android 13 https://www.91mobiles.com/tamil Tue, 06 Dec 2022 09:15:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5 மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் – நோக்கியா அதிரடி! https://www.91mobiles.com/tamil/nokia-s-5-phones-will-get-android-13-os-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nokia-s-5-phones-will-get-android-13-os-update Tue, 06 Dec 2022 09:15:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4113 நோக்கியா ஒரே நேரத்தில் தனது 5 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை வழங்க இருக்கிறது. நோக்கியாவின் இந்த அறிவிப்பு கேட்டு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்திய மொபைல் பிராண்டுகள் கூட கொஞ்சம் அதிர்ச்சி ஆகி இருக்கலாம்! நோக்கியாவிற்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இருந்தாலும் கூட சீன ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்தால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆனது இருக்கும் இடம் தெரியாமல் உள்ளன! இன்னும் சொல்லப்போனால் நோக்கியாவில் ஸ்மார்ட்போன்கள் வருகிறதா என்று கேட்கும் அளவிற்குத் தான் அதன் […]

The post 5 மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் – நோக்கியா அதிரடி! first appeared on .

]]>

நோக்கியா ஒரே நேரத்தில் தனது 5 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை வழங்க இருக்கிறது. நோக்கியாவின் இந்த அறிவிப்பு கேட்டு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்திய மொபைல் பிராண்டுகள் கூட கொஞ்சம் அதிர்ச்சி ஆகி இருக்கலாம்!

நோக்கியாவிற்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இருந்தாலும் கூட சீன ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்தால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆனது இருக்கும் இடம் தெரியாமல் உள்ளன! இன்னும் சொல்லப்போனால் நோக்கியாவில் ஸ்மார்ட்போன்கள் வருகிறதா என்று கேட்கும் அளவிற்குத் தான் அதன் நிலை இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும் என்றால், நோக்கியா என்கிற பிராண்டுக்கு மக்களின் அன்பு மட்டும் போதாது; அவர்களின் நம்பிக்கையும் வேண்டும்! அதாவது நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மீது பணம் செலவழிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்! அப்படியான நம்பிக்கையை (மீண்டும்) பெறும் நோக்கத்தின் கீழ், நோக்கியா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை நோக்கியாவின் உண்மையான கம்பேக் (Comeback) என்றே கூறலாம்!

5 ஸ்மார்ட்போன்கள்!

நோக்கியா நிறுவனம் அதன் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டு, அவைகள் அனைத்துமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை (Android 13 OS Update) பெறும் என்று அறிவித்துள்ளது. நோக்கியாவின் இந்த அறிவிப்பானது, லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டின் அம்சங்களை அனுபவிக்க விரும்பும் நோக்கியா ரசிகர்களுக்கான ஒரு குட் நியூஸ் ஆகும். கூடவே சீன நிறுவனங்களுக்கான ஒரு பேட் நியூஸும் ஆகும்!

நோக்கியாவின் இந்த அறிவிப்பு, நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களின் மீதான மதிப்பை அதிகரிக்கும். ஏனென்றால் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின்களை வழங்கும் சீன ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது நோக்கியா வழங்கும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் ஆனது, தன் பயனர்களுக்கு நியர்-ஸ்டாக் எக்ஸ்பீரியன்ஸை (Near stock experience) வழங்கும். இதன் விளைவாக, நோக்கியா குறிப்பிட்டுள்ள 5 ஸ்மார்ட்போன்களின் விற்பனை தானாக அதிகரிக்கும்!

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டிற்கு தகுதியான 5 நோக்கியா போன்களின் பட்டியல் இதோ:

01. நோக்கியா எக்ஸ்ஆர்20 (NOKIA XR20)

02. நோக்கியா எக்ஸ்20 (NOKIA X20)

03. நோக்கியா எக்ஸ்10 (NOKIA X10)

04. நோக்கியா ஜி50 (NOKIA G50)

05. நோக்கியா ஜி11 பிளஸ் (NOKIA G11 Plus)

மேலும் 3 போன்கள்!

நோக்கியா நிறுவனத்தால் பட்டியலிடப்பட்ட 5 ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, நோக்கியா சி31 (NOKIA C31), நோக்கியா ஜி60 5ஜி (NOKIA G60 5G) மற்றும் நோக்கியா எக்ஸ்30 5ஜி (NOKIA X30 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களும் கூட ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட 3 ஸ்மார்ட்போன்களும் நோக்கியா மொபைல் வெளியிட்ட பட்டியலில் இடம்பெறாமல் போனதற்கு காரணம் – அவைகள் இன்னும் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. அதாவது, பட்டியலில் நாம் பார்த்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆனது சீனாவில் மட்டுமே ஓஎஸ் அப்டேட்டை பெறவுள்ளன. அதே அப்டேட், இந்தியாவிற்கு எப்போது வரும் என்கிற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

The post 5 மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் – நோக்கியா அதிரடி! first appeared on .

]]>
ஒன்ப்ளஸ் 8 சீரிஸ்க்கும் வந்தாச்சு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்! https://www.91mobiles.com/tamil/oneplus-8-series-smartphone-gets-android-13-based-oxygen-os-13-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-8-series-smartphone-gets-android-13-based-oxygen-os-13-update Thu, 17 Nov 2022 12:20:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3699 OnePlus 8 சீரிஸ் இல் OnePlus 8, OnePlus 8 Pro மற்றும் OnePlus 8T ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13க்கான அப்டேட்டை பெறத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோக்கான ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OxygenOS 13க்கான அப்டேட்டை செப்டம்பர் மாதம் வெளியிடத் தொடங்கியது. இதே அப்டேட் ஒன்பிளஸ் 9 சீரிஸ்க்கு நவம்பர் மாதம் கிடைக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ஒன்பிளஸ் 8 சீரிஸ்-க்கு […]

The post ஒன்ப்ளஸ் 8 சீரிஸ்க்கும் வந்தாச்சு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்! first appeared on .

]]>

OnePlus 8 சீரிஸ் இல் OnePlus 8, OnePlus 8 Pro மற்றும் OnePlus 8T ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13க்கான அப்டேட்டை பெறத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோக்கான ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OxygenOS 13க்கான அப்டேட்டை செப்டம்பர் மாதம் வெளியிடத் தொடங்கியது. இதே அப்டேட் ஒன்பிளஸ் 9 சீரிஸ்க்கு நவம்பர் மாதம் கிடைக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ஒன்பிளஸ் 8 சீரிஸ்-க்கு அப்டேட் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

8 சீரிஸ் OnePlus

8 சீரிஸ் வைத்திருக்கும் சீன வாடிக்கையாளர்கள் நிலையான கலர் ஓஎஸ்13க்கான அப்டேட்டை பெறத் தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் உலகளாவிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் பயனர்களுக்கும் OxygenOS 13க்கான அப்டேட்டை பெறத் தொடங்கி உள்ளனர்.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 அப்டேட்

ITHome இன் அறிக்கையின்படி, தற்போது கிடைக்கும் ஆண்ட்ராய்ட் 13 அடிப்படையிலான அப்டேட் அளவு 5.72 ஜிபி ஆக இருக்கிறது. மேலும் ஒன்பிளஸின் “அக்வாமார்பிக்” வடிவமைப்பை ஒன்பிளஸ் 8 தொடருக்கு நிறுவனம் கொண்டு வருகிறது. ஒன்பிளஸ் 8 தொடருக்கான ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 அப்டேட் தற்போது சர்வதேச பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது என XDA தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் ColorOS 13 ஆனது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ மூலம் ஆகஸ்ட் 30 அன்று ஒப்போ டெவலப்பர் மாநாட்டின் 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டது. OxygenOS 13 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 உடன் OnePlus 10 Pro செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அப்டேட்டில் என்ன கிடைக்கும்?

ரியல் லைப்லைக் அனிமேஷன்கள், ஆப்டிமைஸ்ட் ஃபான்ட், அழகியல் இணைப்பு, கனெக்டிவிட்டி, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, உடல்நலம் மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு, செயல்திறன் மற்றும் கேமிங் தொடர்பான பல்வேறு மேம்படுத்தல்கள் இந்த அப்டேட்டில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சிஸ்டம் அப்டேட்

OnePlus 8 சீரிஸ் வைத்திருக்கும் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைத்துள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலும் இந்த அப்டேட்டின் அளவு 5ஜிபிக்கும் மேல் இருக்கும் காரணத்தால் டேட்டாவை மிச்சப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியம். OnePlus 8 சீரிஸ் பயனர்கள் செட்டிங்ஸ் > சிஸ்டம் > சிஸ்டம் அப்டேட் என்பதற்குள் சென்று அப்டேட் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

ஒன்பிளஸ் 8 அம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனானது 6.55 அங்குல டிஸ்ப்ளே அளவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவானது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 10 உடன் அறிமுகமான இந்த போன் தற்போது ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் அப்டேட்டைப் பெறத் தொடங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 48 எம்பி பிரதான கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 16 எம்பி செல்ஃபி கேமரா முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 4300 எம்ஏஎச் பேட்டரி இதில் இடம்பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.78 அங்குல டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இதற்கும் வழங்கப்பட்டுள்ளது. 48 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 48 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 எம்பி கேமரா என நான்கு கேமராக்கள் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது. இதில் 4510 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

OnePlus 8 சீரிஸ் பயனர்கள் செட்டிங்ஸ் > சிஸ்டம் > சிஸ்டம் அப்டேட் என்பதற்குள் சென்று அப்டேட் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

The post ஒன்ப்ளஸ் 8 சீரிஸ்க்கும் வந்தாச்சு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்! first appeared on .

]]>
ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெற இருக்கும் 35 போன்கள் https://www.91mobiles.com/tamil/are-you-using-one-of-these-18-vivo-phones-then-you-will-get-latest-android-13-os-update-within-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=are-you-using-one-of-these-18-vivo-phones-then-you-will-get-latest-android-13-os-update-within-2022 Thu, 27 Oct 2022 06:57:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3258 விவோ மொபைல்களில் 35 போன்கள் மட்டுமே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை (Android 13 OS Update) பெற இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 18 மொபைல்கள் மட்டும் தான் இந்த வருடமே ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெறும். அவை எந்தெந்த மொபைல்கள் என்று பார்க்கலாம். விவோ நிறுவனம் சமீபத்தில் தான் அதன் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட FunTouch OS 13-ஐ அறிவித்தது. உலகளவில் கிடைக்கும் அனைத்து விவோ ஸ்மார்ட்போன்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய […]

The post ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெற இருக்கும் 35 போன்கள் first appeared on .

]]>

விவோ மொபைல்களில் 35 போன்கள் மட்டுமே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை (Android 13 OS Update) பெற இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 18 மொபைல்கள் மட்டும் தான் இந்த வருடமே ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெறும். அவை எந்தெந்த மொபைல்கள் என்று பார்க்கலாம்.

விவோ நிறுவனம் சமீபத்தில் தான் அதன் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட FunTouch OS 13-ஐ அறிவித்தது. உலகளவில் கிடைக்கும் அனைத்து விவோ ஸ்மார்ட்போன்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய FunTouch ஓஎஸ் 13 ஆனது – புதிய டிசைன், சிறந்த ப்ரைவஸி மற்றும் கஸ்டமைசேஷன் விருப்பங்கள் மற்றும் பலவற்றையும் கொண்டு வர உள்ளது.

2022ல் அப்டேட் பெறும் 18 போன்கள்

முதற்கட்டமாக மொத்தம் 18 விவோ ஸ்மார்ட்போன்களுக்கு – இந்த 2022 ஆம் ஆண்டிலேயே – ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பீட்டா அப்டேட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2022-இல் கீழ்கண்ட் போன்கள் அப்டேட்-ஐ பெறவுள்ளன

01. விவோ X80
02. விவோ X70 Pro+
03. விவோ X70 Pro
04. விவோ V25 Pro
05. விவோ V25
06. விவோ V23 Pro
07. விவோ V23 5G
08. விவோ V23e
09. விவோ V23e 5G
10. விவோT1 Pro 5G
11. விவோ Y1 5G
12. விவோ Y75 5G
13. விவோ Y35
14. விவோ Y22
15. விவோ Y22s

டிசம்பர் 2022-இல் அப்டேட்-ஐ பெறவுள்ள விவோ ஸ்மார்ட்போன்கள்

16. விவோ X60 Pro+
17. விவோ X60 Pro
18. விவோ X60

2023-இல் அப்டேட்டை பெறவுள்ள விவோ மாடல்கள்

19. விவோ V21 5G
20. விவோ V21e
21. விவோ V20 Pro
22. விவோ V20
23. விவோ V20 2021
24. விவோ Y75
25. விவோ Y73

பட்டியலில் கடைசியாக உள்ள 10 மாடல்கள்!

26. விவோ Y72 5G
27. விவோ Y53s
28. விவோ Y21s
29. விவோ Y33s
30. விவோ Y21T
31. விவோ Y33T
32. விவோ T1x
33. விவோ Y51A
34. விவோ Y31
35. விவோ Y20T

ஒருவேளை நீங்கள் விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Vivo X80 Pro-வை பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. நாம் மேற்கண்ட பட்டியலில் அது இருக்காது! ஏனென்றால் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனில், புதிய FunTouch OS 13 அப்டேட் ஏற்கனவே வந்து விட்டது!

The post ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெற இருக்கும் 35 போன்கள் first appeared on .

]]>
ரியல்மி போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் எப்போது? – முழு விவரம் https://www.91mobiles.com/tamil/list-of-realme-smartphones-eligible-for-android-13-os-update-in-2022-and-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-realme-smartphones-eligible-for-android-13-os-update-in-2022-and-2023 Tue, 20 Sep 2022 09:58:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2460 ரியல்மி (Realme) நிறுவனமானது, கிட்டத்தட்ட அதன் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை வெளியிட இருக்கிறது. அதற்கான ஆண்ட்ராய்டு 13 ரோட்மேப்பையும் (Android 13 Roadmap) ரியல்மி வெளியிட்டுள்ளது. அதாவது எந்தெந்த ரியல்மி போன்களுக்கு எப்போது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்கிற முழு பட்டியலும் வெளியாகி உள்ளது! ரியல்மியின் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ரோட்மேப்பின்படி (Realme Android 13 OS Roadmap), இந்த 2022 செப்டம்பர் மாதம் தொடங்கி, அடுத்த 2023 ஆம் […]

The post ரியல்மி போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் எப்போது? – முழு விவரம் first appeared on .

]]>

ரியல்மி (Realme) நிறுவனமானது, கிட்டத்தட்ட அதன் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை வெளியிட இருக்கிறது. அதற்கான ஆண்ட்ராய்டு 13 ரோட்மேப்பையும் (Android 13 Roadmap) ரியல்மி வெளியிட்டுள்ளது. அதாவது எந்தெந்த ரியல்மி போன்களுக்கு எப்போது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்கிற முழு பட்டியலும் வெளியாகி உள்ளது!

ரியல்மியின் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ரோட்மேப்பின்படி (Realme Android 13 OS Roadmap), இந்த 2022 செப்டம்பர் மாதம் தொடங்கி, அடுத்த 2023 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டு வரை பெரும்பாலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டை பெற இருக்கின்றன.

இந்த மாதமே 13 ஓஎஸ்-ஐ பெறும் 3 ரியல்மி போன்கள்!

ரியல்மி நிறுவனத்தின் பட்டியல்படி, Realme GT Neo 3 150W, Realme GT Neo 3 மற்றும் Realme GT 2 ஆகியவைகள், இந்த 2022 செப்டம்பர் மாதமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ பெறும் ரியல்மி முதல் மூன்று ஸ்மார்ட்போன்களாக இருக்கும்.

அக்டோபர் 2022-இல்..

ரியல்மி ஜிடி3 நியோ 3டி
ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி
ரியல்மி 9 ப்ரோ 5ஜி
ரியல்மி 9ஐ 5ஜி

நவம்பர் 2022-இல்..

ரியல்மி ஜிடி
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி
ரியல்மி நார்சோ 50 5ஜி

டிசம்பர் 2022-இல்..

ரியல்மி ஜிடி நியோ 5ஜி
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ்
ரியல்மி 8 5ஜி
ரியல்மி நார்சோ 30 5ஜி

2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில்..

ரியல்மி 9 5ஜி
ரியல்மி 9 4ஜி
ரியல்மி 9ஐ 4ஜி
ரியல்மி 8எஸ் 5ஜி
ரியல்மி 8 ப்ரோ 5ஜி
ரியல்மி 9 5ஜி ஸ்பீட் எடிஷன்
ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில்..

ரியல்மி 8 4ஜி
ரியல்மி 8ஐ
ரியல்மி நார்சோ 50

2023 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில்..

ரியல்மி சி35
ரியல்மி சி31
ரியல்மி சி30
ரியல்மி சி33
ரியல்மி நார்சோ 50ஏ ப்ரைம்
ரியல்மி நார்சோ 50ஐ ப்ரைம்

ஒருவேளை நீங்கள் Early Application Access-ஐ பெற வேண்டும் என்றால் கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

  • முதலில் உங்கள் ரியல்மி ஸ்மார்ட்போனில் 60% க்கும் மேலான பேட்டரி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
  • பின்னர் RMX3301_11.A.16/ RMX3301_11.A.17 என்கிற UI வெர்ஷனுக்கு உங்கள் போனை அப்டேட் செய்யவும்.
  • இப்போது Software Update Application channel வழியாக ஆரம்ப அணுகலுக்கு (Early Access) விண்ணப்பிக்கவும்
  • அதாவது Settings > Software Update > பின்னர் மேல் வலது மூலையில் உள்ள Settings ஐகானை கிளிக் செய்து >Trial Version > Apply Now > உங்கள் விவரங்களை சமர்ப்பித்து Quiz-ஐ முடிக்கவும்; அவ்வளவு தான்!

The post ரியல்மி போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் எப்போது? – முழு விவரம் first appeared on .

]]>
வெளியானது கூகுளின் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13! https://www.91mobiles.com/tamil/google-rolls-out-android-13-os-version-in-pixel-very-soon-update-for-rest-phones/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-rolls-out-android-13-os-version-in-pixel-very-soon-update-for-rest-phones Thu, 18 Aug 2022 04:50:02 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1683 கூகுளின் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13 பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து போன்களும் இந்த புதிய ஆண்ட்ராய்டு 13 பதிப்பை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இந்த புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை மேம்பட்ட பிரைவசி பாதுகாப்புடன் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் மொழித் தேர்வு அம்சமும் அடங்குமாம். இப்போதைக்கு இது பிக்சல் போன் பயனர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட சாம்சங் […]

The post வெளியானது கூகுளின் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13! first appeared on .

]]>

கூகுளின் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13 பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து போன்களும் இந்த புதிய ஆண்ட்ராய்டு 13 பதிப்பை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் இந்த புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை மேம்பட்ட பிரைவசி பாதுகாப்புடன் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் மொழித் தேர்வு அம்சமும் அடங்குமாம். இப்போதைக்கு இது பிக்சல் போன் பயனர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட சாம்சங் கேலக்ஸி, நோக்கியா, iQOO, மோட்டோரோலா, ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி, ஷார்ப், சோனி, டெக்னோ, விவோ, சியோமி மற்றும் பிற நிறுவங்களுக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த புதிய பதிப்பின் அப்டேட் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பிரைவசி உடன் புதிய அம்சங்களை உள்ளடக்கி உள்ள ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் குறித்து பிளாக் பதிவு ஒன்றில் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே புராடக்ட் மேனேஜ்மேண்ட் பிரிவின் துணைத் தலைவர் அமீர் சமத் உறுதி செய்துள்ளார்.

இந்த புதிய வெர்ஷனில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் மொழியை பிரத்யேகமானதாக செட் செய்து கொள்ளும் வசதி உள்ளதாம். இதற்கு முன்னர் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் ஒரே மொழி என்ற பயன்பாடு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா போன்ற பல்வேறு மொழி பேசும் மக்கள் தங்களது தாய்மொழியிலேயே தங்களது போனை இயக்கலாம் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதில் எத்தனை மொழிக்கான ஆதரவு இருக்கும் என்பதும், இது தவிர வேறு எந்த விதமான புதிய அம்சங்களை இந்த ஆண்ட்ராய்டு 13 பதிப்பு கொண்டு இருக்கும் என்பது தெரிவிக்கப்பட வில்லை. அதை விரைவில் கூகுள் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

கூகுளின் பிக்சல் 4 (XL), பிக்சல் 4a, பிக்சல் 4a (5G), பிக்சல் 5, பிக்சல் 5a (5G), பிக்சல் 6, பிக்சல் 6 புரோ போன்ற பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் அப்டேட் கிடைக்கிறது.

The post வெளியானது கூகுளின் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13! first appeared on .

]]>