cooling case https://www.91mobiles.com/tamil Mon, 02 Jan 2023 08:53:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மொபைலின் வெப்பத்தை 4 டிகிரி வரை குறைக்கும் புது கூலிங் கேஸ் அறிமுகம்! https://www.91mobiles.com/tamil/redmi-k60-official-cooling-case-launched-with-smartphone-can-cool-device-by-4-degrees-celsius/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-k60-official-cooling-case-launched-with-smartphone-can-cool-device-by-4-degrees-celsius Mon, 02 Jan 2023 09:33:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4623 ஸ்மார்ட்போன்களில் (smartphone) உருவாகும் அதிகப்படியான வெப்பத்தைக் கட்டுப்படுத்த பிரத்தியேகமாக கூலிங் கேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதை யார் உருவாக்கியது?இது என்ன செய்யும்? இது எப்படித் தயாரிக்கப்படுகிறது? இதனால் என்ன பயன்? இதை வாங்கலாமா? வேண்டாமா? மற்ற கூலிங் கெட்ஜெட்டில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். ஷாவ்மி (Xiaomi) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போனான Redmi K60 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், இந்த ஸ்மார்ட்போனுக்கான கூலிங் கேசையும் அறிமுகப்பட்டுத்தி இருக்கிறது. கூலிங் கேஸ் இது […]

The post மொபைலின் வெப்பத்தை 4 டிகிரி வரை குறைக்கும் புது கூலிங் கேஸ் அறிமுகம்! first appeared on .

]]>

ஸ்மார்ட்போன்களில் (smartphone) உருவாகும் அதிகப்படியான வெப்பத்தைக் கட்டுப்படுத்த பிரத்தியேகமாக கூலிங் கேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதை யார் உருவாக்கியது?இது என்ன செய்யும்? இது எப்படித் தயாரிக்கப்படுகிறது? இதனால் என்ன பயன்? இதை வாங்கலாமா? வேண்டாமா? மற்ற கூலிங் கெட்ஜெட்டில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஷாவ்மி (Xiaomi) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போனான Redmi K60 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், இந்த ஸ்மார்ட்போனுக்கான கூலிங் கேசையும் அறிமுகப்பட்டுத்தி இருக்கிறது.

கூலிங் கேஸ்

இது ஷாவ்மி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ வெப்ப குளிரூட்டும் கேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனில் ஏற்படும் ஹீட்டிங் சிக்கலைக் (smartphone heating issues) குறைப்பதற்காகச் சந்தையில் பல கூலிங் கேட்ஜெட்கள் (gadgets) விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்துமே ஒரு ரொடேட்டிங் பேன் (rotating fan) உடன் வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், இங்கு நாம் பார்க்கப்போகும் இந்த கூலிங் கேஸ் அப்படி எந்தவிதமான ஃபேன்னும் இல்லாமல், பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்திக் குறைகிறது என்பது கவனிக்கத்தக்கது.

எப்படி வேலை செய்கிறது?

Redmi K60-க்கான புதிய கூலிங் கேஸ், மொபைலின் வெப்பநிலையை 4 டிகிரி செல்சியஸ் (4 degrees celsius) வரை குறைப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. வெளிவந்த தகவலின் படி, போனின் வெளிப்புற கவரை மேம்படுத்த, ஃபிளாக்ஷிப் போனின் அதே-பிரிவு வெப்ப தொழில்நுட்பத்தை ரெட்மி நிறுவனம் முதன்முறையாக இந்த போனில் பயன்படுத்தியுள்ளது. புதிய கலவைப் பொருளின் வெப்பநிலை திடநிலையிலிருந்து திரவ இரட்டை நிலைக்கு (composite material is changed from solid to liquid dual state) மாற்றப்படுகிறது. மேலும் வெப்பம் விரைவாகக் கடத்தப்படும்போது உண்மையான நீண்ட-செயல்பாட்டு வெப்பம் பரவுகிறது. மொபைல் போனின் வெப்பநிலை அதிகரித்தவுடன், இந்த புதிய கலவைப் பொருள் விரைவாக வெப்பத்தை உறிஞ்சி உருகி, தொலைபேசியின் உச்ச வெப்பநிலையைக் குறைக்கிறது. மொபைல் போன்கள் விரைவாக குளிர்ச்சியாவதற்கும், அதிக ஆற்றல் வெளியீட்டைப் பராமரிப்பதற்கும், கேம்கள் (games) மற்றும் வீடியோக்கள் (videos) போன்ற அதிக-லோடிங் காட்சிகளில் வசதியாக இருப்பதற்கும், திறமையான திட-திரவமானது வெப்பத்தைச் சிதறடிக்கும் வகையில் விநியோகிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.

விலை

இது மொபைல் போன்களுக்கான “போனஸ் பேட்ச்” (bonus patch) போன்றது. ரெட்மி மொபைல் போனின் ஃபியூஸ்லேஜின் (fuselage) பின்புறம் ஒரு மணிநேர சோதனைக்குப் பிறகு 4 டிகிரி செல்சியஸ் குளிர்கிறது. அதன் ஐஸ் சென்சிங் வெப்ப பாதுகாப்பு உறை (ice-sensing heat protection cover) காரணமாக, இது போனை உண்மையிலேயே விரைவாகக் குளிர்விக்கிறது. இந்த ஐஸ் சென்சிங் வெப்ப பாதுகாப்பு கேஸின் விலை CNY 79 அல்லது சுமார் $11 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 910 ஆகும்.

The post மொபைலின் வெப்பத்தை 4 டிகிரி வரை குறைக்கும் புது கூலிங் கேஸ் அறிமுகம்! first appeared on .

]]>