balakrishna https://www.91mobiles.com/tamil Tue, 21 Feb 2023 10:45:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OTT இந்தவார ரிலீஸ் https://www.91mobiles.com/tamil/vaarisu-nanpakal-nerathu-mayakkam-thankam-movie-this-week-ott-release-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vaarisu-nanpakal-nerathu-mayakkam-thankam-movie-this-week-ott-release-movie Tue, 21 Feb 2023 12:03:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5981 இந்த வாரம் ஓடிடியில் விஜய்யின் நடிப்பில் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.   வாரிசு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி […]

The post OTT இந்தவார ரிலீஸ் first appeared on .

]]>

இந்த வாரம் ஓடிடியில்

விஜய்யின் நடிப்பில் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

 

வாரிசு

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

 

இருதுருவம் 2

2019ம் ஆண்டு வெளியான வலைத் தொடர் இருதுருவம். ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருதுருவம் 2 புதிய தொடர் பிப்ரவரி 24 முதல் Sony LIV வெளியாக உள்ளது.

வீரசிம்ஹா ரெட்டி

கோபிசந்த் மலினினி இயக்கத்தில், தமன் இசையில், புஷ்பா தயாரிப்பாளர் மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இதில், வீரசிம்ஹா ரெட்டி டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23ந் தேதி வெளியாக உள்ளது.

தங்கம்

இந்தியாவின் தங்கத் தலைநகரான திருச்சூரில் தங்க வர்த்தகத்தில் பணிபுரியும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் தங்கம். பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பிப்ரவரி 22ந் தேதி பிரைம் வீடியோவில் வெளியானது.

நண்பகல் நேரத்து மயக்கம்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மெகா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த மாதம் 19ந் தேதி வெளியானத் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23ந் தேதி வெளியானது

We Have a Ghost

வீ ஹேவ் எ கோஸ்ட் பிப்ரவரி 24ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். இதில், ஜெனிஃபர் கூலிட்ஜ் மற்றும் அந்தோனி மேக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பேய் வீட்டை ஆக்கிரமித்து வேட்டையாடுகிறது. இதில் இருந்த அந்த குடும்பம் எப்படி தப்பித்தது என்ற திகிலுடன் இந்த படம் நகர்கிறது.

The post OTT இந்தவார ரிலீஸ் first appeared on .

]]>