Dot https://www.91mobiles.com/tamil Thu, 17 Aug 2023 11:47:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இன்று உங்கள் மொபைலுக்கு இந்த அவசர எச்சரிக்கை செய்தி வந்ததா? https://www.91mobiles.com/tamil/received-emergency-alert-text-message-why/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=received-emergency-alert-text-message-why Thu, 17 Aug 2023 11:47:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10156 தொலைத்தொடர்பு துறை (DoT) இன்று அதன் அவசர எச்சரிக்கை அமைப்பை சோதனை செய்தது. நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு ஃபிளாஷ் செய்தியை அனுப்புவதன் மூலம் இது செய்யப்பட்டது. இது ஒரு சோதனை என்று எச்சரிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே பயனர்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் இது எதிர்காலத்தில் நாட்டில் ஏதேனும் பெரிய பேரழிவு ஏற்படும் போது பயன்படுத்தப்படும்.  DoT அவசர எச்சரிக்கை சோதனை  அவசர எச்சரிக்கை செய்தி இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டது, மேலும் பயனர்கள் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

The post இன்று உங்கள் மொபைலுக்கு இந்த அவசர எச்சரிக்கை செய்தி வந்ததா? first appeared on .

]]>

Highlights

  • தொலைத்தொடர்பு துறை (DoT) மூலம் இன்று அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டன.
  • இது உண்மையில் அவசர எச்சரிக்கைகளை ஃபிளாஷ் செய்திகளாக அனுப்பும் சோதனை.
  • இந்த அவசரகால எச்சரிக்கைச் செய்திகள் எவ்வளவு ஆற்றலுடையவை என்பதை அறிய இதுபோன்ற சோதனைகள் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 

தொலைத்தொடர்பு துறை (DoT) இன்று அதன் அவசர எச்சரிக்கை அமைப்பை சோதனை செய்தது. நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு ஃபிளாஷ் செய்தியை அனுப்புவதன் மூலம் இது செய்யப்பட்டது. இது ஒரு சோதனை என்று எச்சரிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே பயனர்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் இது எதிர்காலத்தில் நாட்டில் ஏதேனும் பெரிய பேரழிவு ஏற்படும் போது பயன்படுத்தப்படும். 

DoT அவசர எச்சரிக்கை சோதனை 

அவசர எச்சரிக்கை செய்தி இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டது, மேலும் பயனர்கள் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். “Emergency alert: Severe” என்று மேலே கூறப்பட்ட செய்தியால் மக்கள் பீதியடைந்திருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் நீங்கள் உரையைப் படிக்கும்போது, ​​​​இது உண்மையில் DoT ஆல் செல் பிராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட சோதனை என்பதை நீங்கள் காணலாம்.

 

இந்தியா முழுவதும் சோதனை நடத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள மொபைல் போன் பயனர்கள் அதைப் பெற்றிருக்கலாம் என்றும் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழிப்பூட்டல்களை அனுப்புவதன் பின்னணியில், நாட்டில் ஏற்படக்கூடிய இதுபோன்ற அவசரநிலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க உதவுவதாகும். இதனை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) செயல்படுத்தி வருகிறது.

எனவே நாட்டில் இதுபோன்ற பெரிய பேரழிவு ஏதேனும் ஏற்பட்டால், தேவையான தகவல்களுடன் எச்சரிக்கைகளைப் பெறுவோம். இந்த விழிப்பூட்டல்களில் சூழ்நிலையின் வெளிச்சத்தில் என்ன செய்ய வேண்டும் அல்லது தடுக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற சோதனை எச்சரிக்கை ஜூலையிலும் நடத்தப்பட்டது, மேலும் இதுபோன்ற எச்சரிக்கைகள் பல்வேறு பகுதிகளில் சோதிக்கப்படும்.

அனுப்பப்பட்ட இந்த எச்சரிக்கையைப் பொறுத்தவரை, இது உங்கள் மொபைலில் ஃபிளாஷ் செய்தியாகத் தோன்றும். நீங்கள் அதைப் படிக்கலாம். உரைக்குக் கீழே சரி என்பதை அழுத்தினால் அது மறைந்துவிடும். 

எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கைகளை அனுப்பும் நடைமுறையை என்டிஎம்ஏ மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, கனமழை மற்றும் இடியுடன் கூடிய எச்சரிக்கையுடன் கூடிய எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. இப்போதெல்லாம், Google போன்ற பயன்பாடுகளில் உள்ள பிரத்யேக கருவிகள் மூலம் எந்த பெரிய பேரழிவு பற்றிய புதுப்பிப்புகளையும் விழிப்பூட்டல்களையும் எளிதாகக் கண்டறியலாம். ஆனால் இணைய இணைப்பு இல்லை என்றால், இதுபோன்ற சூழ்நிலைகளில் ஃபிளாஷ் செய்திகள் மிகவும் உதவியாக இருக்கும். 

The post இன்று உங்கள் மொபைலுக்கு இந்த அவசர எச்சரிக்கை செய்தி வந்ததா? first appeared on .

]]>
டெலிகாம் நிறுவனங்களுக்கு புதிய சட்டம்! https://www.91mobiles.com/tamil/new-sms-rule-for-jio-airtel-and-vodafone-dot-has-given-15-days-time-to-implement-new-guideline/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-sms-rule-for-jio-airtel-and-vodafone-dot-has-given-15-days-time-to-implement-new-guideline Thu, 17 Nov 2022 10:38:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3691 இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு துறையானது (Department of Telecommunications) (சுருக்கமாக.. டாட் (DoT) ) ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களுக்கான ஒரு புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய சட்டத்தை அடுத்த 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் சிம் கார்டை மாற்றுவது அல்லது அப்கிரேட் செய்வது பற்றியது. மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு இந்த சட்டத்தை அறிவித்து இருக்கிறது.   புதிய சட்டம்! டெலிகாம் சேவை […]

The post டெலிகாம் நிறுவனங்களுக்கு புதிய சட்டம்! first appeared on .

]]>

இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு துறையானது (Department of Telecommunications) (சுருக்கமாக.. டாட் (DoT) ) ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களுக்கான ஒரு புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய சட்டத்தை அடுத்த 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் சிம் கார்டை மாற்றுவது அல்லது அப்கிரேட் செய்வது பற்றியது. மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு இந்த சட்டத்தை அறிவித்து இருக்கிறது.

 

புதிய சட்டம்!

டெலிகாம் சேவை வழங்குநர்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களுக்குமே டாட் (DoT) அறிவித்துள்ள இந்த புதிய சட்டம் பொருந்தும்! அதாவது, சிம் கார்ட்டை மாற்ற விரும்பும் (SIM Swap) அல்லது சிம் கார்ட்டை அப்கிரேட் (SIM Upgrade) செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு கிடைக்கும் எஸ்எம்எஸ் வசதியை (உள்வரும் மற்றும் வெளிச்செல்லும்) நிறுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

கெடு

டாட் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ஒரு புதிய சிம் ஆக்டிவேட் ஆன பிறகு, அந்த புதிய சிம் கார்டுகளில் அணுக கிடைக்கும் எஸ்எம்எஸ் சேவை ஆனது 24 மணிநேரம் தடைசெய்யப்பட வேண்டும். மேலும் இந்த புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

திடீர் நடவடிக்கை

டாட் அறிவித்துள்ள இந்த புதிய சட்டம் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ள 15 நாட்கள் கெடு என எல்லாமே வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே ஆகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் – நாட்டில் நடக்கும் மிகவும் பொதுவான சைபர் கிரைம்களில் ஒன்றான சிம் ஸ்வாப் மோசடிகளின் (SIM swap frauds) அபாயத்தை குறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன!

 

சிம் ஸ்வாப் மோசடி

சிம் ஸ்வாப் என்றால் சிம் கார்டு தொடர்பான ஒரு மோசடி ஆகும். முதலில், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போலியான அழைப்புகள் அல்லது ஃபிஷிங் மூலம் வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களை அறிந்து கொள்வார்கள். பின்னர், அந்த விவரங்களை வைத்து ஒரு புதிய சிம் கார்டுக்காக டெலிகாம் சேவை வழங்குனரை அணுகுவார்கள். அவர்களுக்கான சிம் கார்டு வழங்கப்பட்டவுடன், உண்மையான வாடிக்கையாளரிடம் இருக்கும் பழைய சிம் செயலிழந்து விடும் மற்றும் அந்த எண்ணில் உள்ள அனைத்து மொபைல் நம்பர்களும் மோசடி கும்பலின் கையில் சிக்கி விடும்!

சிம் ஸ்வாப் மோசடி வழியாக மொபைல் நம்பர்கள் மட்டுமல்ல, வங்கி மற்றும் கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கும் ஒடிபி-க்கள் (OTP) போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். ஒடிபி-க்களை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் கூட திருட முடியும். கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலேயே, புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்க்கான பாதுகாப்பான மற்றும் விரிவான நடைமுறைகளை DoT வெளியிட்டு இருந்தது. அதனொரு பகுதியாக, புதிய சிம் கார்டுகளுக்கான எஸ்எம்எஸ் சேவை 24 மணி நேரத்திற்கு தடை செய்யும் சட்டம் உருவாகி உள்ளது!

 

எப்படி இயங்கும்

DoT வழிகாட்டுதல்களின்படி, ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் – ஏற்கனவே உள்ள எண்ணிற்கு, ஒரு புதிய சிம் கார்டு வேண்டும் என்கிற கோரிக்கையைப் பெற்றவுடன், அத்தகைய கோரிக்கையின் ரசீதை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அவர்கள் – ஐவிஆர்எஸ் கால் மூலம் – புதிய சிம் கார்டின் ரசீதை சரிபார்க்கவும், அதற்கான கோரிக்கையை அங்கீகரிக்கவும் வேண்டும். இந்த சந்தர்ப்பங்களில் ஒரு வாடிக்கையாளர், கோரிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றால், சிம் கார்டு அப்கிரேட் செயல்முறையானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!
இந்த சட்டத்தை 15 நாட்களில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்புத் துறை கூறியுள்ளது.

The post டெலிகாம் நிறுவனங்களுக்கு புதிய சட்டம்! first appeared on .

]]>