auto expo 2023 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:02:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 70 கிமீ டாப் ஸ்பீடு, 110 கிமீ மைலேஜ்! அசத்தும் இந்திய நிறுவனத்தின் இ-பைக்! https://www.91mobiles.com/tamil/evtric-rise-auto-expo-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=evtric-rise-auto-expo-2023 Tue, 17 Jan 2023 05:58:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5057 எவ்ட்ரிக் நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மின்சார பைக்கிற்கு அறிமுகமாக ரூ. 1.6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சதில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.   எவ்ட்ரிக் ரைஸ் இதுவே இந்நிறுவனத்தின் முதல் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் எவ்ட்ரிக் மோட்டார்ஸ், வெறும் […]

The post 70 கிமீ டாப் ஸ்பீடு, 110 கிமீ மைலேஜ்! அசத்தும் இந்திய நிறுவனத்தின் இ-பைக்! first appeared on .

]]>

Highlights

  • இந்திய நிறுவனமான எவ்ட்ரிக், ‘ரைஸ்’ எனும் புதிய மின்சார பைக்கை அறிமுகம் செய்திருக்கின்றது.
  • இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சதில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வரை இருக்கும்.

எவ்ட்ரிக் நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மின்சார பைக்கிற்கு அறிமுகமாக ரூ. 1.6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சதில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

 

எவ்ட்ரிக் ரைஸ்

இதுவே இந்நிறுவனத்தின் முதல் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் எவ்ட்ரிக் மோட்டார்ஸ், வெறும் எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. தற்போது நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எவ்ட்ரிக் ஆக்ஸில், எவ்ட்ரிக் ரைடு மற்றும் எவ்ட்ரிக் மைட்டி ஆகிய மின்சார ஸ்கூட்டர்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இவற்றின் வரிசையில் எவ்ட்ரிக் நிறுவனம் புதிதாக எவ்ட்ரிக் ரைஸ் என்ற பைக்கை விற்பனைக்குச் சேர்த்திருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 மூலம் இந்த இ-பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகளும் தொடங்கியிருக்கிறது. ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

22 மாநிலங்களில்

நிறுவனத்திற்கு நாட்டின் 22 மாநிலங்களில் டச் பாயிண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாயிலாகவே நிறுவனம் அதன் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதிலேயே புதிய எவ்ட்ரிக் ரைஸ் இ-பைக்கும் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இதுமட்டுமின்றி இரு இ-ஸ்கூட்டர்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் எவ்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் மேட் இன் இந்தியா தயாரிப்பு ஆகும். ஸ்போர்ட்டி நிறம் மற்றும் சிறப்பம்சங்களில் இந்த எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லேம்புகள், டிஆர்எல்களுடனும், ரியர் பகுதியில் பிளிங்கர்களும் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி & மைலேஜ்

இத்துடன், 2000 வாட் பிஎல்டிசி மோட்டார் மற்றும் 70 V / 40 Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வளவு நேரம் செலிவிட்டு அதை சார்ஜ் செய்யும்பட்சத்திலேயே 110 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வேகம் ஆகும்.

எலெக்ட்ரிக் பைக்கில் 10 ஆம்ப் மைக்ரோ சார்ஜர் ஆட்டோ கட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியை தனியாக கழட்டி செல்ல முடியும். ஆகையால், தேவைப்படும் இடத்திற்கு எடுத்துச் சென்று அதை சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும்.

இத்தகைய சூப்பரான வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை எவ்ட்ரிக் நிறுவனம் தற்போது இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதை பராமரிப்பது மிக சுலபம் என்றும், பெரியளவில் பராமரிப்பு செலவு ஏற்படாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் கவரும் விதமாகவே இந்த பைக்கை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

The post 70 கிமீ டாப் ஸ்பீடு, 110 கிமீ மைலேஜ்! அசத்தும் இந்திய நிறுவனத்தின் இ-பைக்! first appeared on .

]]>
எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது மோட்டோவோல்ட் https://www.91mobiles.com/tamil/motovolt-debuts-m7-multi-purpose-electric-scooter-in-auto-expo-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motovolt-debuts-m7-multi-purpose-electric-scooter-in-auto-expo-2023 Mon, 16 Jan 2023 12:21:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5033 மோட்டோவால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது எம்7 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நொய்டாவில் நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள் மோட்டோவால்ட் எம்7 நொய்டாவில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ளன. அந்த வரிசையில் மோட்டோவால்ட் நிறுவனம் தனது எம்7 என்ற மல்டி பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் […]

The post எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது மோட்டோவோல்ட் first appeared on .

]]>

Highlights

  • மோட்டோவோல்ட் நிறுவனம் எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது.
  • இது டிவிஎஸ் XL பைக்கின் இடத்தை பிடிக்கும் என நம்பப்படுகிறது.

மோட்டோவால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது எம்7 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நொய்டாவில் நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

மோட்டோவால்ட் எம்7

நொய்டாவில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ளன. அந்த வரிசையில் மோட்டோவால்ட் நிறுவனம் தனது எம்7 என்ற மல்டி பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

பிரத்யேக வடிவமைப்பு

மோட்டோடவால்ட் நிறுவனம் இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒவ்வொரு ரைடரின் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல கஸ்டமைஸ்டு செய்து கொடுக்கும்படி இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் அதிகமான பொருட்களை எடுத்து செல்லும் வகையில் அதிக ஸ்டிரென்ட்த் மற்றும் லோடு பியரிங் கேப்பாசிட்டியுடன் இதை உருவாக்கியுள்ளது.

வசதிகள்

இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பின்பக்க சீட் சுலபமாக அகற்றிக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில்பெட்டி அல்லது வேறு ஏதேனும் பொருட்களை இணைத்துக்கொள்ளமுடியும். இந்த ஸ்கூட்டரில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பேட்டரியை எடுத்து செல்லும் வசதி இருக்கிறது. இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோட்டோடவால்ட் ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு ஒரு தடையில்லா அனுபவத்தை வழங்கும். இந்த மோட்டோ வால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையிலும் வாங்க முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் மார்கெட்டில் உள்ள இஎம்ஐயை விட குறைவான செலவில் ஸ்கூட்டரை சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

பேட்டரி

மற்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு  வாரண்டி வழங்கும் நிலையில், இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முதன் முறையாக காலவரையற்ற பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. இந்த மோட்டோவால்ட் எம்7 ஸ்கூட்டரின் பேட்டரி AIS152 2 ம் கட்ட சான்று பெற்றுள்ளது. இந்த பேட்டரி ஸ்வாப்பபிள் பேட்டரியாக இருப்பதால் இதை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும்.

வளர்ச்சி

இந்நிறுவனம் சமீபத்தில் துபாய் நிறுவனத்தின் மூலம் ரூ16 கோடியை முதலீடாக பெற்றுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இந்நிறுவனம் தற்போது தனது சேவையை வழங்கி வரும் 100க்கும் அதிகமான நகரங்களின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

The post எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது மோட்டோவோல்ட் first appeared on .

]]>
ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! https://www.91mobiles.com/tamil/byd-launches-atto-3-special-edition-limited-car/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-launches-atto-3-special-edition-limited-car Fri, 13 Jan 2023 13:16:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4998 நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது. தோற்றம் இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் […]

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>

Highlights

  • பிஒய்டி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிசனை உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளது.
  • இந்த ஸ்பெஷல் எடிஷனில் வெறும் 1200 கார்களை மட்டுமே உருவாக்க இருக்கிறது.
  • இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.
  • இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது.

தோற்றம்

இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஓஆர்விஎம்கள் மட்டும் கருப்பு நிறத்திலும், வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் வீல்களில் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஒய்டி அட்டோ 3 கார் அந்நிறுவனத்தின் இ-பிளாட்ஃபார்ம் 3.0-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & மைலேஜ்

அட்டோ 3 காரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மிகப்பெரிய மோட்டாரை கையாளும் திறன் கொண்டது. மேலும் இந்த காரில் வெஹிகில் – டூ-லோடு பங்ஷன் இருக்கிறது. இந்த பேட்டரி 3.3 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும்.

இந்த காரில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 201 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

அம்சங்கள்

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 12.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய கனெக்ட்டிவிட்டி அம்சங்களை உள்ளடக்கியது. இதுபோக இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு முன்பக்க சீட்கள், ஒன் டச் எலெக்ட்ரிக் டெயில் கேட், ஆகியஅம்சங்கள் இருக்கிறது. மிக முக்கியமாக இந்த காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. இதில் 7-ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு அசிஸ்ட், மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

விலை

இந்த கார் ஒரு லிமிட்டட் எடிசன் கார் என்பதால் வெறும் 1200 கார்களை மட்டுமே தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ34.49 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>
450 கிமீ மைலேஜ்கான சார்ஜ் 35 நிமிடங்களில்! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/mg4-electric-hatchback-car-unveiled-at-2023-indian-auto-expo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mg4-electric-hatchback-car-unveiled-at-2023-indian-auto-expo Fri, 13 Jan 2023 10:22:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4985 உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் காராக விளங்கும் எம்ஜி4 இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த எலக்ட்ரிக் கார் நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், கொரோனாவினால் 1 வருட தாமதத்திற்கு பிறகு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றுவரும் 2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு வெளிநாட்டு கார்களை காட்சிக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த வகையில் இந்த கண்காட்சியின் அரங்கில் இடம்பெற்றுள்ள எம்ஜி4 எலக்ட்ரிக் கார் ஆனது […]

The post 450 கிமீ மைலேஜ்கான சார்ஜ் 35 நிமிடங்களில்! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

Highlights

  • எம்ஜி4 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.
  • இதன் 64kWh பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம்.
  • எம்ஜி4 எலக்ட்ரிக் காரில் 450கிமீ வரையிலான மைலேஜை வழங்குகிறது

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் காராக விளங்கும் எம்ஜி4 இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த எலக்ட்ரிக் கார் நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், கொரோனாவினால் 1 வருட தாமதத்திற்கு பிறகு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றுவரும் 2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு வெளிநாட்டு கார்களை காட்சிக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த வகையில் இந்த கண்காட்சியின் அரங்கில் இடம்பெற்றுள்ள எம்ஜி4 எலக்ட்ரிக் கார் ஆனது எஸ்யூவி ரக கார் போன்று இருந்தாலும், எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹேட்ச்பேக் காராகும்.

தோற்றம்

இருப்பினும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் நம்மூர் சாலைக்கேற்ப கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்டுள்ளதை ஆட்டோ எக்ஸ்போவில் தெளிவாக காண முடிந்தது. இந்த எலக்ட்ரிக் காரின் நீளம் 4287மிமீ, அகலம் 2060மிமீ, உயரம் 1504மிமீ மற்றும் வீல்பேஸ் (சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2705மிமீ ஆகும். எம்ஜி4 காரின் உட்பக்கத்தில் கவனிக்கக்கூடிய அம்சங்களாக 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க கொடுக்கப்பட்டிருக்கும் 7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையினை சொல்லலாம்.

வசதிகள்

இதில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது மற்ற கார்களில் உள்ளதை போன்று ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதனுடன் மிடில் இருக்கை வரிசைக்கும் ஏசி வெண்ட்ஸ், சுழலக்கூடிய கியர் செலக்டர் உள்பட மற்ற கண்ட்ரோல்களும் நம்மை வசீக்கரிக்கின்றன. அதேபோல் எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் கார்களில் தொழிற்நுட்ப வசதிகளை வழங்குவதிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடிய நிறுவனம் கிடையாது.

சிறப்பு அம்சங்கள்

இதனாலேயே இந்த எம்ஜி4 எலக்ட்ரிக் காரிலும் ADAS தொழிற்நுட்பத்தை பார்க்க முடிகிறது. இந்த தொழிற்நுட்ப தொகுப்பின் மூலமாக ஆக்டிவ் எமர்ஜென்சி பிரேக்கிங், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளை அடையாளம் காணும் வசதி, லேன் கீப் அசிஸ்ட் மற்றும் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட் உள்ளிட்ட அட்வான்ஸ் அம்சங்களை பெறலாம். இத்தகைய ADAS தொகுப்பு ஆனது தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டு வரும் ஒன்றாக மாறி வருகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் கூட எம்ஜி4 உடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி இருந்த எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில் ADAS-ஐ புதியதாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்ஜி4 எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், ADAS போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெறுவதினால் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் 51kWh மற்றும் 64kWh என்ற இரு விதமான பேட்டரி தேர்வுகளில் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

பேட்டரி & மைலேஜ்

இதில் 51kWh பேட்டரி தொகுப்பை பெறும் எம்ஜி4 வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 350கிமீ வரையிலான மைலேஜையும், 64kWh பேட்டரி தொகுப்பை பெறும் எம்ஜி4 வேரியண்ட்டில் 450கிமீ வரையிலான மைலேஜையும் பெற முடியும் என்கிறது எம்ஜி. இந்த இரு பேட்டரி தேர்விலும் கிடைக்க பெறும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் ஆனது 250 என்எம் ஆகும். எம்ஜி4 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 7.7 வினாடிகளில் எட்டிவிடலாம். 150 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் 51kWh பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம். அதுவே 64kWh பேட்டரியை சார்ஜ் ஏற்ற 35 நிமிடங்களே போதுமானதாக இருக்கும்.

விலை

தற்போதைய சூழலில் விற்பனைக்கு வந்தால் எம்ஜி4-இன் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.30 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் எம்ஜி4 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் எம்ஜி4-க்கு இணையான தோற்றம் & விலை கொண்ட எம்ஜி இசட்.எஸ் இவி ஏற்கனவே விற்பனையில் உள்ளது.

The post 450 கிமீ மைலேஜ்கான சார்ஜ் 35 நிமிடங்களில்! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>
ஐயோனிக் 6 காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஹூண்டாய்! https://www.91mobiles.com/tamil/hyundai-ioniq-6-ev-unveiled-at-the-2023-auto-expo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-ioniq-6-ev-unveiled-at-the-2023-auto-expo Thu, 12 Jan 2023 12:24:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4945   ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 (Hyundai Ioniq 6) காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. இது எலெக்ட்ரிக் செடான் (Electric Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் செடான் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் காரும், இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், […]

The post ஐயோனிக் 6 காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஹூண்டாய்! first appeared on .

]]>

 

ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 (Hyundai Ioniq 6) காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. இது எலெக்ட்ரிக் செடான் (Electric Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் செடான் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் காரும், இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், வழக்கமான ஓஆர்விஎம்கள் இருக்காது. அதற்கு பதிலாக ரியர் வியூ கேமராக்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில், கூபே கார்களை போன்ற ரூஃப் லைன் இருக்கும். உட்புறத்தை பொறுத்தவரையில், 2 திரைகள், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இன்னும் பல்வேறு அதிநவீன வசதிகள் எல்லாம் ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே 2 திரைகள் என குறிப்பிடப்பட்டிருப்பது, இரண்டு 12 அங்குல திரைகள் ஆகும். இதில் ஒரு திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும், மற்றொரு திரை டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும் செயல்படும். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களிலும், இப்படி 2 திரைகளை வழங்குவது தற்போது ஒரு ‘ட்ரெண்ட்’ ஆக மாறி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 53 kWh பேட்டரி தொகுப்பு ஒன்றாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 429 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 77.4 kWh பேட்டரி தொகுப்பும், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 610 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை, 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவின் மூலம், இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலைகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. முக்கியமான போட்டியாளரான கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை காட்டிலும், மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Hyundai Creta EV) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் இன்று இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி (Maruti Suzuki EVX Electric SUV) கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார், இந்த எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய சந்தையில் தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
 

The post ஐயோனிக் 6 காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஹூண்டாய்! first appeared on .

]]>
மீண்டும் இந்தியாவுக்கு வருகிறதா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான LML? https://www.91mobiles.com/tamil/lml-star-e-scooter-auto-expo-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lml-star-e-scooter-auto-expo-2023 Tue, 03 Jan 2023 08:43:13 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4655 70 மற்றும் 80களில் பிறந்தவர்களுக்கு LML எனும் பெயர் மிகவும் பரீட்சையமான ஒன்று. இந்தியாவின் இருசக்கர வாகன உலகில் கொடி கட்டி பறந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சந்தையைவிட்டு இது வெளியேறியது. இந்த நிலையில் புகழ்பெற்ற இந்த LML இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இம்முறை எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவை மையமாகக் […]

The post மீண்டும் இந்தியாவுக்கு வருகிறதா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான LML? first appeared on .

]]>

70 மற்றும் 80களில் பிறந்தவர்களுக்கு LML எனும் பெயர் மிகவும் பரீட்சையமான ஒன்று. இந்தியாவின் இருசக்கர வாகன உலகில் கொடி கட்டி பறந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சந்தையைவிட்டு இது வெளியேறியது. இந்த நிலையில் புகழ்பெற்ற இந்த LML இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இம்முறை எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவை மையமாகக் கொண்டு களமிறங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதாவது, தனது எல்எம்எல் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் வெளியீடு செய்வதற்கு தயாராக இருக்கிறது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் விரைவில் இந்தியா நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்எம்எல் நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் தன்னுடைய வாகன உற்பத்தி பணிகளைத் தொடங்கி இருக்கிறது. நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் பிற மின்சார இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் தங்களுடைய தயாரிப்புகள் அனைத்தும் உயர் தொழில்நுட்ப வசதிக் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அண்மையில் இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் சிஇஓ யோகேஷ் பாத்யா இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

எல்எம்எல் நிறுவனம் முதலில் ஸ்டார் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கின்றது. இதை இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எல்இடி லைட்டுகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, அட்ஜஸ்டபிள் இருக்கை, இன்டரேக்டீவ் திரை, ஃபோட்டோ சென்சிட்டீவ் ஹெட்லேம்ப் என பற்பல அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று இன்னும் பல ஆச்சரியமளிக்கும் அம்சங்கள் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்டார் ஓர் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆகையால், இந்த ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் எனில், இதுவே நாட்டின் முதல் பட்ஜெட் விலை மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். ஏற்கனவே இந்த இருசக்கர வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே எல்எம்எல் நிறுவனம் இதனை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2023 ஆட்டோ எக்ஸ்போ இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. எல்எம்எல் நிறுவனம் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் பல முன்னணி நிறுவனங்களும் தங்களின் எதிர்கால தயாரிப்புகளை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

எல்எம்எல் நிறுவனம், ஸ்டார், மூன்ஷாட் மற்றும் ஓரியன் என மூன்று எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ஏற்கனவே நாட்டில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ஆன்லைன் வாயிலாக புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, நாடு முழுவதும் 100 விற்பனையகங்களை அமைக்கும் பணியிலும் எல்எம்எல் களமிறங்கி இருக்கின்றது. இவற்றின் வாயிலாகவும் புக்கிங்குகள் ஏற்கப்பட உள்ளன.

பொதுவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில ஆயிரக் கணக்கான ரூபாயை புக்கிங்கிற்காக வசூலிக்கும். ஓலா மற்றும் ஏத்தர் போன்ற முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் ரூ. 999 எனும் முன்தொகையில் புக்கிங்குகளை ஏற்று வருகின்றன. இந்த நிறுவனங்களைப் போல் இல்லாமல் 0 கட்டணத்தில் புக்கிங்கை எல்எம்எல் ஏற்கத் தொடங்கி இருப்பது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450 எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஹீரோ விடா ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு கடுமையான போட்டியாளனாக இருக்கும்.

The post மீண்டும் இந்தியாவுக்கு வருகிறதா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான LML? first appeared on .

]]>