ather 450x Gen3 https://www.91mobiles.com/tamil Tue, 13 Dec 2022 09:36:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! https://www.91mobiles.com/tamil/best-electric-scooter-in-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-electric-scooter-in-2022 Tue, 13 Dec 2022 09:36:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4264 இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு ஏகப்பட்ட எலக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகமாகிவிட்டது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் பல முக்கியமான ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன. இந்தாண்டு அறிமுகமான டாப் 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம். குறைந்த விலையில், பலவிதமான நிறுவங்களின் பல ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், திறன், மைலேஜ், விலை, நம்பகத்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 4 சிறந்த ஸ்கூட்டர்களை தெரிவு செய்து இருக்கிறோம். இந்தியாவில் ஸ்கூட்டர் மார்கெட்டிற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. பெண்கள் முதல் நகர்ப் […]

The post 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு ஏகப்பட்ட எலக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகமாகிவிட்டது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் பல முக்கியமான ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன. இந்தாண்டு அறிமுகமான டாப் 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம். குறைந்த விலையில், பலவிதமான நிறுவங்களின் பல ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், திறன், மைலேஜ், விலை, நம்பகத்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 4 சிறந்த ஸ்கூட்டர்களை தெரிவு செய்து இருக்கிறோம்.

இந்தியாவில் ஸ்கூட்டர் மார்கெட்டிற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. பெண்கள் முதல் நகர்ப் பகுதிகளில் வாழும் பலரும் ஸ்கூட்டர்களை தங்கள் தின பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த விரும்புகின்றனர். இதனால் நாளுக்கு நாள் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களைக் கவர பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பிராண்டில் ஸ்கூட்டர்களை களம் இறக்கி வருகின்றனர்.

ஓலா எஸ்1 ஏர்

ஓலா நிறுவனம் குறைந்த விலையில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த தீபாவளி சமயத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் தான் ஓலா எஸ்1 ஏர். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ84,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகி இருந்தாலும் இந்த ஸ்கூட்டருக்கான விற்பனை மற்றும் டெலிவரி துவங்கவில்லை. தற்போது புக்கிங் மட்டுமே நடந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரியையும் 4.5 கிலோ வாட் மோட்டாரையும் கொண்டது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் எக்கோ மோடில் 101 கி.மீ ரேஞ்ச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விடா வி1 இ-ஸ்கூட்டர்

தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரபலமாகி வரும் நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தன் கால் தடத்தைப் பதிக்கும் விதமாக விடா என்ற பிராண்டை அறிமுகப்படுத்தி அதில் வி1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.44 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. முழு சார்ஜில் 165 கி.மீ வரை ரேஞ்ச் கொடுக்கும். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஏகப்பட்ட அம்சங்கள் மற்றும் அதிகமான சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன.

டிவிஎஸ் ஐக்யூப்

டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஐக்யூப் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேஸ், எஸ் மற்றும் எஸ்டி என மொத்தம் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் பவர் மற்றும் ரேஞ்ச் சிறப்பாக இருக்கிறது. விலையும் குறைவாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியன்டான எஸ்டி என்ற வேரியன்ட் முழு சார்ஜில் 145 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மில்டிபிள் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டது.

ஏத்தர் 450 ஜென்3

ஏத்தர் நிறுவனம் 450 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. அதிக நம்பகத்தன்மை வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. இதன் பெர்ஃபாமென்ஸ் மட்டுமல்ல இதன் வடிவமைப்பு மற்றும் பில்டு குவாலிட்டியும் வெகு சிறப்பாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் 3ம் தலைமுறை ஸ்கூட்டர் இந்தாண்டு அறிமுகமானது. இது முந்தைய தலைமுறையைவிட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் ரேஞ்ச், அம்சங்கள், வெளிப்புற தோற்றம், உட்புறம் பயன்படுத்தப்பட்ட பாகங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு செம அப்டேட்டாக இருக்கிறது.

இருசக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் செக்மெண்டை மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிடித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஸ்கூட்டர் என்றாலே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் என்றநிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது.

The post 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
புதிய அப்டேட்களுடன் அறிமுகமானது ஏத்தர் 450X Gen 3 https://www.91mobiles.com/tamil/ather-450x-gen-3-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ather-450x-gen-3-launched-in-india Thu, 21 Jul 2022 12:09:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1018 ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மேம்பட்ட மூன்றாம் தலைமுறை 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஏத்தர் 450X Gen 3 மாடலின் விலை ரூ. 1,56,000, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து ஏத்தர் 450X Gen 2 மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் Gen 2 […]

The post புதிய அப்டேட்களுடன் அறிமுகமானது ஏத்தர் 450X Gen 3 first appeared on .

]]>

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மேம்பட்ட மூன்றாம் தலைமுறை 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஏத்தர் 450X Gen 3 மாடலின் விலை ரூ. 1,56,000, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.

புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து ஏத்தர் 450X Gen 2 மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் Gen 2 மாடலுக்கு மாற்றாக Gen 3 விற்பனைக்கு வர உள்ளன. புதிய ஏத்தர் 450X Gen 3 வினியோகம் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது.

ஏத்தர் 450X Gen 3 மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய Gen 2 மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏத்தர் 450X Gen 3 மாடல் முழு சார்ஜ் செய்தால் 146 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. எனினும், நிஜ பயன்பாட்டில் இந்த மாடல் 105 கி.மீ. வரையிலான ரேன்ஜை வழங்குகிறது. இத்துடன் புது மாடலில் இருமடங்கு பெரிய ரியர் வியூ மிரர்கள், MRF மற்றும் ஏத்தர் இணைந்து உருவாக்கிய புது டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த ஸ்கூட்டரில் உள்ள புது இண்டர்ஃபேஸ் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. முந்தைய மாடலில் 1 ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. புதிய மாடலில் உள்ள அதிக ரேம் காரணமாக டேஷ்போர்டின் கம்ப்யுடிங் வேகம் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் பல்வேறு புது அம்சங்களை வழங்குவதற்கு ஏற்ப இந்த மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ஏத்தர் 450X Gen 3 மாடலின் டிசைன் மற்றும் சேசிஸ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் Gen 2 போலவே வெள்ளை, ஸ்பேஸ் கிரே (Space gray) மற்றும் மிண்ட் கிரீன் (mint green) என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

The post புதிய அப்டேட்களுடன் அறிமுகமானது ஏத்தர் 450X Gen 3 first appeared on .

]]>