camon 19 pro 5g https://www.91mobiles.com/tamil Tue, 09 Aug 2022 08:04:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமாகிறது டெக்னோ கேமன் 19 ப்ரோ 5G! https://www.91mobiles.com/tamil/new-mid-range-5g-smartphone-with-64mp-night-camera-tecno-camon-19-pro-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-mid-range-5g-smartphone-with-64mp-night-camera-tecno-camon-19-pro-india Tue, 09 Aug 2022 08:02:39 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1468 டெக்னோ இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதம் Pova 3 போனை அறிமுகம் செய்தது. பின்னர் ஜூலை மாதம் Camon 19 மற்றும் Camon 19 Neo மாடல்களை வெளியிட்டது. சமீபத்தில் பட்ஜெட் விலையில் Spark 9T போனையும் அறிமுகம் செய்தது. டெக்னோ நிறுவனத்தின் கீழ் ஃபாண்டம், கேமன், ஸ்பார்க், போவா, பாப் என்கிற 5 சீரீஸ்களின் கீழ், பல வகையான விலைகளின் கீழ், பல வகையான ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. புதிய Mid-range 5G Phone! டெக்னோ […]

The post அறிமுகமாகிறது டெக்னோ கேமன் 19 ப்ரோ 5G! first appeared on .

]]>

டெக்னோ இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதம் Pova 3 போனை அறிமுகம் செய்தது. பின்னர் ஜூலை மாதம் Camon 19 மற்றும் Camon 19 Neo மாடல்களை வெளியிட்டது. சமீபத்தில் பட்ஜெட் விலையில் Spark 9T போனையும் அறிமுகம் செய்தது.

டெக்னோ நிறுவனத்தின் கீழ் ஃபாண்டம், கேமன், ஸ்பார்க், போவா, பாப் என்கிற 5 சீரீஸ்களின் கீழ், பல வகையான விலைகளின் கீழ், பல வகையான ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.

புதிய Mid-range 5G Phone!

டெக்னோ இந்தியா, கேமன் சீரீஸின் கீழ் 19 ப்ரோ என்கிற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த போனைப் பார்க்கும் போதே, அது ஒரு மிட் ரேன்ஜ் மாடல் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

டெக்னோ கேமன் 19 ப்ரோ 5ஜி ஆனது ஒரு கேமரா-சென்ட்ரிக் ஸ்மார்ட்போனாக (அதாவது கேமராவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்மார்ட்போனாக) அறிமுகமாகிறது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, டெக்னோ கேமன் ப்ரோ 19 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது “மிகச்சிறந்த லோ லைட் அனுபவத்துடன்” அறிமுகம் செய்யப்படும். இதில் முதன்மை கேமரா 64 மெகாபிக்சலுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் RGBW + (G + P) மற்றும் 64MP நைட் கேமராவானது, குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படங்களை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

டெக்னோ மொபைல் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியான டீஸர்களின் படி, டெக்னோ கேமன் 19 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 0.98 மிமீ என்கிற அளவிலான, மிகவும் மெலிதான பெசல்களுடன் வரும். மேலும் இதன் டிஸ்பிளேவின் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசனை பெற்றிருக்கும். வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஆனது ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் அமைந்துள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்க பேனலில் இரண்டு வட்ட வடிவிலான கேமரா ரிங்ஸ் உள்ளன. ஆனால் அதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. அதாவது முதல் ரிங்கில், நைட் மோட் உடன் வரும் 64MP RGBW மெயின் கேமரா சென்சார் உள்ளது மற்றும் இரண்டாவது ரிங்கில் இரண்டு லென்ஸ்கள் உள்ளன. Camon 19 Pro 5G ஆனது 5G இணைப்புக்கான ஆதரவுடன் MediaTek Dimensity 810 ப்ராசஸர் உடன் வரும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர, டெக்னோ இந்தியா வெளியிட்ட டீஸர்கள் வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், அதனைக் கொண்டு நமது கணிப்பின் படி இதன் அம்சங்களை யூகிக்க முடிகிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய, 6.8 அங்குல அளவிலான LCD FHD+ டிஸ்ப்ளேவை கொண்டு இருக்கிறது. இது 8 GB RAM மற்றும் 256 GB சேமிப்புத்திறனையும் கொண்டுள்ளது. க்ளோபல் வேரியண்ட் ஆனது முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது, அதை நாம் இந்திய மாடலிலும் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கும். இந்த மொபைல் Android 12 OS மூலம் இயங்கும்.

டெக்னோ கேமன் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பதும் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இதுவொரு மிட்-ரேஞ்ச், 5ஜி மொபைல் என்பதால், சுமார் ரூ.25,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அறிமுகமாகிறது டெக்னோ கேமன் 19 ப்ரோ 5G! first appeared on .

]]>