asus rog phone 7 https://www.91mobiles.com/tamil Thu, 13 Apr 2023 13:24:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB ரேம், 50MP முதன்மை கேமராவோடு வெளியானது Asus ROG Phone 7 https://www.91mobiles.com/tamil/asus-rog-phone-7-cameout-with-snapdragon-8-gen-2-chipset/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=asus-rog-phone-7-cameout-with-snapdragon-8-gen-2-chipset Thu, 13 Apr 2023 12:19:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7536   ரக்டு பாய்ஸ்க்கு ஏற்ற ஒரு ரக்டு போனாக வெளியாகி இருக்கிறது Asus ROG Phone 7. இதில் Snapdragon 8 Gen 2 ப்ராஸசர், 16GB ரேம், 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ் என எல்லா அம்சங்களிலும் அதிகபட்சத்தைக் கொண்ட போனாக இது வெளியாகி இருக்கிறது. கேமரா என எடுத்துக் கொண்டாலும், பின்பக்கத்தில் 50MP சென்சார் உட்பட மூன்று கேமராக்களையும், முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த ROG Phone 7. இதன் தோற்றமும் மற்ற […]

The post Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB ரேம், 50MP முதன்மை கேமராவோடு வெளியானது Asus ROG Phone 7 first appeared on .

]]>

Highlights

  • Asus ROG Phone 7 மொபைல் Snapdragon 8 Gen 2 ப்ராஸசருடன் வெளியாகி உள்ளது
  • இதில் 16GB ரேம், 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி உள்ளன.
  • விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களோடு வெளியாகி உள்ளது

 

ரக்டு பாய்ஸ்க்கு ஏற்ற ஒரு ரக்டு போனாக வெளியாகி இருக்கிறது Asus ROG Phone 7. இதில் Snapdragon 8 Gen 2 ப்ராஸசர், 16GB ரேம், 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ் என எல்லா அம்சங்களிலும் அதிகபட்சத்தைக் கொண்ட போனாக இது வெளியாகி இருக்கிறது. கேமரா என எடுத்துக் கொண்டாலும், பின்பக்கத்தில் 50MP சென்சார் உட்பட மூன்று கேமராக்களையும், முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த ROG Phone 7. இதன் தோற்றமும் மற்ற போன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு கேம் பிரியர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இனி, இதன் அம்சங்களை விரிவாகப்பார்க்கலாம்.

 

டிஸ்ப்ளே

Asus ROG Phone 7 மொபைலில் 165Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 அங்குல AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது 1080×2448 பிக்சல் அடர்த்தியும், அதிகபட்சமாக 1500 Nits பிரகாசத்தையும் கொண்ட HDR10+ டிஸ்ப்ளேவாக வெளிவந்துள்ளது. இது விளையாடும் போது சிறப்பான அனுபவத்தைத தரும்.

சிப்செட்

இந்த மொபைலின் சிறப்பம்சமாக இதன் சிப்செட்டை சொல்லலாம். இதில் லேட்டஸ்ட் ஃப்ளாக்‌ஷிப் சிப்செட்டான Snapdragon 8 Gen 2 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 4nm அளவில் தயாராகி இருக்கிறது இந்த ஆக்டா கோர் சிப்செட்.

 

கேமரா

இந்த Asus ROG Phone 7 மொபைலின் பின்பக்கத்தில் f/1.9 அப்பசருடைய 50MP முதன்மை கேமராவும், f/2.2 அப்பசருடைய 13MP அல்ட்ரவைடு கேமராவும், f/2.0 அப்பசருடைய 8MP மேக்ரோ கேமராவும் இருக்கின்றன.  இதன் மூலம் 8K வரையிலான வீடியோவை எடுக்க முடியும். அதே போல் முன்பக்கத்தில் f/2.5 அப்பசருடைய 32MP செல்ஃபி கேமரா இருக்கிறது. இதன் மூலம் 1080p வரையிலான வீடியோவை எடுக்க முடியும்.

 

மெமரி & இயங்குதளம்

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த Asus ROG Phone 7 மொபைலில் 16GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய விளையாட்டுகளையும், அதிக செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கும் ‘மல்டி டாஸ்க்’கையும் தடை இன்றி செய்ய முடியும். அதுபோல் இந்த மொபைலில் 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர External Storageக்காக NTFS ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இந்த Asus ROG Phone 7 மொபைலில் 65W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 10W reverse wired சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் இதில் இருக்கும் 6000mAh  பேட்டரியை 42 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து விட முடியும்.  இந்த மொபைல் Phantom Black மற்றும்  Storm White  என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

239கிராம் எடையில் வெளியாகி இருக்கும் இந்த Asus ROG Phone 7 மொபைலில் இரண்டு ஆம்பிளிபயருடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. இது தவிர 24-bit/192kHz சப்போர்ட் செய்யும் 3.5mm ஆடியோ ஜாக், Tri –band Wi-fi, Bluetooth 5.2, GPS, NFC, Type C போன்ற வசதிகள் உள்ளன. Micor SD card ஸ்லாட், FM ரேடியோ ஆகியவை இல்லை. பாதுகாப்புக்கென இதில் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

விலை

  • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ASUS ROG Phone 7 இன் விலை ரூ.74,999.
  • 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ASUS ROG Phone 7 Ultimate ரூ.99,999க்கு கிடைக்கும்.
  • ASUS ROG Phone 7 சீரிஸ் மே 2023 இல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் . சரியான விற்பனை தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

 

The post Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB ரேம், 50MP முதன்மை கேமராவோடு வெளியானது Asus ROG Phone 7 first appeared on .

]]>
ஏப்ரல் 13 அன்று வெளியாகிறது Asus ROG Phone 7 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! https://www.91mobiles.com/tamil/asus_rog_phone_7_is_officially_coming_on_april_13/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=asus_rog_phone_7_is_officially_coming_on_april_13 Fri, 24 Mar 2023 06:08:13 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7043   கடந்த வருட ஜூலை மாதத்தில்  Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஆகிய மொபைல்கள் அறிமுகபடுத்தப்பட்டன, ஆனால் இந்த முறை Asus நிறுவனம் அதன் புதிய கேமிங் போன்களை வெளியிட ஜூலை வரை காத்திருக்கவில்லை. அதற்கு பதிலாக, ROG ஃபோன் 7 சீரிஸ் ஏப்ரல் 13 அன்று ஒரு நிகழ்வில் வெளியிடப்பட இருக்கிறது.  இதனி ROG இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் கீழே பகிரப்பட்ட செய்திகளிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள […]

The post ஏப்ரல் 13 அன்று வெளியாகிறது Asus ROG Phone 7 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! first appeared on .

]]>

Highlights

  • ROG ஃபோன் 7 சீரிஸ் ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட இருக்கிறது.  
  • இந்த மொபைல் மூன்று மாடல்களில் வெளியாக இருக்கிறது.
  • 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,000 mAh பேட்டரியும் உள்ளது

 

கடந்த வருட ஜூலை மாதத்தில்  Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஆகிய மொபைல்கள் அறிமுகபடுத்தப்பட்டன, ஆனால் இந்த முறை Asus நிறுவனம் அதன் புதிய கேமிங் போன்களை வெளியிட ஜூலை வரை காத்திருக்கவில்லை. அதற்கு பதிலாக, ROG ஃபோன் 7 சீரிஸ் ஏப்ரல் 13 அன்று ஒரு நிகழ்வில் வெளியிடப்பட இருக்கிறது.  இதனி ROG இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் கீழே பகிரப்பட்ட செய்திகளிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

ROG-லேண்டில் புதிதாக என்ன இருக்கிறது என்பதைக் காண ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 13 அன்று  இந்த நிகழ்வை நேரலையில் பார்த்து மகிழலாம். இந்த நிகழ்வு முறையே தைபே நேரப்படி இரவு 8 மணிக்கும், பெர்லின் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கும், நியூயார்க் நேரப்படி காலை 8 மணிக்கும் நடைபெறுகிறது.

சிப்செட்

ஒன்றல்ல , இரண்டல்ல, வரவிருக்கும் ஃபோன்(களின்) மூன்று பதிப்புகளின் ப்ரோட்டோடைப்களை கீக்பெஞ்ச் ஆன்லைன் தரவுத்தளத்தில் பார்த்திருக்கிறோம் . ஆச்சரியமாக இந்த மூன்று மாடல்களும் Snapdragon 8 Gen 2 chipset-ஐ கொண்டு இருக்கிறது. இந்த சிப்செட் அதிகபட்ச க்ளாக்ஸ்பீடான 3.19GHz-ஐ கொண்டுள்ளது. மேலும் ஒரு முதன்மை கோர், நான்கு பெர்ஃபாமென்ஸ் கோர்கள் மற்றும் மூன்று எபிசியன்சி கோர்களைக் கொண்டுள்ளது. இந்த CPU ஆனது Adreno 740 GPU மற்றும் 16GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனாது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. ASUS ROG Phone 7 ஆனது, மேலே உள்ள ஹார்டுவேருடன், சிங்கிள் கோர் சோதனையில் 1,958 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 5,238 புள்ளிகளையும் பெற முடிந்தது. இந்திய பதிப்பு AI2205_C  என்னும் மாடல் எண்ணுடன் வருகிறது.

ரேம்

அதுபோல் மூன்று மாடல்களிலும்  16ஜிபி ரேம் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.. இதற்கு 18ஜிபியுடன் குறைந்தபட்சம் ஒரு மாடல்கூட இருக்காது என்று அர்த்தமில்லை. இருக்க வாய்ப்புள்ளது. அதுபோல்  256ஜிபி வரை சேமிப்புத்திறனைக் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

டிஸ்ப்ளே

இதுவரை வெளியான வதந்திகளின்படி, ROG Phone 7 ஆனது 6.8 அங்குல FHD+ 165 Hz ரிஃப்ரெஷ் ரேட் உடைய AMOLED தொடுதிரையுடன் கூடியப் டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும். அதுபோல் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,000 mAh அளவிலான பெரிய பேட்டரியையும் கூடவே  அதற்கான சார்ஜரோடும் வெளியாகும்.

கேமரா

இந்த Asus ROG Phone 7 மொபைலில் 64மெகா பிக்சலுக்கான முதன்மை கேமரா இருக்கும் எனத் தெரிகிறது. அதுபோல் இந்த மொபைல் மூலம் 8K வீடியோ எடுக்கலாம் என்றும் வதந்திகள் வெளியாகி இருக்கின்றன.

 

கூலிங் சிஸ்டம்

இது பெரிய மொபைல் விளையாட்டுகளை விளையாடுபவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட போன் ஆகும். அதிக நேரம் அல்லது பெரிய விளையாட்டுகளை விளையாடும் போது மொபைல் சூடாவது வழக்கம். அதனைத் தடுத்து மொபைலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க சிறப்பு குளிரூட்டும் ஹார்டுவேரோடு இந்த மொபைல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post ஏப்ரல் 13 அன்று வெளியாகிறது Asus ROG Phone 7 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! first appeared on .

]]>
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது ASUS ROG போன் 7 மொபைலின் இந்திய பதிப்பு https://www.91mobiles.com/tamil/asus-rog-phone-7-india-variant-specifications-geekbench/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=asus-rog-phone-7-india-variant-specifications-geekbench Wed, 15 Mar 2023 09:36:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6895   ASUS ROG Phone 7 மொபைலின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, ASUS ROG Phone 7 மொபைலின் கீக்பென்ச் (Geekbench) பட்டியலை பிரத்தியேகமாக அணுகியுள்ளோம். பட்டியலிடப்பட்ட இந்த மொபைல் முந்தைய கசிவுகளின்படி இந்திய பதிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மொபைலானது  ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி ரேம் உடன் வெளிவர இருக்கிறது. ASUS ROG Phone 7 மொபைல் ஆண்ட்ராய்டு 13 மொபைல் […]

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது ASUS ROG போன் 7 மொபைலின் இந்திய பதிப்பு first appeared on .

]]>

Highlights

  • ASUS ROG Phone 7 உலகளாவிய பதிப்பு தரப்படுத்தல் தளத்தில் காணக் கிடைக்கிறது
  • இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது.
  • இந்த மொபைல் 2023 ஆம் ஆண்டின் Q3 இல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

ASUS ROG Phone 7 மொபைலின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, ASUS ROG Phone 7 மொபைலின் கீக்பென்ச் (Geekbench) பட்டியலை பிரத்தியேகமாக அணுகியுள்ளோம். பட்டியலிடப்பட்ட இந்த மொபைல் முந்தைய கசிவுகளின்படி இந்திய பதிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மொபைலானது  ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி ரேம் உடன் வெளிவர இருக்கிறது. ASUS ROG Phone 7 மொபைல் ஆண்ட்ராய்டு 13 மொபைல் OS இல் இயங்குவதாகவும் தெரிகிறது.

 

 கீக்பெஞ்சில் ASUS ROG PHONE 7

வெளியான தகவலின் படி வரவிருக்கும் ASUS ROG ஃபோன் 7 ஆனது ” ARM இம்ப்ளிமெண்டர் 65 ஆர்கிடெக்சர் 8 வேரியண்ட் 1 பகுதி 3406 வெர்ஷன் 0″வோடு வரும் ஒரு CPU இல் இயங்குகிறது.இதன் மூலம் இதில் குவால்காமில் இருந்து வெளியாகும் உயர்தர Snapdragon 8 Gen 2 சிப்செட் இருப்பது உறுதியாகிறது.இந்த சிப்செட் அதிகபட்ச க்ளாக்ஸ்பீடான 3.19GHz-ஐ கொண்டுள்ளது. மேலும் ஒரு முதன்மை கோர், நான்கு பெர்ஃபாமென்ஸ் கோர்கள் மற்றும் மூன்று எபிசியன்சி கோர்களைக் கொண்டுள்ளது. இந்த CPU ஆனது Adreno 740 GPU மற்றும் 16GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனாது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது.

ASUS ROG Phone 7 ஆனது, மேலே உள்ள ஹார்டுவேருடன், சிங்கிள் கோர் சோதனையில் 1,958 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 5,238 புள்ளிகளையும் பெற முடிந்தது. இந்திய பதிப்பு AI2205_C  என்னும் மாடல் எண்ணுடன் வருகிறது. அதேசமயம் கீக்பெஞ்சில் சமீபத்தில் காணப்பட்ட உலகளாவிய பதிப்பு AI2205_A மாடல் எண்ணைக் கொண்டிருந்தது. ASUS ROG ஃபோன் 7 இன் உலகளாவிய பதிப்பும் சிங்கிள் கோர் ஸ்கோர் 2,022 புள்ளிகள் மற்றும் மல்டி-கோர் ஸ்கோர் 5,719 புள்ளிகளுடன் சற்று சிறப்பாக செயல்பட்டது.

 

ASUS ROG ஃபோன் 7 (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

ASUS ROG ஃபோன் 7 ஆனது Snapdragon 8 Gen 2 SoC, 16ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. ASUS ROG Phone 7 ஆனது 165Hz புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED திரையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க சிறப்பு குளிரூட்டும் ஹார்டுவேரோடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்துள்ள சமீபத்திய சான்றிதழ் ஆவணங்களின்படி சீன பதிப்பு 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Asus ROG ஃபோன் 7 முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – குவால்காம் ஸ்நாப்டிராகன் 8 ஜென் 2
  • ரேம் – 16 ஜிபி
  • திரை – 6.85 அங்குலம் (17.4 செமீ)
  • பின் கேமரா – 64 எம்பி + 12 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
  • செல்ஃபி கேமரா – 32 எம்.பி
  • பேட்டரி – 6100 mAh

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது ASUS ROG போன் 7 மொபைலின் இந்திய பதிப்பு first appeared on .

]]>