Benz https://www.91mobiles.com/tamil Mon, 05 Dec 2022 08:03:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 423 கிமீ ரேஞ்ச், 32 நிமிடங்களில் 80% சார்ஜ் – ப்ரீமியம் வசதிகளுடன் பென்ஸின் 3வது எலக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/mercedes-benz-eqb-e-car/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mercedes-benz-eqb-e-car Mon, 05 Dec 2022 08:03:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4076 பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் Mercedes-Benz EQB என்னும் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கின்றது. பலவிதமான சிறப்பம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் காரை பென்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த சொகுசு மின்சார கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். ஏற்கனவே இந்திய சந்தையில் இக்யூஎஸ், இக்யூசி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்து வருகிறது. மூன்றாவது எலெக்ட்ரிக் கார் […]

The post 423 கிமீ ரேஞ்ச், 32 நிமிடங்களில் 80% சார்ஜ் – ப்ரீமியம் வசதிகளுடன் பென்ஸின் 3வது எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் Mercedes-Benz EQB என்னும் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கின்றது. பலவிதமான சிறப்பம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் காரை பென்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த சொகுசு மின்சார கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏற்கனவே இந்திய சந்தையில் இக்யூஎஸ், இக்யூசி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்து வருகிறது.

மூன்றாவது எலெக்ட்ரிக் கார்

இது நிறுவனத்தின் மூன்றாவது மின்சார கார் மாடல் ஆகும். இதே கார் மாடல் ஐசிஇ மோட்டாருடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அந்த வாகனம் ஜிஎல்பி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இக்யூபி சொகுசு எலெக்ட்ரிக் காருக்கு அறிமுக விலையாக ரூ. 74.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎல்பி-யைக் காட்டிலும் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே அதிகம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்யூபி ஓர் மூன்று வரிசைகள் இருக்கை அமைப்புக் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

2 மாடல்கள்

இதனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இக்யூபி 300 மற்றும் இக்யூபி 350 என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல உட்புறமும் அசத்தலாக தயார் செய்யப்பட்டுள்ளது. பிளாங்கட்-ஆஃப் கிரில், ட்வீக் ரக ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் உள்ளிட்டவை இக்யூபி காரின் வெளிப்புறத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நிறங்கள்

இதுமட்டுமின்றி, அழகான தோற்றம் கொண்ட பம்பர், முழு அகல எல்இடி லைட் பார், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவற்றையும் இந்த காரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. காஸ்மோஸ் பிளாக், ரோஸ் கோல்டு, டிஜிட்டல் ஒயிட், மவுண்டெயின் கிரே மற்றும் இரிடியம் சில்வர் ஆகிய ஐந்து விதமான தேர்வுகளிலேயே இக்யூபி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

அம்சங்கள்

இதேபோல் காரின் உட்பக்கமும் அட்டகாசமான பிரீமியம் அம்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் மின் விளக்கு, பவர்டு டெயில்கேட் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் முன் பக்க இருக்கை உள்ளிட்டவை இக்யூபி எலெக்ட்ரிக் வழங்கப்பட்டிருக்கின்றன.

திறன்

ஏற்கனவே கூறியதைப் போல் இந்த கார் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் இக்யூபி வேரியண்டில் 228 எச்பி பவர் மற்றும் 390 என்எம் டார்க்கை வழங்கும் மின்சார மோட்டாரும், இக்யூபி 350 இல் 292 எச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டாரும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கை பொருத்தவரை இரு கார்களிலும் ஒரே மாதிரியான திறன் கொண்டதே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

66.5 kWh பேட்டரி பேக்கே இக்யூபி எலெக்ட்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 423 கிமீ ரேஞ்ஜை தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டுகள் வாரண்டியை வழங்க நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 25 நிமிடங்கள் போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி

வழக்கமான 11 kW ஏசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்திலேயே இந்த அதிகபட்ச நேரத்தை இக்யூபி எலெக்ட்ரிக் கார் எடுத்துக் கொள்ளும். அதுவே, 100 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 32 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இந்த காரின் வருகை வால்வோ எக்ஸ்சி 40 எலெக்ட்ரிக் காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

The post 423 கிமீ ரேஞ்ச், 32 நிமிடங்களில் 80% சார்ஜ் – ப்ரீமியம் வசதிகளுடன் பென்ஸின் 3வது எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>
இந்தியாவில் வெளியாகும் இரண்டு பென்ஸ் எலக்ட்ரிக் கார்கள் https://www.91mobiles.com/tamil/mercedes-benz-glb-and-eqb-india-launch-date-announced/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mercedes-benz-glb-and-eqb-india-launch-date-announced Thu, 10 Nov 2022 07:23:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3523 மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இப்போது இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் […]

The post இந்தியாவில் வெளியாகும் இரண்டு பென்ஸ் எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இப்போது இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் 4634mm நீளம், 1834mm அகலம், 1658mm உயரம், 2829mm வீல்பேஸ் கொண்டுள்ளது. புதிய பென்ஸ் EQB மாடல் அளவில் 4748mm நீளம், 1667mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பென்ஸ் GLB மற்றும் EQB மாடல்களில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எல்இடி ஹெட்லைட்கள், ரியர் லைட்கள், பானரோமிக் சன்ரூப், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, மல்டி-ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சில மேற்கத்திய சந்தைகளில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கின்றன. சர்வதேச சந்தையில் பென்ஸ் GLB மாடல் ஏராளமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.3 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் செயல்திறன் நிச்சயம் வேறுபடும். மேலும், இவற்றின் சில வேரியண்ட்களில் ஆல்-வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா, “வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.”

“தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என தெரிவித்து இருக்கிறார்.

The post இந்தியாவில் வெளியாகும் இரண்டு பென்ஸ் எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>
பென்ஸில் இருந்து இன்னோரு எலக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/mercedes-amg-eqs-53-4-matic-plus-electric-sedan-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mercedes-amg-eqs-53-4-matic-plus-electric-sedan-launched-in-india Wed, 24 Aug 2022 14:29:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1820 இந்தியாவில் எலெக்ட்ரிக் ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இதனால் வாகன உற்பத்தியாளர்களும் புது புது எலெக்ட்ரிக் வாகனங்களைத் தொடர்ச்சியாக அறிமுகம் செய்தபடி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே சொகுசு மின்சார கார் விரும்பிகளைக் கவரும் வகையில் பிரபல ஆடம்பர வாகன உற்பத்தியாளரான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 (Mercedes-AMG EQS 53) எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 2.45 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காரை […]

The post பென்ஸில் இருந்து இன்னோரு எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

இந்தியாவில் எலெக்ட்ரிக் ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இதனால் வாகன உற்பத்தியாளர்களும் புது புது எலெக்ட்ரிக் வாகனங்களைத் தொடர்ச்சியாக அறிமுகம் செய்தபடி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே சொகுசு மின்சார கார் விரும்பிகளைக் கவரும் வகையில் பிரபல ஆடம்பர வாகன உற்பத்தியாளரான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 (Mercedes-AMG EQS 53) எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருக்கின்றது.

இது ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 2.45 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட் (completely built unit) -ஆக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காரணத்தினாலேயே மிக அதிக விலையைக் கொண்டதாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது.

இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாகும். ஏற்கனவே இந்நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கி வரும்நிலையில் புதிதாக ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக்கை இரண்டாவது தயாரிப்பாக விற்பனைகக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, மற்றுமொரு காரையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மெர்சிடிஸ் களமிறங்கியிருக்கின்றது.

அடுத்ததாக இக்யூஎஸ் 580 எலெக்ட்ரிக் செடான் ரக காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் அக்டோபர் மாதமே நடைபெற இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில் இதன் வருகைக்கு முன்னதாக சிபியூ வாயிலாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகம் செய்திருக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்களின் டிசைனில் இந்த எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உருவத்திற்கு ஏற்ப அதிக பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டார்களே மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் முகப்புபகுதியில் டிஜிட்ட்ல் லைட் ஹெட்லேம்ப், ஏஎம்ஜி ஸ்பெஷிஃபிக் பிளாக் பேனல் க்ரில், குரோம் அலங்காரக் கூறுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, பாடி நிறத்திலான பம்பர், உயர் பளபளப்பான பிளாக் நிறத்தினாலான குரோம் ட்ரிம் போன்ற அம்சங்களால் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், காரின் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்திற்காக 21 அல்லது 22 அங்குல லைட்-அலாய் வீல்கள் ஏரோ அல்லது ஹெரிடேஜ் டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை 0.23 டிராக் கோஎஃப்சியன்டுக்கு ஏற்ப மெர்சிடிஸ் உருவாக்கியிருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது.

இந்த திறனுக்கு உறுதுணையாக காரின் பின் பகுதியில் பெரிய ஸ்பாய்லர் அப்ரானுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் காரின் உட்புறத்திலும் பல சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை காரின் ஸ்போர்ட்டி லெவலை இன்னும் பல மடங்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக ஏஎம்ஜி இருக்கைகள், கிராஃபிக்குகள், இருக்கை கவர்கள், ஆர்டிகோ மேன் மேட் லெதர், மைக்ரோ கட் மைக்ரோஃபைபர் மற்றும் சிவப்பு நிற தையல்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது.

இதுதவிர, எம்பியூஎக்ஸ் ஹைபர்ஸ்கிரீன், மூன்று பெரிய திரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இக்காரில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆக்ஸில்களில் பொருத்தப்பட்டுள்ளன. நிறுவனம் இந்த ஆல் வீல் டிரைவ் வசதியுடனும் வழங்குகின்றது. அனைத்து மின் மோட்டார்களும் இணைந்து 658 பிஎச்பி பவரையும், 950 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3.4 செகண்டுகளே எடுத்துக் கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். மேலும், இந்த காரில் 107.8kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 586 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த பேட்டரி பேக்கை வழக்கமான 7.4kW சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது பத்து சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரையிலான சார்ஜை ஏற்றிக் கொள்ளவதற்கு 15 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். அதேவேலையில் ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது மிகக் குறைவான மணி நேரங்களே போதுமானது என கூறப்படுகின்றது.
சஸ்பென்ஷனை பொருத்தவரை இந்த காரில் 4 லிங்க் ஆக்ஸில் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், மல்டி லிங்க் ஆக்ஸில் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரை மிக சூப்பரான ஆடம்பர வசதிகள் நிறைந்த வாகனமாகவும், அதிக பவரை வெளியேற்றக் கூடிய வாகனமாகவும் மாற்றியிருக்கின்றது.

இதன் ரைடிங் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும் பொருட்டு ஏஎம்ஜி ரைட் கன்ட்ரோல் பிளஸ் அம்சமும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் சிறப்பு வசதிகளாக இக்காரில் ரியர் ஆக்ஸில் ஸ்டியரிங், ஏஎம்ஜி ரக சவுண்ட் சிஸ்டம், லெவல் 2 அடாஸ் அம்சம், முகத்தைக் கண்டறிந்து செயல்படும் தொழில்நுட்பம், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் ஆகிய சிறப்புகளை் தாங்கிய வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

The post பென்ஸில் இருந்து இன்னோரு எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>