dhanush https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:52:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தெலுங்கு ரசிகர்களிடம் தமிழில் பேசிய தனுஷ்! https://www.91mobiles.com/tamil/actor-dhanush-video-goes-viral/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actor-dhanush-video-goes-viral Thu, 09 Feb 2023 12:30:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5701 தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா ‘வாத்தி’ திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மிரட்டலாக வந்திருக்கும் இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதையடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் […]

The post தெலுங்கு ரசிகர்களிடம் தமிழில் பேசிய தனுஷ்! first appeared on .

]]>

Highlights

  • ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா ‘வாத்தி’ திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மிரட்டலாக வந்திருக்கும் இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ், எனக்கு தெலுங்கு அவ்வளவா பேச வராது புரியும். நீங்க என் பக்கத்து ஸ்டேட் தான இங்கிலீஸ்ல எதுக்கு பேசனும் தமிழ்ல பேசுறேன் புரியும்ல என்று கேட்டதற்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தனர். வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா சிறிது நேரம் தமிழில் பேசிய பின்னர் ரசிகர்கள் சிலர் புரியவில்லை என்று கூறியதால் ஆங்கிலத்தில் தனுஷ் பேசினார். இறுதியாக தனுஷ் பேசி முடிக்கும் போது ரசிகர்கள் அவரை விஐபி படத்திலிருந்து அமுல் பேபி வசனத்தை பேச சொல்ல அதற்கு தமிழில் தான் வரும் என்று கூறிவிட்டு அந்த வசனத்தை பேசினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தசரா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஓரி வாரி’ பாடல் வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை நடிகர் நானி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

The post தெலுங்கு ரசிகர்களிடம் தமிழில் பேசிய தனுஷ்! first appeared on .

]]>
அஜித், விஜய், தனுஷ் படத்தின் முதல் பாடல் எப்போ ரிலீஸ்? https://www.91mobiles.com/tamil/update-news-about-varisu-and-thunivu-vaathi-movie-single-track/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=update-news-about-varisu-and-thunivu-vaathi-movie-single-track Tue, 01 Nov 2022 11:55:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3339 விஜய்யின் `வாரிசு’, அஜித்தின் `துணிவு’ இரண்டுமே பொங்கல் பண்டிகைக்கு வெளிவருகிறது என்பதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. தனுஷின் வாத்தி படம் டிசம்பர் 2 வெளியாக இருக்கிறது. மூன்று படங்களின் பாடல்களும் இதுவரை வெளியாக வில்லை. ‘வாரிசு’ படத்திற்கு தமனும், ‘துணிவு’ படத்திற்கு ஜிப்ரானும் இசையமைத்து வருகிறார்கள். இதனிடையே ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் ட்ராக் கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என பேச்சு கிளம்பியது. விஜய்யின் ரசிகர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். […]

The post அஜித், விஜய், தனுஷ் படத்தின் முதல் பாடல் எப்போ ரிலீஸ்? first appeared on .

]]>

விஜய்யின் `வாரிசு’, அஜித்தின் `துணிவு’ இரண்டுமே பொங்கல் பண்டிகைக்கு வெளிவருகிறது என்பதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. தனுஷின் வாத்தி படம் டிசம்பர் 2 வெளியாக இருக்கிறது. மூன்று படங்களின் பாடல்களும் இதுவரை வெளியாக வில்லை.

‘வாரிசு’ படத்திற்கு தமனும், ‘துணிவு’ படத்திற்கு ஜிப்ரானும் இசையமைத்து வருகிறார்கள். இதனிடையே ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் ட்ராக் கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என பேச்சு கிளம்பியது. விஜய்யின் ரசிகர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் சிங்கிள் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

‘வாரிசு’ படத்தின் ஆடியோ ரைட்ஸை டி.சீரீஸ் நிறுவனம் ரூ.5 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடல்கள் வருகின்றன. படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூம்- டி.சிரீஸும் முதன் முறையாக ‘வாரிசு’ க்காக தான் இணைந்துள்ளனர் என்கிறார்கள். கடந்த தீபாவளிக்கு முதல் நாள் வரை படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால், சிங்கிளைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது நவம்பர் முதல் வாரத்தில் சிங்கிளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமன் இசையில் விஜய் பாடியுள்ள அந்தப் பாடல், செம துள்ளல் ரகம் என்கிறாரகள்.

அஜித் – விக்னேஷ்சிவனின் ‘அஜித் – 61′ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதால் `துணிவு’ படத்தில் அனிருத்தை ஒரு பாடல் பாட வைத்தால் நன்றாக இருக்கும் ஜிப்ரானும் நினைத்திருக்கிறார். இது குறித்து அஜித்திடம் அவர் அனிருத்தை பாட வைக்கும் விருப்பத்தை தெரிவிக்க, ‘மியூசிக்கைப் பொறுத்தவரை உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க’ என அஜித்தும் சொல்லி இருக்கிறாராம். ஏற்கெனவே ‘வேதாளம்’ படத்தில் அவர் பாடிய ‘ஆலுமா டோலுமா’ அதிரி புதிரி ஹிட் அடித்தது. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் அஜித்திற்கு அனிருத் பாடியுள்ளார். அஜித்தின் முதல் சிங்கள் பாடலும் நவம்பர் முதல் வாரத்தில் வரக் காத்திருக்கிறது. ஆக, நவம்பர் முதல் வாரத்தில் விஜய்- அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டங்கள் காத்திருக்கிறது.

இந்நிலையில், தனுஷின் வாத்தி படம் டிசம்பர் 2 வெளியாக இருக்கிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

வாத்தி இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

The post அஜித், விஜய், தனுஷ் படத்தின் முதல் பாடல் எப்போ ரிலீஸ்? first appeared on .

]]>