் சில படங்களை வெளியிட்டு இருக்கிறது. ’பத்து தல’ போன்ற சில படங்களை குறிப்பிட்ட நாளில் மட்டும் (Premiere) ஒளிபரப்பியது. இது தவிர இந்த ஆண்டு வெளியான படங்களில்  ‘பொம்மை’ போன்ற சில படங்கள் வாடகைக்கு மட்டும் கிடைக்கின்றன. இவை தவிர்த்து சந்தா செலுத்தி பார்க்கும்படி இருக்கும் படங்களில் இந்த 2023 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைமில் வெளியான நேரடி தமிழ் […]

The post 2023 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைமில் வெளியான நேரடி தமிழ் படங்கள் first appeared on .

]]>

இந்தியாவில் மிகப்பெரிய OTT தளங்களில் ஒன்று அமேசான் ப்ரைம் வீடியோ. இது இந்த ஆண்டு தமிழிலும் சில படங்களை வெளியிட்டு இருக்கிறது. ’பத்து தல’ போன்ற சில படங்களை குறிப்பிட்ட நாளில் மட்டும் (Premiere) ஒளிபரப்பியது. இது தவிர இந்த ஆண்டு வெளியான படங்களில்  ‘பொம்மை’ போன்ற சில படங்கள் வாடகைக்கு மட்டும் கிடைக்கின்றன. இவை தவிர்த்து சந்தா செலுத்தி பார்க்கும்படி இருக்கும் படங்களில் இந்த 2023 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைமில் வெளியான நேரடி தமிழ் படங்களில் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இவற்றில் சில மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வெற்றி பெற்ற படங்கள் உள்ளன. சில படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சுமாரான வரவேற்பை பெற்றது உண்டு. பெரிய அளவில் கவனம் ஈர்க்காத படங்களும் இதில் உள்ளன.

 

2023 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைமில் வெளியான நேரடி தமிழ் படங்கள்

 

  • பொன்னியின் செல்வன் 2
  • வாரிசு
  • டாடா
  • எறும்பு
  • பாயும் ஒளி நீயெனக்கு
  • ரெஜினா
  • கழுவேத்தி மூர்க்கன்
  • தெய்வ மச்சான்
  • கஸ்டடி
  • வீரன்
  • தண்டட்டி

 

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு இருந்த அளவிலான எதிர்பார்ப்பு இந்த இரண்டாம் பாகத்துக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பலரால் பார்க்கப்பட்டு வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெற்றது.

 

வாரிசு

வாரிசு படம் சீரியல் போன்று உள்ளது என்ற விமர்சனத்தைத் தாண்டி நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. குடும்பத்தோடு வந்து மக்கள் பார்த்தது இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக இருந்தது.

 

டாடா

இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்ற படங்களில் ஒன்று ‘டாடா’. இத்தனைக்கும் இதில் பிரபலமான நடிகர்கள் யாரும் இல்லை. இயக்குனரும் புதியவர். 4 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சுமார் 20 கோடிக்கும் மேல் வசூலித்தது.

 

கஸ்டடி

இது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ஒரு திரைப்படம் என்று சொன்னால், பெரும்பாலானோர் ஏற்க மறுப்பார்கள். இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதா? என்று கேட்பவர்களும் உண்டு. அப்படி ஒரு படம் தான் கஸ்டடி. இதில் அரவிந்த்சாமி, நாக சைதன்யா, சரத்குமார் போன்ற பெருந்தலைகள் நடித்திருந்தனர். இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

 

இவை தவிர ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’,  விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீயெனக்கு, பசுபதியின் நடிப்பில் ‘ தண்டட்டி’, விமல் நடிப்பில் ‘ தெய்வ மச்சான்’, சுனைனா நடிப்பில் ‘ரெஜினா’ போன்ற படங்களும் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த வருடத்தில் வெளியாகி பார்க்கக் கிடைக்கின்றன.

The post 2023 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைமில் வெளியான நேரடி தமிழ் படங்கள் first appeared on .

]]>