big billion day https://www.91mobiles.com/tamil Fri, 09 Sep 2022 13:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கூகுள் பிக்சல், நத்திங் போன் மீது ஆயிரக்கணக்கில் தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-google-pixel-6a-gets-massive-discounts-offers-flipkart-big-billion-days-sale/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-google-pixel-6a-gets-massive-discounts-offers-flipkart-big-billion-days-sale Fri, 09 Sep 2022 13:20:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2201 Flipkart Big Billion Days விற்பனை தொடர்பான சில தகவல்கள் மற்றும் சலுகை விபரங்களை நிறுவனம் இப்போது டீஸ் செய்யத் துவங்கியுள்ளது. பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு ஸ்மார்ட்போன் மீது பெரும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. Flipkart Big Billion Days விற்பனையின் போது மாபெரும் தள்ளுபடி கிடைக்கும் பட்டியலில் பிரீமியம் போன்களும் இடம் பெற்றுள்ளது. Nothing Phone (1) மற்றும் Google Pixel […]

The post கூகுள் பிக்சல், நத்திங் போன் மீது ஆயிரக்கணக்கில் தள்ளுபடி! first appeared on .

]]>

Flipkart Big Billion Days விற்பனை தொடர்பான சில தகவல்கள் மற்றும் சலுகை விபரங்களை நிறுவனம் இப்போது டீஸ் செய்யத் துவங்கியுள்ளது. பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு ஸ்மார்ட்போன் மீது பெரும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. Flipkart Big Billion Days விற்பனையின் போது மாபெரும் தள்ளுபடி கிடைக்கும் பட்டியலில் பிரீமியம் போன்களும் இடம் பெற்றுள்ளது.

Nothing Phone (1) மற்றும் Google Pixel 6a மீது நம்ப முடியாத சலுகை?

இந்த மாபெரும் தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் நத்திங் ஃபோன் (1) (Nothing Phone (1)) இடம்பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2022 ஆம் ஆண்டில் அதிகம் ஈர்க்கப்பட்டு, அதிகம் பேசப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் மாடல் இதுவாகும். பிளிப்கார்ட் விற்பனையின் போது இந்தியாவில் நத்திங் ஃபோன் (1) விலை ரூ.30,000-க்கும் குறைவாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. மாபெரும் தள்ளுபடி உடன் கிடைக்கும் மற்றொரு சாதனம் புதிய Google Pixel 6a ஆகும்.

இந்த இரண்டு பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் சலுகை விலை ஏற்கனவே பிளிப்கார்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. Flipkart Big Billion Days விற்பனையின் போது Nothing Phone (1) விலை அதிகமாக குறையும். சமீபத்தில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் விலை உயர்வைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Nothing Phone (1) விலை என்ன?

Glyph இடைமுகத்துடன் 900-க்கும் மேற்பட்ட LED விளக்குகளுடன் வரும் நத்திங்கின் முதல் ஸ்மார்ட்போன் Flipkart விற்பனையின் போது ரூ.28,999 என்ற விலையில் கிடைக்கும். இந்த விலையானது வங்கிச் சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகளை உள்ளடக்கியது என்பதை மறக்காதீர்கள். இந்த போன் இந்தியாவில் ரூ.32,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களில், நிறுவனம் அதன் விலையை ரூ.1,000 உயர்த்தியது என்பதையும் நாம் மறக்க முடியாது. தற்போது, Nothing Phone (1) சாதனத்தின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.33,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இது பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனையின் போது அதிக தள்ளுபடியைப் பெறுகிறது.

Google Pixel 6a மீது கிடைக்கும் தள்ளுபடி எவ்வளவு?

இதேபோல், சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a) மொபைல் கூட அதிக தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் பட்டியல் தகவல் குறிப்பிடுகிறது. இந்த Google Pixel 6a சாதனம் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இந்தியாவில் ரூ.43,999 என்று அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட் விற்பனையின் போது இது ரூ.27,699 என்ற விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெற இது ஒரு அரிய வாய்ப்பு. இந்த சலுகை விலையில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும் மற்ற சலுகைகளும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிரீமியம் மாடல்களாக வருகிறது. உங்களுக்கும் ஒரு புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால் இந்த சிறப்பு விற்பனையைத் தவறவிடாதீர்கள்.

The post கூகுள் பிக்சல், நத்திங் போன் மீது ஆயிரக்கணக்கில் தள்ளுபடி! first appeared on .

]]>