charging https://www.91mobiles.com/tamil Thu, 05 Jan 2023 12:27:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 போனை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை! https://www.91mobiles.com/tamil/avoid-this-4-mistakes-while-charging-your-smartphone/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=avoid-this-4-mistakes-while-charging-your-smartphone Thu, 05 Jan 2023 12:51:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4747 ஸ்மார்ட்போனை சுமார் 300 முறை சார்ஜ் (Charge) செய்த பிறகு, அந்த ஸ்மார்ட்போனிற்குள் என்ன நடக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை மொபைல் போன் வல்லுநர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நல்ல செய்தி என்னவென்றால், குறிப்பிட்ட சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி? குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை (Smartphone) எப்படி பாதுகாப்பது? என்பது பற்றியும் வழிகாட்டி இருக்கின்றனர். ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல் சார்ஜ் செய்யும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரியானது அதன் […]

The post போனை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை! first appeared on .

]]>

ஸ்மார்ட்போனை சுமார் 300 முறை சார்ஜ் (Charge) செய்த பிறகு, அந்த ஸ்மார்ட்போனிற்குள் என்ன நடக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை மொபைல் போன் வல்லுநர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நல்ல செய்தி என்னவென்றால், குறிப்பிட்ட சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி? குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை (Smartphone) எப்படி பாதுகாப்பது? என்பது பற்றியும் வழிகாட்டி இருக்கின்றனர்.

ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல் சார்ஜ் செய்யும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரியானது அதன் அதிகபட்ச சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சியை (Charge / Discharge Cycles) எட்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளை கடந்த பிறகு, அடுத்தடுத்த முறை உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது, உள்ளிருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி ஆனது மெல்ல மெல்ல பலவீனமாக தொடங்கும்.

இதன் விளைவாக பேட்டரியின் திறன் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே போகும். ஒருகட்டத்தில், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தாலும் கூட, அது நீண்ட நேரம் நீடிக்காமல் அடிக்கடி தீர்ந்து போகும். இந்த சிக்கலை தவிர்க்க விரும்பினால், உங்கள் மொபைலைச் சார்ஜ் போடும் போது கீழ் வரும் 4 தவறுகளில் ஒன்றைக்கூட செய்ய வேண்டாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்!

01. 20% மற்றும் 100% சார்ஜ்!

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் ஆனது10% முதல் 20%-ஐ அடையும் போது மட்டுமே அதை சார்ஜ் செய்ய வேண்டும். 30% அல்லது 45% எல்லாம் ‘லோ பேட்டரி’ (Low Battery) ஆகி விடாது. அதே போல 2% அல்லது 3% வரட்டும் என்று காத்திருந்து, அதன் பின்னர் சார்ஜ் செய்வதும் தவறு தான்! அதை விட முக்கியமாக, சார்ஜ் போடும் போது உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் ஆனது 100% ஐ எட்டட்டும், அப்போது தான் அது முழுமையாக சார்ஜ் (Full Charge) ஆனதாக கணக்கு என்றும் காத்திருக்க வேண்டாம். 90% க்கு மேல் சென்றதுமே சார்ஜ் செய்வதை நிறுத்திக்கொள்ளவும். 300 சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளுக்கு பின்னர், மேற்குறிப்பிட்ட பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் பேட்டரி லைஃப் (Battery Life) பெரிய அளவில் பாதிக்கப்படாது!

02. ஒரிஜினல் VS ஃபேக்

தற்போது வரையிலாக, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன், அதற்கு ஏற்ற சார்ஜர்களை (Charger) அனுப்புகிறது. ஆனால் இந்த வழக்கம் கூடிய விரைவில் மாற உள்ளது. அதாவது, வரும் நாட்களில் மொபைல் பிராண்டுகள் தத்தம் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை அனுப்புவதை நிறுத்த உள்ளனர் மற்றும் சார்ஜர்களை தனித்தனியாக விற்பனை செய்ய உள்ளனர். அந்த நேரத்திலும் சரி (தற்போதும் சரி) உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணக்கமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு சார்ஜரை தான் வாங்குகிறீர்கள் / பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று போலியான சார்ஜர்களை (Fake Chargers) பயன்படுத்த வேண்டாம். ஏற்கனவே பலவீனமாக உள்ள உங்களுடைய ஸ்மார்ட்போன் பேட்டரி ஆனது இன்னும் பலவீனமாகும்; மோசமாகும்!

03. ஓவர் நைட் சார்ஜிங்

சமீப காலமாக வெளியாகும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆனது 100% என்கிற பேட்டரி லெவலை எட்டியதும் தனக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வதை நிறுத்தி விடுகின்றன. ஆனால் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும் சார்ஜர் ஆனது வேலை செய்து கொண்டே தான் இருக்கும்; அது உங்கள் பேட்டரியை பாதிக்காமல் போகலாம்; ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனை பாதிக்கலாம். எனவே ஒரு இரவு முழுவதும், ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் செய்யும் (Overnight Charge) வழக்கம் / பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை உடனே நிறுத்திக்கொள்ளவும்.

04. ஹை டெம்ப்ரேச்சர்

ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் லைஃப்டைம் மற்றும் அதன் சகிப்புத்தன்மைக்கு – அந்த ஸ்மார்ட்போனை சுற்றியுள்ள வெப்பநிலை மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. ஏனென்றால், அதிக வெப்பநிலையின் கீழ் வைக்கப்படும் போது உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் பேட்டரியானது அதிக அழுத்தத்தின் கீழ் வைக்கப்படுகிறது மற்றும் குறைந்த வெப்பநிலையில் இருப்பதை விட மிகவும் வேகமான முறையில் அதன் திறனையும் (பேட்டரி லெவலை) இழக்கிறது! எனவே, உங்கள் ஸ்மார்ட்போனை வெயிலில் வைப்பது; அடுப்பின் அருகே வைப்பது; அதிக நேரம் கார் டிக்கி அல்லது ஸ்கூட்டர் டிக்கியில் வைப்பது போன்றவைகளை தவிர்க்கவும்!

The post போனை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை! first appeared on .

]]>
மொபைல் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போகுதா? https://www.91mobiles.com/tamil/major-reasons-behind-why-your-mobile-phone-battery-draining-very-fast-and-how-to-stop-it/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=major-reasons-behind-why-your-mobile-phone-battery-draining-very-fast-and-how-to-stop-it Tue, 11 Oct 2022 07:30:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2915 ‘எவ்வளவு சார்ஜ் போட்டாலும் மொபைல்ல சார்ஜ் நிற்கிறதே இல்ல’ இது நாம அடிக்கடி கேக்குற வார்த்தைகள். ஒரு மொபைல் போனின் பேட்டரி சீக்கிரமாக காலி ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய 7 காரணங்கள் உள்ளன! தெரிந்தோ தெரியாமலோ நாமெல்லாம் செய்யும் தவறுகள் என்னென்ன? அதை சரி செய்வது எப்படி? பார்க்கலாம்! 01. டிஸ்பிளே ஒரு மொபைல் போனின் பேட்டரி வேகமாக ‘ட்ரை’ ஆவதற்கு.. மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று – […]

The post மொபைல் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போகுதா? first appeared on .

]]>

‘எவ்வளவு சார்ஜ் போட்டாலும் மொபைல்ல சார்ஜ் நிற்கிறதே இல்ல’ இது நாம அடிக்கடி கேக்குற வார்த்தைகள். ஒரு மொபைல் போனின் பேட்டரி சீக்கிரமாக காலி ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய 7 காரணங்கள் உள்ளன! தெரிந்தோ தெரியாமலோ நாமெல்லாம் செய்யும் தவறுகள் என்னென்ன? அதை சரி செய்வது எப்படி? பார்க்கலாம்!

01. டிஸ்பிளே

ஒரு மொபைல் போனின் பேட்டரி வேகமாக ‘ட்ரை’ ஆவதற்கு.. மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று – அதிகப்படியான டிஸ்பிளே ப்ரைட்னஸ்! ப்ரைட்னஸை அதிகபட்சமாக வைத்திருப்பது வசதியாக தோன்றலாம்; குறிப்பாக நீங்கள் சூரிய வெளிச்சத்தின் கீழ் இருக்கும்போது, ஆனால் இது உங்கள் பேட்டரியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறக்க வேண்டாம்! டிஸ்பிளேவை ஹை-ப்ரைட்னஸில் வைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், அதை உடனே மாற்றிக்கொள்ளவும். முடிந்தால், ஆட்டோ ப்ரைட்னஸ் விருப்பத்தை எனேபிள் செய்யவும். மொபைல் செட்டிங்ஸ் மூலம் இதைச் செய்யலாம். இது உட்புற மற்றும் வெளிப்புற ஒளி வேறுபாடுகளை தானாகவே கண்டறிந்து அதற்கேற்றஜ்படி ப்ரைட்னஸை சரி செய்து, முடிந்த வரை உங்கள் பேட்டரியை சேமிக்கும்!

02. பேக் கிரவுண்ட் செயலிகள்

நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் கூட சில ஆப்கள், பேக்கிரவுண்டில் வேலை செய்துகொண்டே தான் இருக்கும்! எடுத்துக்காட்டிற்கு விபிஎன், ஆன்டி-வைரஸ், ஹெல்த் மற்றும் காலெண்டர் தொடர்பான ஆப்கள் எப்போதுமே ஆக்டிவ் ஆகவே இருக்கும்! பேக்கிரவுண்டில் செயல்படும் ஆப்கள் ஆனது, உங்களின் தலையீடு இல்லாமலேயே உங்களுக்கான வேலைகளை செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே போல உங்கள் போனின் பேட்டரியை தாறுமாறாக “குடிக்கும்” என்பதும் உண்மை. எனவே முடிந்தவரை பேக்கிரவுண்டில் செயல்படும் ஆப்களை – மொபைல் செட்டிங்ஸ் வழியாக – முடக்கலாம். முடிந்தால் தேவை இல்லாத ஆப்களை அன்இன்ஸ்டால் கூட செய்யலாம்.

3. பிக்சர்-இன்-பிக்சர்

உங்களில் பலருக்கும் பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) என்றால் என்ன என்று தெரிந்து இருக்கும். ஒருவேளை அறியாதோர்களுக்கு – வேறொரு ஆப்பில் இருந்து, எடுத்துக்காட்டிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறாமலேயே யூட்யூப் வீடியோவை பார்ப்பீர்கள் அல்லவா? அதுதான் பிஐபி (பிக்சர்-இன்-பிக்சர்) மோட் ஆகும். இந்த வசதியின் பின்னணியில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால்.. இது உங்கள் போன் பேட்டரியை வேகமாக காலி செய்யும்! உங்கள் மொபைல் செட்டிங்ஸ் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்களில் இருந்து பிக்சர்-இன்-பிக்ச்சர் மோட்-ஐ முடக்க முடியும் என்பதால்.. பெரிய அளவில் PIP mode-இன் தேவை இல்லாதவர்கள் அதை டிஸேபிள் செய்யலாம்!

4. கனெக்டெட்!

நம்மில் பலரும்.. இரவு நேரங்களில் கூட மொபைல் டேட்டாவை அல்லது வைஃபை கனெக்ஷனை ஆப் / டிஸ்கனெக்ட் செய்யாமல்.. 24 மணி நேரமும் ஆன்லைனில் / இண்டர்நெட்டில் இருக்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம். உங்கள் போன் 24 மணி நேரமும் வைஃபை அல்லது மொபைல் டேட்டாவுடன் கனெக்ட் ஆகி இருக்கும் பட்சத்தில், அது உங்கள் மொபைலின் பேட்டரியை கணிசமாக குறைக்கும். ஏனென்றால், நீங்கள் தூங்கிவிட்டாலும் கூட, உங்கள் மொபைலால் ஒய்வுஎடுக்க முடியாது. தொடர்ச்சியான நோட்டிபிக்கேஷன்ஸ், அலெர்ட்ஸ், பேக்கிரவுண்ட் அப்டேட்ஸ் மற்றும் பலவற்றை அது சந்திக்க நேரிடும்! எனவே அவ்வப்போது.. உங்கள் போனை ‘டிஸ்கனெக்ட்’ செய்யுங்கள்!

5. பேட்டரியும் முக்கியம்

சில நேரங்களில், இது உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதற்கு பின்னால் ஆப்களோ அல்லது செட்டிங்ஸோ இருக்காது; அந்த போனின் பேட்டரியே முக்கிய காரணமாக இருக்கலாம்! அதாவது உங்கள் மொபைலின் பேட்டரி பழையதாகி இருக்கலாம். வருடங்கள் செல்லச் செல்ல, உங்கள் பேட்டரி பலவீனம் அடையலாம்; முன்பு இருந்ததை போல நன்றாக செயல்படாமல் போகலாம்! சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு (ஸ்மார்ட்போன் மாடலைப் பொறுத்து), உங்கள் பேட்டரி அதன் ஒரிஜினல் திறனை இழக்கலாம்; விரைவாக காலி ஆகலாம்! இதிலிருந்து தப்பிக்க, நமக்கிருக்கும் ஒரே வழி.. பேட்டரியை மாற்றுவதே ஆகும். ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதை விட இது மிகவும் செலவு குறைந்தது.

6. லொக்கேஷன்

கூகுள் மேப்ஸ் உட்பட உங்கள் லொக்கேஷனை (Location) கண்காணிக்கக்கூடிய ஏராளமான ஆப்கள் உள்ளன. அதுபோன்ற ஆப்களை நேரடியாக பயன்படுத்தும் போது மட்டுமே, அது உங்களின் இருப்பிட தகவல்களை கண்காணிக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் எப்போதும் அப்படி இருக்காது! இருப்பிடம் தொடர்பான பெரும்பாலான ஆப்கள், பேக்கிரவுண்டில்.. நிலையான முறையில் கண்காணிப்புகளை நிகழ்த்தும். அது உங்கள் மொபைலின் பேட்டரி லைஃப்-ஐ கண்டிப்பாக பாதிக்கும். ஆகவே, அவசியமற்ற நேரங்களில், மொபைல் செட்டிங்ஸ் வழியாக லொக்கேஷன் ட்ராக்கிங்-ஐ டிஸேபிள் செய்து விடவும்!

7. அறிவிப்புகள்

மொபைலில் ஒரு புதிய ஆப்பை இன்ஸ்டால் செய்யும் போது, அதன் நோட்டிபிக்கேஷன் செட்டிங்ஸ் தானாகவே ஆக்டிவேட் ஆகும். அப்படியாக, அவசியமே இல்லாமல் உங்களுக்கு கிடைக்கும் நோட்டிபிக்கேஷன் ஆனது பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட, தன்னால் முடிந்த அளவிலான பேட்டரி தின்னும்! இதனைத் தடுக்க, தேவை இல்லாத ஆப்களுக்கான நோட்டிபிக்கேஷன்களை டிஸேபிள் செய்யலாம். இவற்றைச் செய்தால் மொபைலின் பேட்டரி தாராளமாக அதிக நேரத்திற்கு நிற்கும்.

The post மொபைல் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போகுதா? first appeared on .

]]>