carvaan https://www.91mobiles.com/tamil Thu, 08 Sep 2022 17:12:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பாடல்களோடு வரும் போன் https://www.91mobiles.com/tamil/first-mobile-phone-from-saregama-carvaan-with-1500-pre-loaded-songs/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=first-mobile-phone-from-saregama-carvaan-with-1500-pre-loaded-songs Thu, 08 Sep 2022 17:12:13 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2173 நூற்றுக்கணக்கான பழைய ‘எவர்-க்ரீன்’ பாடல்களை ப்ரீ-லோட் செய்து, அதையே ஒரு முக்கிய வியாபாரமாகச் செய்யும் ஒரு நிறுவனம் ‘சரிகம கார்வான்’! தற்போது இந்த நிறுவனம் ரேடியோ பெட்டி வடிவிலான ம்யூசிக் பிளேயரை தொடந்து அதன் முதல் மொபைல் போனையும் அறிமுகம் செய்துள்ளது! சரிகம கார்வான் அறிமுகம் செய்துள்ள அதன் முதல் மொபைல் போனும் கூட நூற்றுக்கணக்கான பழைய ‘எவர்-க்ரீன்’ பாடல்களை ப்ரீ-லோட் செய்கிறது. இந்த மொபைல் போனில் வேறு என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? அதன் விலை என்ன? […]

The post பாடல்களோடு வரும் போன் first appeared on .

]]>

நூற்றுக்கணக்கான பழைய ‘எவர்-க்ரீன்’ பாடல்களை ப்ரீ-லோட் செய்து, அதையே ஒரு முக்கிய வியாபாரமாகச் செய்யும் ஒரு நிறுவனம் ‘சரிகம கார்வான்’! தற்போது இந்த நிறுவனம் ரேடியோ பெட்டி வடிவிலான ம்யூசிக் பிளேயரை தொடந்து அதன் முதல் மொபைல் போனையும் அறிமுகம் செய்துள்ளது!

சரிகம கார்வான் அறிமுகம் செய்துள்ள அதன் முதல் மொபைல் போனும் கூட நூற்றுக்கணக்கான பழைய ‘எவர்-க்ரீன்’ பாடல்களை ப்ரீ-லோட் செய்கிறது. இந்த மொபைல் போனில் வேறு என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? அதன் விலை என்ன? இந்த கார்வான் மொபைலை எங்கு வாங்கலாம்? எல்லாவற்றையும் விரிவாக பார்க்கலாம்!

சரிகம கார்வான் மொபைல் ஆனது ஒரு கீபேட் மொபைல் போன் ஆகும். அதாவது இதுவொரு எளிமையான என்ட்ரி-லெவல் பீச்சர் போன். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளை ஆதரிக்கும் இந்த கார்வான் மொபைல், 2.4 அங்குலம் மற்றும் 1.8 அங்குலம் என இரண்டு திரை அளவுகளில் வருகிறது.

1500 பாடல்கள்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த மொபைல் போன் ஆனது லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, கிஷோர் குமார், முகமது ரஃபி மற்றும் பல பழம்பெரும் கலைஞர்களால் பாடப்பட்ட எவர் க்ரீன் பாடல்களை ப்ரீலோட் செய்தே வருகிறது. இந்த மொபைலில் ப்ரீ-லோடட் செய்யப்பட்ட இந்த பாடல்களை கேட்க இண்டர்நெட் வசதி தேவையில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், பாடல்களுக்கு இடையே உங்களை தொந்தரவு செய்யும் வகையில் எந்த விதமான விளம்பர இடைவேளைகளும் இருக்காது!

பாடல்கள் மட்டும் அல்ல..

1500 ப்ரீ-லோடட் பாடல்களை தவிர்த்து, சரிகம கார்வான் மொபைல் போன் ஆனது வயர்லெஸ் எஃப்எம், டிஜிட்டல் கேமரா, எல்இடி டார்ச், ஆக்ஸ் அவுட், மல்டி லாங்குவேஜ் சப்போர்ட், வாய்ஸ் ரெக்கார்டிங், கால் ரெக்கார்டிங், டூயல் சிம், 8 ஜிபி மெமரி கார்டு போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

இந்த மொபைல் போனில் 2ஜிபி சேமிப்புத்திறனும் இருக்கிறது. இதில் உங்களுக்கு விருப்பப்பட்ட பாடல்கள், வீடியோக்கள் அல்லது போட்டோக்களை சேமித்து வைக்க முடியும்

விலை?

2500mAh பேட்டரி, 2ஜிபி ரேம் மற்றும் 32எம்பி ஸ்டோரேஜ் மற்றும் மீடியாடெக் ப்ராசஸர் உடன் வரும் இந்த மொபைல் போன் 1 வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இதன் 2.4 அங்குல டிஸ்பிளே மாடல் ஆனது ரூ.2490 க்கும், 1.8 அங்குல டிஸ்பிளே மாடல் ஆனது ரூ.1990 க்கும் வாங்க கிடைக்கிறது. இது எமரால்டு கிரீன், கிளாசிக் பிளாக் மற்றும் ராயல் ப்ளூ என்கிற 3 நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

எங்கு வாங்கலாம்?

புதிய சரிகம கார்வான் மொபைல் போனை பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்களான Amazon மற்றும் Flipkart வழியாக வாங்க முடியும். மேலும் இது நிறுவனத்தின் சொந்த வலைதளமான saregama.com வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

The post பாடல்களோடு வரும் போன் first appeared on .

]]>