Booking open https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 07:52:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் முன்பதிவு துவங்கியது! https://www.91mobiles.com/tamil/hyundai-ioniq-5-electric-car-unveiled-in-india-booking-launch-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-ioniq-5-electric-car-unveiled-in-india-booking-launch-details Thu, 22 Dec 2022 07:08:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4478 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) செக்மெண்ட்டில், இந்த கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதுடன், இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய இணையதளம் https://clicktobuy.hyundai.co.in/IONIQ/#/selectacar ப்ளாட்பார்ம் இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் […]

The post 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் முன்பதிவு துவங்கியது! first appeared on .

]]>

Highlights

  • ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5)எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புக்கிங்கையும் துவங்கி இருக்கிறது.
  • இந்த ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) செக்மெண்ட்டில், இந்த கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதுடன், இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய இணையதளம்

https://clicktobuy.hyundai.co.in/IONIQ/#/selectacar

ப்ளாட்பார்ம்

இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக கோனா எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் (Hyundai Kona) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரானது, கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுடன் நேருக்கு நேராக போட்டியிடும். ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே E-GMP (Electric – Global Modular Platform) பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

பேட்டரி

இந்திய சந்தைக்கான ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும். 350 kW DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10ல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வசதிகள்

அத்துடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) போன்ற பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான வகையில், இன்னும் பல்வேறு வசதிகளையும் (Features) ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இதில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், போஸ் சவுண்ட் சிஸ்டம், வெண்டிலேட்டட் இருக்கைகள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

கூடுதல் வசதிகள்

அத்துடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் டேஷ்போர்டில், சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இன்ஜின் பார்க்கிங் பிரேக், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

 

நிறம்

இதற்கிடையே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பூட் ஸ்பேஸ் 571 லிட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ராவிட்டி கோல்டு மேட், ஆப்டிக் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் பேர்ல் என 3 கலர் ஆப்ஷன்களில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

விலை

ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில்தான் (2023 Auto Expo) விலைகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவுள்ளதால், ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்க முடியும். குறிப்பாக கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாக இருக்கலாம்.

The post 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் முன்பதிவு துவங்கியது! first appeared on .

]]>
நாளை முன்பதிவை துவங்குகிறது லாவா எக்ஸ்3. https://www.91mobiles.com/tamil/lava-x3-smartphone-pre-booking-from-20th-december-launch-next-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lava-x3-smartphone-pre-booking-from-20th-december-launch-next-week Mon, 19 Dec 2022 11:47:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4395 லாவா நிறுவனம் அடுத்த வாரம் லாவா எக்ஸ்3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளை முதல் (டிசம்பர் 20-ம் தேதி) மதியம் 12 லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Lava Probuds N11 Neckband இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த லாவா எக்ஸ்3 […]

The post நாளை முன்பதிவை துவங்குகிறது லாவா எக்ஸ்3. first appeared on .

]]>

லாவா நிறுவனம் அடுத்த வாரம் லாவா எக்ஸ்3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளை முதல் (டிசம்பர் 20-ம் தேதி) மதியம் 12 லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Lava Probuds N11 Neckband இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.5 அங்குல எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜியா? 5ஜியா?

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவு உள்ளதா? அல்லது 5ஜி ஆதரவு உள்ளதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்நிறுவனம் தற்போது 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதேபோல் இனிமேல் பல நிறுவனங்கள் 5ஜி போன்களை மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை வந்துவிட்டது.

கேமரா

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.

சிப்செட்

பட்ஜெட் விலைக்கு தகுந்த சிப்செட் வசதி தான் இதில் உள்ளது. அதாவது 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் ஆதரவுடன் இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதோடு ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே பாஸ்ட் சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

மெமரி

3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா எக்ஸ்3 போன். மேலும் கூடுதலாக, மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதோடு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருப்பதால் இந்த போனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

The post நாளை முன்பதிவை துவங்குகிறது லாவா எக்ஸ்3. first appeared on .

]]>