citroen eC3 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 05:37:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விற்பனைக்கு வந்தது சிட்ரோன் EC3! https://www.91mobiles.com/tamil/citroen-ec3-electric-car-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=citroen-ec3-electric-car-launched-in-india Tue, 28 Feb 2023 09:24:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6111 இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). மிகவும் குறைவான விலையில் வரும் என வெளியான தகவல்கள்தான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தன. இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல், ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், வசதிகள், டிசைன் ஆகியவற்றை எல்லாம் வைத்து […]

The post விற்பனைக்கு வந்தது சிட்ரோன் EC3! first appeared on .

]]>

Highlights

  • சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது
  • இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (Range) 320 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). மிகவும் குறைவான விலையில் வரும் என வெளியான தகவல்கள்தான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தன. இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல், ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், வசதிகள், டிசைன் ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், சிட்ரோன் நிறுவனம் சிறப்பான விலை நிர்ணயத்தை செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

 

பேட்டரி & மைலேஜ்

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 29.2 kWh திறனுடைய பேட்டரி (Battery) ஆகும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார், அதிகபட்சமாக 56 பிஹெச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (Range) 320 கிலோ மீட்டர்கள் ஆகும். இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்ய கூடிய தொலைவுதான் ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது. சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 320 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தொலைதூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ள முடியும். சிறப்பான ரேஞ்ச் பல்வேறு அதிநவீன வசதிகளையும் (Features) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

அம்சங்கள்

இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 10.2 அங்குல டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. இதுதவிர உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கையை சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. மேலும் 4 ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், கருப்பு நிற ஓஆர்விஎம்கள் ஆகிய அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 9 ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களும், 4 மோனோ டோன் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

 

வேரியண்ட் & விலை

லைவ் மற்றும் ஃபீல் என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும். ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பிய சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.50 லட்ச ரூபாய் மட்டுமே. இது லைவ் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் ஃபீல் வேரியண்ட்டின் விலை 12.13 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஃபீல் வைப் பேக் மாடலின் விலை 12.28 லட்ச ரூபாய் ஆகவும், ஃபீல் ட்யூயல் டோன் வைப் பேக் மாடலின் விலை 12.43 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

போட்டி

இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டுள்ளது. இதுதவிர எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காருக்கும் (MG Air EV) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது. இதில், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 

 

 

 

The post விற்பனைக்கு வந்தது சிட்ரோன் EC3! first appeared on .

]]>
அறிமுகமானது சிட்ரோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்! https://www.91mobiles.com/tamil/citroen-ec3-electric-car-unveiled-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=citroen-ec3-electric-car-unveiled-in-india Wed, 18 Jan 2023 07:41:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5107 முன்பதிவு சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 22ம் தேதி தொடங்கவுள்ளது. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து, சிட்ரோன் ஷோரூம்களில் இசி3 எலெக்ட்ரிக் கார் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றம் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய 2 அம்சங்களிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரை போலவேதான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட உள்ளது. எனினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் […]

The post அறிமுகமானது சிட்ரோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்! first appeared on .

]]>

Highlights

  • சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
  • சிட்ரோன் நிறுவனம் வெளிநாடுகளுக்கும் இந்த இசி3 எலெக்ட்ரிக் காரை ஏற்றுமதி செய்ய இருக்கிறது.

முன்பதிவு

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 22ம் தேதி தொடங்கவுள்ளது. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து, சிட்ரோன் ஷோரூம்களில் இசி3 எலெக்ட்ரிக் கார் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றம்

உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய 2 அம்சங்களிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரை போலவேதான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட உள்ளது. எனினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கின்றன. முன் பக்க ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டிருப்பது மற்றும் டெயில்பைப் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறலாம். அதேபோல் உட்புறத்திலும் ஒரு சில மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.

 

பேட்டரி

அதே நேரத்தில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 29.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 320 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அராய் அமைப்பு சான்று வழங்கிய (Range) ஆகும். ஈக்கோ மற்றும் ஸ்டாண்டர்டு என சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 2 டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 3.3 kW ஆன்போர்டு ஏசி சார்ஜர் உடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் வரவுள்ளது. அத்துடன் CCS2 ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கும் இது சப்போர்ட் ஆகும்.

மைலேஜ்

இந்த எலெக்ட்ரிக் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 107 கிலோ மீட்டர்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்தால், வெறும் 57 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும். ஆனால் ஹோம் சார்ஜர் பயன்படுத்தினால், 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏறுவதற்கு பேட்டரி 10.5 மணி நேரத்தை எடுத்து கொள்ளும். இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருடன் (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்களில் 24 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது.

 

வசதிகள்

சிட்ரோன் சி3 காரை போலவே, சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும், லைவ் மற்றும் ஃபீல் என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். வசதிகளை பொறுத்தவரையில், 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கனெக்டட் கார் வசதியும் இருக்கா! அத்துடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் முடியும். மேலும் கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். பாதுகாப்பை பொறுத்தவரையில், 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களாலும், மிகவும் குறைவான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

 

The post அறிமுகமானது சிட்ரோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்! first appeared on .

]]>