bounce https://www.91mobiles.com/tamil Tue, 07 Mar 2023 13:14:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! https://www.91mobiles.com/tamil/low-budget-e-scooter/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=low-budget-e-scooter Tue, 06 Dec 2022 06:26:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4099 எலக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே விலை அதிகமாக இருக்கும் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. உண்மையைச் சொல்வதானால், பெட்ரோல் வாகனங்களை விட விலை குறைந்த தரமான எலக்ட்ரிக் வாகனங்கள் நிறையவே வந்துவிட்டன. அப்படி தற்போது கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். அவோன் இ-ஸ்கூட்டர்: ரூ45,000 இந்தியாவில் மிகக் குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் அவோன் இ ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் ஒன்று. இதற்கு ரூ. […]

The post குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
எலக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே விலை அதிகமாக இருக்கும் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. உண்மையைச் சொல்வதானால், பெட்ரோல் வாகனங்களை விட விலை குறைந்த தரமான எலக்ட்ரிக் வாகனங்கள் நிறையவே வந்துவிட்டன. அப்படி தற்போது கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

அவோன் இ-ஸ்கூட்டர்: ரூ45,000

இந்தியாவில் மிகக் குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் அவோன் இ ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் ஒன்று. இதற்கு ரூ. 45 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 215 வாட் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 24 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும். இது சற்று குறைவான வேக திறன் என்பதால் இதற்கு பதிவு சான்று மற்றும் லைசென்ஸ் கட்டாயம் இல்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 65 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதற்காக அவோன் நிறுவனம் 48 V / 20 Ah ஏஎச் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. மிகக் குறைவான தூர இடைவெளியைக் கொண்ட பயணங்களுக்கு உதவும் விதமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவோன் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. அருகில் உள்ள கடைக்கு சென்று வருவது, குழந்தைகளை பள்ளிக்கூடம் மற்றும் டியூசன் அழைத்துச் செல்லுதல் போன்ற பயன்பாட்டை மையமாகக் கொண்டே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infnity E1): ரூ. 45,099

அதிக பிரீமியம் தர அம்சங்களுடன் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்டில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 மாடலும் ஒன்று. இந்த வாகனத்தை பவுன்ஸ் நிறுவனம் பேட்டரி உடனும், பேட்டரி இல்லாமலும் என்று இரு விதமான தேர்வுகளில் விற்பனை செய்து வருகிறது. இதில் பேட்டரி இல்லாத தேர்வே குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். அதன் விலை ரூ. 45,099 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பேட்டரியை நிறுவனம் சந்தா திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ளலாம். 48 V/ 39 Ah பேட்டரியை சேவையின்கீழ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும். இது முழு சார்ஜ்க்கு 85 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஃபிளாஷ் (Hero Electric Flash): ரூ. 46,640

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மலிவு விலை கொண்ட தயாரிப்பாக ஃபிளாஷ் இருக்கினறது. இதன் இப்போதைய விலை ரூ. 46,640 ஆகும். இதன் உயர்நிலை தேர்வே ரூ. 59,640க்குதான் விற்கப்படுகின்றது. இந்த விலை விபரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ ஃபிளாஷின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ மட்டுமே. இதுவும் முழு சார்ஜ்க்கு 85 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

ஏவன் டிரென்ட் இ (Avan trend E): ரூ. 56,900

இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் ஏவன் டிரென்ட் இ-யும் ஒன்று. ஏவன் டிரெண்ட், ஒற்றை பேட்டரி பேக் அல்லது இரட்டை பேட்டரி பேக் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் ஒற்றை பேட்டரி பேக்கைக் கொண்டதன் விலையே ரூ. 56,900 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். அதுவே, இரட்டை பேட்டரி பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டிரெண்ட் இ தேர்வை வாங்கினால் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த இரு தேர்வுகளிலும் 800 வாட் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஈவி ஆஹாவா (eeve ahava): ரூ. 62,499

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று அதிக விலைக் கொண்ட தேர்வு ஆகும். இதன் விலை ரூ. 62,499 ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதிக விலைக்கேற்ப அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு, ஜியோ டேக்கிங் மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். ஆகையால், இதை வைத்திருக்க பதிவு சான்று தேவைப்படாது. அதேபோல் இதனை இயக்க லைசென்ஸ் கட்டாயம் தேவையில்லை. ஓர் முழு சார்ஜில் 60 கிமீ முதல் 70 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய 60 V/ 27 Ah பேட்டரி பேக்கே ஈவி ஆஹாவாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு வசதிகளாக பாட்டில் கேஸ், புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம் மற்றும் யுஎஸ்பி போர்ட் போன்றவற்றைக் கூறலாம்.

The post குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>