best mobile https://www.91mobiles.com/tamil Thu, 14 Dec 2023 12:11:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2023 – முடிவுகள் https://www.91mobiles.com/tamil/indian-gadget-awards-2023-results/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indian-gadget-awards-2023-results Thu, 14 Dec 2023 13:30:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=12270 இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2023’ திருவிழா இனிதே நிறைவடைந்தது. 91மொபைல்ஸ் மற்றும் முன்னணி தொழிற்நுட்ப ஊடகவியலாளர்களின் பங்களிப்பில் நடைபெற்ற ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்தத் திருவிழாவில் இந்த ஆண்டும், பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்நிகழ்வின் மூலம் 2023ஆம் ஆண்டில் வெளியான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள், டெக்–அணிகலன்கள் என பல்வேறு வகையான தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இம்முறை 30+ பிரிவுகளில், 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்! இதில் சிறந்ததை, 30க்கும் அதிகமான நடுவர்கள், சமூக […]

The post இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2023 – முடிவுகள் first appeared on .

]]>

இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2023’ திருவிழா இனிதே நிறைவடைந்தது. 91மொபைல்ஸ் மற்றும் முன்னணி தொழிற்நுட்ப ஊடகவியலாளர்களின் பங்களிப்பில் நடைபெற்ற ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்தத் திருவிழாவில் இந்த ஆண்டும், பல நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்நிகழ்வின் மூலம் 2023ஆம் ஆண்டில் வெளியான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள், டெக்அணிகலன்கள் என பல்வேறு வகையான தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

இம்முறை 30+ பிரிவுகளில், 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்!

இதில் சிறந்ததை, 30க்கும் அதிகமான நடுவர்கள், சமூக வலைதள பங்காளர்கள், தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், முன்னணி விமர்சகர்கள் ஒன்றுகூடி தேர்ந்தெடுத்துள்ளனர்.  அவற்றின் முடிவுகளை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

https://www.indiangadgetawards.com/

 

சிறந்த போன் 2023 (ரூ.15,000க்கு கீழ்)

இந்தியாவில் 5ஜி அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது வெளியாகும் மொபைல்கள் பெரும்பாலும் 5ஜி மொபைல்களாகவே உள்ளன. அதுமட்டுமின்றி அவை குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. அதேசமயம் மிட்ரேஞ்ச் மொபைல்களுக்கு சவால் விடும் வகையில் வசதிகளோடு வெளிவருகின்றன. இந்த பட்ஜெட் பிரிவிலும் 3 போன்களைத் தவிர மற்றவை எல்லாமே 5G போன்களாகும். இவற்றில் மிகச்சிறந்த பட்ஜெட் போனாக Redmi 12 5G தேர்வானது.

 

சிறந்த போன் 2023 (ரூ.25,000க்கு கீழ்)

ரூ.15,000 முதல் ரூ.25,000க்கு வரையிலான விலை கொண்ட மொபைல்கள் தான் தற்போது பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கின்றன. ஏனெனில், விலை சற்று அதிகமாக இருந்தாலும், கிட்டத்தட்ட ஃப்ளாக்‌ஷிப் போன்களில் இருக்கும் பெரும்பாலான வசதிகளை இந்த விலைப்பிரிவு மொபைல்களில் எதிர்பார்க்கலாம். இந்த விலைப்பிரிவில் வாடிக்கையாளரை ஒரு நிறுவனம் திருப்திபடுத்திவிட்டால், அதுதான் அவ்வருடத்தின் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும். அதனால் போட்டியும் இந்தப் பிரிவுக்கு கடுமையாகவே இருந்தது. அதில் வெற்றி வாகை சூடியது.. Motorola Edge 40 Neo.

 

 சிறந்த போன் 2023 (ரூ. 35,000க்கு கீழ்)

ஃப்ளாக்‌ஷிப் போன் அளவிற்கு செலவு செய்ய விரும்பாத, அதேசமயம் ஃப்ளாக்‌ஷிப் போன்களின் பெரும்பாலான அம்சங்களையும் கொண்ட போன்கள் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரையிலான விலைப்பிரிவில் வெளியாகின்றன. இவை நல்ல சிப்செட், அதிப்படியான ரேம், சிறந்த டிஸ்ப்ளே, தரமான கேமராக்கள் போன்ற பல வசதிகளைக் கொண்டிருக்கும். சிறந்த அம்சங்களைக் கொண்டிருப்பதால் இவை மல்டி-டாஸ்கிங், பெரிய விளையாட்டுகளை கையாள்வது போன்றவற்றை சிறப்பாக செய்யும். அதில் சிறந்த போன் எதுவென்ற போட்டியில் பல மொபைல்கள் எல்லாம் களம் இறங்கின. அதில் இறுதியில் வெற்றி பெற்றது  iQOO Neo 7 Pro.

 

சிறந்த போன் 2023 (ரூ. 50,000க்கு கீழ்)

‘ஃப்ளாக்‌ஷிப்’ என்ற அடைமொழியில் அழைக்கப்படும் இந்த மொபைல்கள், புதிய தொழில்நுட்பம், மேம்பட்ட பாகங்கள், அதிகபட்ச தரம்.. என, எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சிறந்த போனை இந்த விலைப்பிரிவிலேயே தயாரித்து வைத்திருக்கும். மொபைல் உலகில் புதிதாய் ஒரு வசதியோ, அம்சமோ அறிமுகமானால் அது முதலில் இந்த விலைப்பிரிவு மொபைல்களிலேயே வெளியாகும். இந்த பிரிவில் சிறந்த மொபைலாக OnePlus 11R 5G தேர்வானது.

 

 சிறந்த செஃல்பி போன் 2023 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ.35,000க்கு கீழ்)

முன்பு செல்ஃபி எடுக்க அதிகம் பயன்பட்ட முன்பக்க கேமரா, தற்போது அலுவல் சார்ந்தும், இணைய கல்வி சார்ந்துமாக அவசிய தேவையாகிவிட்டது. அதனால் தற்போது மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் முன்பக்க கேமராவையும் அதிக மெகாபிக்சல்கள், அதிக வசதிகளோடு தரமாக தயாரித்து வெளியிடுகின்றன. அப்படி 2023 ஆம் ஆண்டு மக்களால் அதிக வரவேற்பு அளிக்கப்பட்ட இந்த மொபைல்களில் சிறந்த செல்ஃபி போனாக தேர்வானது Vivo V29

 

சிறந்த கேமரா போன் 2023 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ. 35,000க்கு கீழ்)

மொபைலில்  ஒரு அம்சமாக இருந்த ‘கேமரா’ தற்போது பலகட்ட வளர்ச்சி அடைந்துவிட்டது. பட்ஜெட் போன்கள் கூட 50MP கேமராக்களோடு வருகின்றன. அதுபோல் புகைப்படங்களை நல்ல ‘டெப்த்’ உடன் எடுக்க கூடுதலாக சென்சார் மற்றும் சாப்ட்வேர்களுடன் வருகின்றன. அதில் மக்களின் மனம் கவர்ந்த சிறந்த கேமரா போனாக, ‘சிறந்த செல்ஃபி போனாக’ தேர்வான Vivo V29 மொபைலே வென்றுள்ளது.

 

 சிறந்த கேமரா போன் 2023 – ப்ரீமியம் (விலை பொருட்டல்ல)

தொழிற்முறை கேமராக்களில் இருக்கும் வசதிகள் தற்போது மொபைலுக்கும் வர ஆரம்பித்துவிட்டன. நடுக்கமின்றி எடுக்க OIS வசதி, பெரிய அளவிலான படங்களை எடுக்க 200MP வரையிலான சென்சார்கள்,  குறைந்த வெளிச்சத்தில் கூட நன்றாக எடுக்க வேண்டி அளவில் 1 அங்குல அளவிலான பெரிய சென்சார், வெவ்வேறு தூரங்களை எடுக்க பலவிதமான ஃபோகல்லெந்த் (Focal lenth) கொண்ட பலவகை சென்சார்கள் என பலவகையான வசதிகளோடு தற்போதைய கேமரா போன்கள் வெளியாகி வருகின்றன. இவற்றில் சிறந்த ப்ரீமியம் வகை கேமரா போனாக அனைவரும் தேர்ந்தெடுத்தது.. Apple iPhone 15 Pro Max

 

சிறந்த கேமிங் போன் 2023 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ.35,000க்கு கீழ்)

எல்லா போன்களிலும் விளையாட்டுகளை விளையாட முடியுமென்றாலும், அளவில் பெரிய விளையாட்டுகளை தடையின்றி எளிதாக விளையாட பிரத்யேக மொபைல்களால் தேவைப்படுகின்றன. ஆனால், விளையாட்டுக்கென பிரத்யேக மொபைலை வாங்க விரும்பாத, அதேசமயம் விளையாடுவதிலும் ஆர்வமுள்ளவர்கள் என ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களுக்கான பிரிவுதான் இது. இதில் பொதுவான மொபைல் பயன்பாட்டோடு கேமிங்கிற்குத் தேவைப்படும், கூடுதல் ரேம், நல்ல சிப்செட் போன்ற சில அம்சங்களுடன் வெளியான மொபைல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இறுதியில் வென்றது iQOO Neo 7 Pro 5G.

 

சிறந்த கேமிங் போன் 2023 – ப்ரீமியம் (விலை பொருட்டல்ல)

மொபைலில் பெரிய விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கென பிரத்யேகமான மொபைல்கள் கூட வரத் தொடங்கிவிட்டன. இவற்றில் கூடுதல் ரேம், சிறந்த ப்ராசஸர், கூலிங் வசதி போன்றவை உள்ளன. இதன் மூலம் சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெற முடியும். இது தவிர சிறந்த திரை அனுபவம், பெரிய பேட்டரி, சரவுண்ட் ஆடியோ போன்ற மிகச்சிறந்த வசதிகளோடு வரும் கேமிங் போன்களில் சிறந்ததென தேர்ந்தெடுக்கப்பட்டது.. கேமிங்கிற்கென்றே உருவாக்கப்பட்ட ASUS ROG Phone 7 Ultimate.

 

சிறந்த ஃபோல்ட் / ஃப்ளிப் போன் 2023

சென்ற வருடம் இல்லாத புது பிரிவு இது. ஒவ்வொரு சில வருடங்களிலும் மொபைலில் சில விஷயங்கள்  பிரபலமாகும். அப்படி தற்போது மக்களிடையே பிரபலமாகி வரும் புதிய பிரிவுதான் இந்த ஃப்ளிப் மற்றும் ஃபோல்ட் போன்கள். மொபைலை மடிப்பது என்பது இரண்டு வகைகளில் இருக்கிறது. ஃப்ளிப் போன்கள் தற்போதைய போன்களை பாதியாக மடக்கி வைப்பது. ஃபோல்ட் என்பது. தற்போது இருக்கும் போன்களை விட இரண்டு மடங்கு இருக்கும் போன்களை மடக்கி இப்போது இருக்கும் போனின் அளவுக்கு கொண்டு வருவது. இதில் சிறந்தது எதுவென்ற போட்டிக்கு பட்டியலான சில போன்களில் இறுதியில் வென்றது OnePlus Open.

 

2023 ஆம் ஆண்டின் சிறந்த போன்

ஒரு மொபைலை சிறந்ததெனக் கூற, அதன் விலை, வசதிகள், கேமரா திறன், சிறந்த அம்சங்கள், தொடர்ச்சியான அப்டேட்கள்,  யூசர் ப்ரெண்ட்லி என பலவகையான காரணிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவர்களின் தேவையோ ஒரே ஒரு மொபைல் தான். எனவே எல்லாவற்றிலும்.. அல்லது மேற்கண்டவற்றில் பெரும்பாலான அம்சங்களைக் கொண்ட ஒரு மொபைலைக் கண்டறிந்து வாங்கவே விரும்புவோம். அப்படி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த 2023 ஆம் வருடத்தின் மிகச் சிறந்த மொபைலாக எல்லோராலும் தேர்ந்தெடுக்கப்பட்டது Samsung Galaxy S23 Ultra.

 

The post இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2023 – முடிவுகள் first appeared on .

]]>
மொபைல் விருது வகைகள் மற்றும் பரிந்துரைப் பட்டியல் 2022 – முடிவுகள் https://www.91mobiles.com/tamil/theindian-gadget-awards-2022-results/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=theindian-gadget-awards-2022-results Tue, 31 Jan 2023 13:00:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5399 இம்முறை 28 பிரிவுகளில், 150க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்! இதில் சிறந்ததை தேர்ந்தெடுத்தெடுக்க.. 18 நடுவர்கள், 13 சமூக வலைதள பங்காளர்கள், 35க்கும் அதிகமான பங்கெடுப்பாளர்கள், தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், முன்னணி விமர்சகர்கள் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். இவை தவிர, பயனாளர்களின் விருப்ப விருது (Users’ Choice awards) என 4 விருதுகளும் வழங்கப்பட்டன.   சிறந்த போன் 2022 (ரூ.15,000க்கு கீழ்) சென்ற ஆண்டின் இறுதியிலேயே இந்தியாவில் 5ஜி அறிமுகமானது. ஆனால், அதை வரவேற்கத் தயாராக 5ஜி மொபைல்கள் […]

The post மொபைல் விருது வகைகள் மற்றும் பரிந்துரைப் பட்டியல் 2022 – முடிவுகள் first appeared on .

]]>

Highlights

  • நமது 91 மொபைல்ஸ் உட்பட முன்னணி 20 தொழிற்நுட்ப ஊடகவியலாளர்களின் பங்களிப்பில், தொழிற்துறையின் குரலாக ஒலிக்கும்  “இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2022”  விழா இனிதே நிறைவடைந்தது.
  • ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த விருதுப் பெருவிழா இந்த ஆண்டு இன்னும் அதிக சிறப்புகளோடு நடந்தது.
  • 2022ஆம் ஆண்டில் வெளியான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள், டெக்-அணிகலன்கள் என பல்வேறு வகையான தொழில்நுட்பச் சாதனங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் திருவிழா இது.

இம்முறை 28 பிரிவுகளில், 150க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்!

இதில் சிறந்ததை தேர்ந்தெடுத்தெடுக்க.. 18 நடுவர்கள், 13 சமூக வலைதள பங்காளர்கள், 35க்கும் அதிகமான பங்கெடுப்பாளர்கள், தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், முன்னணி விமர்சகர்கள் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். இவை தவிர, பயனாளர்களின் விருப்ப விருது (Users’ Choice awards) என 4 விருதுகளும் வழங்கப்பட்டன.

 

சிறந்த போன் 2022 (ரூ.15,000க்கு கீழ்)

சென்ற ஆண்டின் இறுதியிலேயே இந்தியாவில் 5ஜி அறிமுகமானது. ஆனால், அதை வரவேற்கத் தயாராக 5ஜி மொபைல்கள் அதற்கு முன்பே வரத் துவங்கி இருந்தன. அதுவும் குறைந்த விலையில்.  முதன்முறை ஆண்ட்ராய்டு போனை உபயோகிப்பவர்களும் சிறந்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு 5ஜி போன்களே பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அதில் சிறந்த பட்ஜெட் போனாக ‘Motorola Moto G62 5G’ தேர்ந்தெடுக்கப்பட்டது..

 

சிறந்த போன் 2022 (ரூ. 30,000க்கு கீழ்)

 

இந்த விலைப்பிரிவு கொஞ்சம் சவாலான விலைப்பிரிவு. ஏனெனில், விலை சற்று அதிகம் தர தயாராக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் ஏகத்திற்கு இருக்கும். கிட்டத்தட்ட உயர் விலைப்பிரிவு மொபைல்களில் இருக்கும் எல்லா வசதிகளையும் எதிர்பார்பார்ப்பார்கள். ஆனால், இந்த வாடிக்கையாளரை ஒரு நிறுவனம் திருப்திபடுத்திவிட்டால், அதுதான் அவ்வருடத்தின் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும். அதனால் போட்டியும் இந்தப் பிரிவுக்கு கடுமையாகவே இருந்தது. இதில் கலந்து கொண்ட மொபைல்களில் வெற்றி பெற்றது.. ‘OnePlus Nord 2T 5G’.

 

சிறந்த போன் 2022 (ரூ. 50,000க்கு கீழ்)

 

ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சிறந்த போனை இந்த விலைப்பிரிவிலேயே தயாரித்து வைத்திருக்கும். ‘ஃப்ளாக்‌ஷிப்’ என்ற அடைமொழியில் அழைக்கப்படும் இந்த மொபைல்கள், புதிய தொழில்நுட்பம், மேம்பட்ட பாகங்கள், அதிகபட்ச தரம்.. என, எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும். அப்படி ‘சிறந்ததில் மிகச்சிறந்ததாக’ தேர்வானது ‘iQOO 9T’.

 

சிறந்த செஃல்பி போன் 2022 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ.30,000க்கு கீழ்)

 

செல்ஃபி வசதி பிரபலமடையத் தொடங்கியதில் இருந்தே, மொபைல் என்பது ஒரு அந்தரங்க சாதனமாகி விட்டது என்று கூறலாம். வெறும் புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி, தொழில் சார்ந்த வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்ஃபி கேமராக்கள் சிறப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்படி 2022 ஆம் ஆண்டு மக்களால் அதிக வரவேற்பு அளிக்கப்பட்ட இந்த மொபைல்களில் சிறந்த செல்ஃபி போனாக ‘Vivo V25 5G’ மொபைல் தேர்வானது.

 

சிறந்த கேமரா போன் 2022 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ. 30,000க்கு கீழ்)

வருடத்திற்கு ஒருமுறையோ, வாழ்வில் எப்போதோ புகைப்படம் எடுத்த நமது முந்தைய தலைமுறையிடம் கேட்டுப் பார்த்தால் சொல்வார்கள்.. புகைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய திருவிழாத் தருணம் என்று. இன்றோ நொடிக்கொரு புகைப்படம் எடுக்கும்படி, எண்ணற்ற வசதிகளோடு கைக்குள் அல்ல.. ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது கேமரா. ஆனால், அதில் சிறந்தது எது என்பதற்கான விடையாகத் தேர்வான 2022ஆம் ஆண்டின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் கேமரா போன் ‘Realme 9 Pro+’

 

சிறந்த கேமரா போன் 2022 – ப்ரீமியம் (விலை பொருட்டல்ல)

 

மொபைலில் இருக்கும் கேமராக்களின் ‘மெகாபிக்சல்’கள் தொழிற்முறைக் கேமராக்களை விட அதிகமாகிவிட்டன. நடுக்கமின்றி எடுப்பது, நகர்ந்து கொண்டே எடுப்பது, அளவில் பெரிதாய் எடுப்பது, நீரின் ஆழத்தில் எடுப்பது என மொபைல் கேமராக்களின் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இதில் வெறும் வார்த்தை விளையாட்டு எது? உண்மையிலேயே வசதிகள் எது? என உண்மையைக் கண்டறிவது சிரமமான காரியம் தான். அப்படி ஆராய்ந்ததில் வெற்றி பெற்ற சிறந்த பிரீமியம் கேமரா மொபைலாக ‘Samsung Galaxy S22 Ultra 5G’ போன் வெற்றி வாகை சூடியது.

சிறந்த கேமிங் போன் 2022

 

விளையாட்டின் விறுவிறுப்பில் சூடுபிடிக்க வேண்டுமே தவிர, விளையாடும் போது மொபைல் சூடாகக் கூடாது. அதுபோல் தடைகள் விளையாட்டில் வரலாமே தவிர, விளையாடும் மொபைலில் வரக்கூடாது. அப்படி, சிறந்த திரை அனுபவம், பேட்டரி, ஆடியோ போன்ற திறன் மிக்க சிறந்த கேமிங் மொபைல் எது என்பதைத் தேர்ந்தெடுக்கத்தான் இந்த போட்டியே. எல்லாமே திறன் மிக்கதாக இருந்தாலும் இதில், ‘வல்லவனுக்கு வல்லவனை’நடுவர்கள் கைகாட்டியது ‘ASUS ROG Phone 6 Pro’ மொபைலையே.

 

2022 ஆம் ஆண்டின் சிறந்த போன்

இந்தியர்கள் உணவைத் தேர்ந்தெடுப்பது போல் தான் ஒவ்வொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டினரைப் போல் சில ரொட்டித்துண்டுகள், சிறிது இறைச்சியில் திருப்தி காண்பவர்கள் அல்ல நாம். பசியைத் தூண்ட ஆரம்பத்தில் சூப், இனிப்பு! அதன் பின் சோறு. அதற்கு இரண்டு, மூன்று வகை குழம்பு, அதோடு தொட்டுக் கொள்ள அவியல், பொறியல், கூட்டு, அப்பளம். அவை செரிக்க ரசம். அதன் பின் கொஞ்சம் தயிர். அதற்கு ஊறுகாய் என்று ஒருவேளை சாப்பாட்டிலேயே அவ்வளவு எதிர்பார்ப்பார்ப்போம். மாதக்கணக்கில் அல்லது சில வருடங்கள் நம்முடைய உடலில் ஒட்டாத உறுப்பாக இருக்கப்போகும் மொபைலில் என்னெவெல்லாம் எதிர்பார்ப்போம்? அப்படி பெரும்பான்மையானவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த 2022 ஆம் வருடத்தின் மிகச் சிறந்த மொபைலாக ‘Samsung Galaxy S22 Ultra 5G’ தேர்வானது.

The post மொபைல் விருது வகைகள் மற்றும் பரிந்துரைப் பட்டியல் 2022 – முடிவுகள் first appeared on .

]]>