coca cola special edition https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:18:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 வெளியானது கோக கோலா போனின் வெளியீட்டு தேதி! https://www.91mobiles.com/tamil/realme-10-pro-coca-cola-phone-will-be-launched-in-india-on-february-10/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-pro-coca-cola-phone-will-be-launched-in-india-on-february-10 Fri, 03 Feb 2023 05:41:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5528 கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் போனின் பின்புறம் ஒரு பக்கம் கருப்பு நிறம் மற்றும் ரியல்மி லோகோ உள்ளது, மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிறத்தில் Coca-Cola பிராண்டிங் உள்ளது. இது ஸ்பெஷல் எடிஷனாக இருந்தாலும் ரியல்மி 10 ப்ரோவின் அம்சங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே கொண்டு இருக்கிறது. வெளித்தோற்றத்தில் மட்டுமே மாற்றங்கள் உள்ளன. தற்போது இதன் அறிமுகத் தேதியும் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைலின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம். டிஸ்ப்ளே இந்த கோககோலா ஸ்பெஷல் […]

The post வெளியானது கோக கோலா போனின் வெளியீட்டு தேதி! first appeared on .

]]>

Highlights

  • ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த புதிய போன் வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் போனின் பின்புறம் ஒரு பக்கம் கருப்பு நிறம் மற்றும் ரியல்மி லோகோ உள்ளது, மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிறத்தில் Coca-Cola பிராண்டிங் உள்ளது. இது ஸ்பெஷல் எடிஷனாக இருந்தாலும் ரியல்மி 10 ப்ரோவின் அம்சங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே கொண்டு இருக்கிறது. வெளித்தோற்றத்தில் மட்டுமே மாற்றங்கள் உள்ளன. தற்போது இதன் அறிமுகத் தேதியும் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைலின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

இந்த கோககோலா ஸ்பெஷல் எடிஷன் போன் ஆனது ரியல் மி 10 ப்ரோவின் அம்சங்களையே கொண்டுள்ளது. இந்த போன் 6.72 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 

சிப்செட்

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

மெமரி

இந்த ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன் மூலம் போனின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

கேமரா

108எம்பி Samsung HM6 பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி + ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். கூடவே 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

 

The post வெளியானது கோக கோலா போனின் வெளியீட்டு தேதி! first appeared on .

]]>
ரீ-ப்ராண்டிங் இல்ல.. ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்பெஷல் எடிஷனாக இருக்கலாம் எனத் தகவல்! https://www.91mobiles.com/tamil/coca-cola-phone-is-not-rebranded-version-smartphone-it-could-be-special-edition-of-realme-10-pro-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=coca-cola-phone-is-not-rebranded-version-smartphone-it-could-be-special-edition-of-realme-10-pro-5g Tue, 31 Jan 2023 07:17:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5385 கோகோ கோலா Vs ரியல்மீ கோகோ கோலா ஸ்மார்ட்போன் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படமானது, அது ரியல்மி 10 (Realme 10) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்கிற யூகத்தை கிளப்பி இருந்தது. அதன் விளைவாக, கோகோ கோலா நிறுவனமும், ரியல்மி நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன என்கிற பேச்சுகளும் அடிபட்டன. இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் ஒரு புதிய டிவிஸ்ட்டை முன்வைத்துள்ளது.   ஸ்பெஷல் எடிஷன் கோகோ கோலா ஸ்மார்ட்போன், ரியல்மி நிறுவனத்தின் […]

The post ரீ-ப்ராண்டிங் இல்ல.. ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்பெஷல் எடிஷனாக இருக்கலாம் எனத் தகவல்! first appeared on .

]]>

Highlights

  • கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா (Coca Cola) அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அது கோலா போன் (Cola Phone) என்கிற பிராண்டின் கீழ் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியானது.
  • ஆரம்பத்தில் இதுவொரு போலியான தகவலாக இருக்குமென்று நம்பப்பட்டது. இருப்பினும் தற்போது – கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையின் ஹாட்-டாபிக் ஆக மாறி உள்ளது!

கோகோ கோலா Vs ரியல்மீ

கோகோ கோலா ஸ்மார்ட்போன் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படமானது, அது ரியல்மி 10 (Realme 10) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்கிற யூகத்தை கிளப்பி இருந்தது. அதன் விளைவாக, கோகோ கோலா நிறுவனமும், ரியல்மி நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன என்கிற பேச்சுகளும் அடிபட்டன. இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் ஒரு புதிய டிவிஸ்ட்டை முன்வைத்துள்ளது.

 

ஸ்பெஷல் எடிஷன்

கோகோ கோலா ஸ்மார்ட்போன், ரியல்மி நிறுவனத்தின் ஒரு ரீபிராண்டட் எடிஷனாக இல்லமால், ஒரு ஸ்பெஷல் எடிஷனாக (Special Edition) இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதாவது குளிர்பான நிறுவனமான கோகோ கோலா ஸ்மார்ட்போன் தொழிலுக்குள் இறங்கவில்லை; மாறாக ரியல்மி நிறுவனம் தான் கோகோ-கோலாவை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் அல்லது வேறு எதோ ஒரு காரணத்தின் கீழ் ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இது இல்ல.. அது!

இன்னொரு டிவிஸ்ட்டும் உள்ளது! கோகோ கோலா ஸ்மார்ட்போன், முதலில் ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது – ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால், ரியல்மி நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் ஆன மாதவ் ஷெத் (Madhav Sheth), ட்விட்டர் வழியாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஹைப்பர்ஸ்பேஸ் கோல்ட் கலரில் வாங்க கிடைக்கும் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் உள்ளது மற்றும் அதன் பேக் பேனலில் கோகோ-கோலா டின் பாட்டிலின் பிரதிபலிப்பை தெளிவாக பார்க்க முடிகிறது.

ஆக, இந்திய மொபைல் சந்தையில் பரபரப்பை கிளப்பிய கோகோ கோலா ஸ்மார்ட்போன் உண்மையில் ரியல்மி 10 ப்ரோவின் ஸ்பெஷல் எடிஷனாகத்தான் இருக்கும் என்பது “கிட்டத்தட்ட” உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Coco-Cola போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

கண்டிப்பாக கோகோ கோலாவால் ஈர்க்கப்பட்ட ஸ்பெஷல் வால்பேப்பர்கள், தீம்கள் அல்லது ரிங்டோன்களை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, பேக் பேனலில் கோகோ கோலா பிராண்டிங்கை வெளிப்படுத்தும் டிசைன் நிச்சயம் இடம்பெறும்! ஆன்லைனில் லீக் ஆன புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, கோகோ கோலா ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பளபளப்பான டிசைனும் அதில் கோகோ கோலா லோகோவும் உள்ளது. அது தவிர்த்து மீதமுள்ள எல்லாமே ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனும் ஒற்றுப்போகிறது. ஆக மேலோட்டமான மாற்றங்களை தவிர்த்து, உள்ளிருக்கும் அம்சங்கள் எல்லாமே ரியல்மி 10 ப்ரோவுடன் ஒற்றுப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

 

Realme 10 Pro-வின் முக்கிய அம்சங்கள்:

இது ரியல்மி 10 ப்ரோ 5ஜி மொபைலின் ஸ்பெஷல் எடிஷனாக இருக்கும் பட்சத்தில், கோகோ கோலா ஸ்மார்ட்போனில் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலில் உள்ள சில முக்கிய அம்சங்ககள் இடம்பெறலாம். அதாவது 6.7 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 108எம்பி ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப், ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இந்த மொபைலில் இடம்பெற்று இருக்கும்.

 

 

The post ரீ-ப்ராண்டிங் இல்ல.. ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்பெஷல் எடிஷனாக இருக்கலாம் எனத் தகவல்! first appeared on .

]]>