bolero https://www.91mobiles.com/tamil Fri, 05 Aug 2022 12:18:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமாகிறது பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷன் https://www.91mobiles.com/tamil/electric-mahindra-bolero-pik-up-teased/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=electric-mahindra-bolero-pik-up-teased Fri, 05 Aug 2022 12:18:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1410 மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக பிரிட்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா தனது பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. டீசர் வீடியோவின் படி எலெக்ட்ரிக் பொலிரோ […]

The post அறிமுகமாகிறது பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷன் first appeared on .

]]>

  • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
  • சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக பிரிட்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது.

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா தனது பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

டீசர் வீடியோவின் படி எலெக்ட்ரிக் பொலிரோ பிக்கப் டிரக் முழுக்க லைட்டிங் செய்யப்பட்டு சில பாகங்கள் மட்டும் காட்சியளிக்கிறது. இதில் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த வாகனத்தில் பழைய மஹிந்திரா லோகோ இடம்பெற்று இருக்கிறது. புது எலெக்ட்ரிக் பொலிரோ மாடல் பிக்கப் வாகனங்களின் எதிர்காலம் என டீசரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புது பொலிரோ பிக்கப் எலெக்ட்ரிக் மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. புது எலெக்ட்ரிக் வாகனங்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயணிகள் வாகனம் மட்டுமின்றி பிக்கப் டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கி விட்டது. அந்த வரிசையில், பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக், வர்த்தக பிரிவில் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயணிகள் வாகன பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இருக்கும் வரவேற்பினை உறுதிசெய்யும் அம்சமாக இன்னொரு நிகழ்வையும் காணலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐகியூப் உற்பத்தியில் அசத்தி வருகிறது. இந்த ஸ்கூட்டர் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் மாடல் இந்தியாவில் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐகியூப் மாடல் தொடர்ந்து வரவேற்பை பெற பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஐகியூப் மாடலின் புது வேரியண்ட் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான ஆப்ஷன்களை வழங்குகிறது. இத்துடன் இதன் பேஸ் வேரியண்ட் தற்போது அதிக ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இதன் விலை அதிக மாற்றம் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சந்தையில் போட்டியை பலப்படுத்தி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து மீண்டும் ரூ. 1000 கோடி முதலீடு செய்து புது வாகனங்கள் மூலம் எலெக்ட்ரிக் மயமாக்கலை நீட்டிக்க டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜூன் 2022 மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 4 ஆயிரத்து 667 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருந்தது. இது மே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 030 யூனிட்களை விட அதிகம் ஆகும். அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியில் 77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

The post அறிமுகமாகிறது பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷன் first appeared on .

]]>