BharOS https://www.91mobiles.com/tamil Mon, 23 Jan 2023 11:00:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 BharOS! இந்தியா உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் https://www.91mobiles.com/tamil/made-in-india-smartphone-operating-software-bharos-and-its-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=made-in-india-smartphone-operating-software-bharos-and-its-features Mon, 23 Jan 2023 10:38:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5273 யாருக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த புதிய BharOS ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இந்தியா மிகவும் கடுமையான தனி உரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகள் கொண்ட நிறுவனங்களுக்கும் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளது. முக்கியமான தகவல்களை கையாளும் பயனர்களுக்கு இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது என்று அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. BharOS என்பது நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட மொபைல் […]

The post BharOS! இந்தியா உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் first appeared on .

]]>

Highlights

  • இந்தியா தனக்கென்று சொந்தமாக பார்ஓஎஸ் (BharOS) என்ற ஒரு புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. 
  • இதை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Indian Institute of Technology) – ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) உருவாக்கியுள்ளது.

யாருக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்

இந்த புதிய BharOS ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இந்தியா மிகவும் கடுமையான தனி உரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகள் கொண்ட நிறுவனங்களுக்கும் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளது. முக்கியமான தகவல்களை கையாளும் பயனர்களுக்கு இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது என்று அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. BharOS என்பது நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும்.

பாதுகாப்பு

இது பயனர்களுக்கு அதிக சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அதேபோல், பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள ரகசியங்கள் வெளியில் கசியாமலும் இந்த ஓஎஸ் பார்த்துக் கொள்கிறதாம். ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்ற மொபைல் ஆப்ஸ்களை தேர்வு செய்து பயன்படுத்தவும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனுமதிக்கிறது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் நெருக்கமாக பணியாற்றப் போவதாக ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், இந்த BharOS நோ டிஃபால்ட் ஆப்ஸ் (No Default Apps – NDA) உடன் வருகிறது.

 

ஆப் ஸ்டோர்

இது பயனர்கள் தங்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட ஆப்ஸ்கள் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. அதேபோல், சாதனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நேட்டிவ் ஓவர் தி ஏர் (NOTA) அப்டேட்களையும் BharOS வழங்குகிறது. பார்ஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பாதுகாப்பாக இயங்கக்கூடிய மொபைல் ஆப்ஸ்களுக்கென்று தனியாக ஒரு பிரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீஸ் (PASS) அம்சத்தை இந்தக் குழு வழங்குகிறது. இதன் மூலம் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனி உரிமை தரங்களைப் பூர்த்தி செய்த மொபைல் ஆப்ஸ்களுக்கு மட்டுமே இங்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து டவுன்லோடு செய்யப்படும் ஆப்ஸ்களால் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மூன்றாம் நபர்கள் யாரும் உங்கள் போனின் தகவல்களை கண்காணிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

எப்போதும் அப்டேட்டட்

அதேபோல், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் – உங்கள் மொபைலில் உள்ள மொபைல் ஆப்ஸ்களுக்கு தேவையான அப்டேட்களை தானாகவே பதிவிறக்கம் செய்துகொள்கிறது. இதனால், மொபைல் அன்றைய தேதிக்கு ஏற்றார் போல, மிகச் சரியான அப்டேட் உடன் பாதுகாப்பாகச் செயல்படும் என்று கூறப்படுகிறது.

பார்ஓஎஸ் என்பது கூகுள் ஆப்கள் அல்லது சேவைகள் இல்லாத ஏஓஎஸ்பி (AOSP) அடிப்படையிலான இயங்குதளம் ஆகும்.ஏஎஸ்ஓபி (AOSP) என்றால் ஆண்ட்ராய்டு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்ட் (Android Open Source Project) என்று அர்த்தம். அதாவது தொழில்நுட்ப ரீதியாக, பார்எஸ் என்பது கூகுளுக்கு சொந்தமான ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ல் இருந்து பெரிய அளவில் வேறுபட்டது அல்ல! அதாவது இது பெயரளவில் மட்டுமே ஒரு உள்நாட்டு ஓஎஸ் ஆகும். ஆக இதன் கீழ் கிடைக்கும் அம்சங்கள் மற்றும் யூசர் இன்டர்பேஸ் (UI) எல்லாமே கூகுளின் ஸ்டாக் ஆண்ட்ராய்டு உடன் ஒற்றுப்போகும்.

பாதுகாப்பை வழங்கும் என்று கூறப்படும் பார்ஓஎஸ்-ல் ஒரு பெரிய பாதுகாப்பு ஓட்டை உள்ளது என்பதே நிதர்சனம். பார்ஓஎஸ்-க்கும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-க்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், பார்ஓஎஸ் ஆனது கூகுள் சேவைகளுடன் (ஆப்கள்) அனுப்பப்படாது.பார்ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஆப்களை இன்ஸ்டால் செய்யும் விருப்பம் கிடைப்பதால், அவர்கள் பல ஆப்களின் ஏபிகே (APK) வெர்ஷன்களையும் அணுகுவார்கள். அந்த ஆப்களில் ஏதேனும் ஒன்று மால்வேர் (Malware) ஆக இருந்தால், அது  ஹேக்கிங்கிற்கு வழிவகுக்கலாம். இந்த ஓஎஸ்  ஸ்மார்ட்போன்களுக்கு வர இன்னும் சிறிது காலம் ஆகலாம்.

The post BharOS! இந்தியா உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் first appeared on .

]]>