buzz https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:38:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ 95,000 ரூபாயில் 90கிமீ ரேஞ்ச், 55கிமீ டாப்ஸ்பீடு – கலக்கும் ‘பஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/stella-moto-buzz-e-scooter/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=stella-moto-buzz-e-scooter Fri, 09 Dec 2022 05:39:20 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4195 பஸ் (Buzz) கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டெல்லா மோட்டோ (Stella Moto) நிறுவனம் பஸ் (Buzz) எனும் அதன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஆர்டிஓ-வால் பாதுகாப்பானது என அங்கீகாரம் செய்யப்பட்ட பேட்டரி பேக் உடன் அந்த வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது. வடிவமைப்பு ஸ்டெல்லா மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்ககும் பஸ் (Buzz) ஸ்கூட்டரின் அறிமுக […]

The post ரூ 95,000 ரூபாயில் 90கிமீ ரேஞ்ச், 55கிமீ டாப்ஸ்பீடு – கலக்கும் ‘பஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>

பஸ் (Buzz)

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டெல்லா மோட்டோ (Stella Moto) நிறுவனம் பஸ் (Buzz) எனும் அதன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஆர்டிஓ-வால் பாதுகாப்பானது என அங்கீகாரம் செய்யப்பட்ட பேட்டரி பேக் உடன் அந்த வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

வடிவமைப்பு

ஸ்டெல்லா மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்ககும் பஸ் (Buzz) ஸ்கூட்டரின் அறிமுக விலை ரூ. 95,000 ஆகும். கிரே, மேட் ப்ளூ, ரெட் மற்றும் பிரவுன் என 4 விதமான நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் வாரண்டியை வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. பஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த இருசக்கர வாகனமாக ஸ்டெல்லா மோட்டோ உருவாக்கி இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஹெட்லைட் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வால் பகுதி லைட் ஆகியவை தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றன.

பேட்டரி

இந்த வாகனத்தில் 2.16 kWh பேட்டரி ‘ஏ’ கிரேட் ரக லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் அனைத்து விதமான கால நிலைக்கு ஏற்ற ஓர் பேட்டரி இதுவாகும். என்ன மாதிரியான உஷ்னமான சூழல் நிலவினாலும் இந்த பேட்டரி ஆபத்தான சூழலைச் சந்திக்காது என ஸ்டெல்லா மோட்டோ தெரிவித்துள்ளது. இதற்காக நான்கு விதமான டெம்ப்ரேச்சர் சென்சார்கள் இந்த பேட்டரியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை பேட்டரி அதிக உஷ்னமாக இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக வாகனத்தின் பவரை கட்-ஆஃப் செய்துவிடும். மைக்ரோ புராசஸர் ரக ஸ்மார்ட பிஎம்எஸ் சிஸ்டத்துடன் இந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிஸ்டம் பேட்டரியின் மின்சார திறனை மானிட்டர் செய்யும்.

மைலேஜ்

இந்த பேட்டரி ஓர் முழு சார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டது. இத்துடன் உயர் வேக திறனை வெளியேற்றக் கூடிய 2 KW பிஎல்டி மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும்.
இதன் லோடு கெபாசிட்டி 150 கிலோவாகும். கணிசமான அளவு லோடு ஏற்றி செல்லுதல் மற்றும் டெலிவரி சேவை போன்றவற்றிற்கு இந்த வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, அரசின் மின் வாகன ஊக்குவிப்பு முயற்சியால் அவற்றில் எண்ணிக்கை தற்போது உச்ச அளவில் உயர்ந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே புதுமுக நிறுவனமான ஸ்டெல்லா மோட்டா அதன் புதிய பஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது.

போட்டி

குறிப்பாக, தனி நபர் மட்டுமின்றி டெலிவரி சேவையில் உள்ளவர்களும் இந்த வாகனத்தை பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருப்பது அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்டெல்லா பஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் அனைத்தும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஆம்பியர் மற்றும் கோமகி போன்ற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

The post ரூ 95,000 ரூபாயில் 90கிமீ ரேஞ்ச், 55கிமீ டாப்ஸ்பீடு – கலக்கும் ‘பஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>