Discount https://www.91mobiles.com/tamil Thu, 20 Apr 2023 05:30:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 iQOO 11, iQOO 9 Pro மொபைல்களுக்கு ரூ. 25,000 வரை தள்ளுபடி: முழு விவரம் https://www.91mobiles.com/tamil/iqoo-11-9-pro-india-price-discount-rs-25000-sale-deals/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-11-9-pro-india-price-discount-rs-25000-sale-deals Wed, 19 Apr 2023 08:08:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7647   iQOO நிறுவனம் அதன் மூன்றாம் ஆண்டு விற்பனையின் ஒரு பகுதியாக, அதன் ஸ்மார்ட்போன்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவால் ஆதரிக்கப்படும் இந்நிறுவனம், 2020 இல் இந்திய சந்தையில் நுழைந்தது. குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்ற பல குறிப்பிடத்தக்க போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகளை வழங்குகிறது. இதனையடுத்து iQOO 11 மொபைல் தள்ளுபடி போக ரூ. 49,999 என்ற விலையில் […]

The post iQOO 11, iQOO 9 Pro மொபைல்களுக்கு ரூ. 25,000 வரை தள்ளுபடி: முழு விவரம் first appeared on .

]]>

Highlights

  • iQOO இந்தியாவில் அதன் மூன்றாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
  • இதனையடுத்து சில ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது.
  • தள்ளுபடி விற்பனை ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

 

iQOO நிறுவனம் அதன் மூன்றாம் ஆண்டு விற்பனையின் ஒரு பகுதியாக, அதன் ஸ்மார்ட்போன்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவால் ஆதரிக்கப்படும் இந்நிறுவனம், 2020 இல் இந்திய சந்தையில் நுழைந்தது. குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்ற பல குறிப்பிடத்தக்க போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகளை வழங்குகிறது. இதனையடுத்து iQOO 11 மொபைல் தள்ளுபடி போக ரூ. 49,999 என்ற விலையில்  கிடைக்கிறது. அதாவது ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் அசல் விலையான ரூ. 59,999 இலிருந்து ரூ. 10,000 குறைக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களைப் பார்ப்போம்.

iQOO 3வது ஆண்டு விற்பனை தேதிகள், கிடைக்கும்

ஏப்ரல் 19 (இன்று) முதல், iQOO மூன்றாம் ஆண்டு விற்பனையானது நிறுவனத்தின் வலைத்தளமான iQOO.com மற்றும் Amazon இல் கிடைக்கிறது. ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நாட்டில் உள்ள இரு இணையதளங்களிலும் விற்பனை தொடர்ந்து நடைபெறும். விருப்பமுள்ளோர் இன்று முதல் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

ஆண்டுவிழா விற்பனையின் போது, ​​iQOO 11 தள்ளுபடி விலையில் ரூ.49,999 கிடைக்கும், இது இந்தியாவில் அதன் அசல் விலையான ரூ.59,999ஐ விட ரூ.10,000 குறைவாகும். iQOO 9 மற்றும் iQOO 9 Pro ஆகியவையும் குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் கிடைக்கின்றன. iQOO 9 தற்போது ரூ.30,990 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது அதன் அசல் விலையான ரூ.42,990ஐ விட ரூ.12,000 குறைவாகும். வழக்கமாக ரூ.64,990க்கு விற்கப்படும் ப்ரோ வேரியன்ட் தற்போது ரூ.39,990 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது ரூ.25,000 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் வங்கி விளம்பரங்களை உள்ளடக்கியது மற்றும் வழக்கமான சேமிப்பக (இண்டர்னல் ஸ்டோரேஜ்) வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நிர்வாகச் செலவுகளை சேமிக்கும் பொருட்டு, Vivo நிறுவனம் அதன் துணை பிராண்டான iQOO நிறுவனத்தை விவோவோடுஇணைக்க விரும்புவதாக வதந்தி பரவுகிறது . இரண்டு வணிகங்களும் ஏற்கனவே R&D வசதிகள், சேனல் அமைப்பு, விநியோகச் சங்கிலி மற்றும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும், பிராண்டுகள் திட்டமிடல், பயனர் செயல்பாடு, ஊடக உத்தி, மற்றும் ஆன்லைன் விற்பனை ஆகியவற்றின் தனித்துவமான முறைகளை எடுத்ததுள்ளன.

iQOO 9 Pro 5G முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Qualcomm Snapdragon 8 Gen 1
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.78 அங்குலம் (17.22 செமீ)
  • பின் கேமரா – 50 எம்பி + 50 எம்பி + 16 எம்பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 4700 mAh

 

The post iQOO 11, iQOO 9 Pro மொபைல்களுக்கு ரூ. 25,000 வரை தள்ளுபடி: முழு விவரம் first appeared on .

]]>