ar rahman https://www.91mobiles.com/tamil Tue, 22 Nov 2022 07:32:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சிம்புவின் படம் வெளியாவதில் சிக்கல் https://www.91mobiles.com/tamil/problem-in-relese-of-simbu-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=problem-in-relese-of-simbu-movie Tue, 22 Nov 2022 08:47:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3806 சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. நடிகர் சிம்புவின் மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த படங்களில் ஒன்றாக மாறிய நிலையில், மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கதைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் உடல் இளைத்து 20வயது இளைஞன் போல வித்தியாசமாக காணப்பட்டார் சிம்பு. இந்தப் படமும் சிம்புவிற்கு மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. மாநாடு, […]

The post சிம்புவின் படம் வெளியாவதில் சிக்கல் first appeared on .

]]>

சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. நடிகர் சிம்புவின் மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த படங்களில் ஒன்றாக மாறிய நிலையில், மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கதைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் உடல் இளைத்து 20வயது இளைஞன் போல வித்தியாசமாக காணப்பட்டார் சிம்பு. இந்தப் படமும் சிம்புவிற்கு மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன மஃப்ட்டி படத்தின் ரீமேக் தான் இப்படம். நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக வெளியான மஃப்ட்டி படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தார்.

இந்த படம் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றதை அடுத்து, இப்படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்பு, இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிம்பு ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையாக முடிவடையாததால் அடுத்த மாதம் படம் வெளியாவது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பொங்கலுக்கு விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு போன்ற படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரலாறு முக்கியம் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையும் படியுங்கள்: விஜய் ஆண்டனி வெளியிட்ட மா.கா.பா.ஆனந்த்-ஆர்.ஜே.விஜய் பாடல் அதன்படி, வரலாறு முக்கியம் திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

The post சிம்புவின் படம் வெளியாவதில் சிக்கல் first appeared on .

]]>
A.R. Rahman இசையில் வெளியானது செஸ் ஒலிம்பியாட் பாடல் https://www.91mobiles.com/tamil/chess-olympiad-anthem-released/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=chess-olympiad-anthem-released Fri, 22 Jul 2022 10:58:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1039 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை […]

The post A.R. Rahman இசையில் வெளியானது செஸ் ஒலிம்பியாட் பாடல் first appeared on .

]]>

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான வரவேற்பு பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post A.R. Rahman இசையில் வெளியானது செஸ் ஒலிம்பியாட் பாடல் first appeared on .

]]>