dynamic island https://www.91mobiles.com/tamil Sat, 18 Nov 2023 06:15:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 itel S23+ ஆனது சமீபத்திய OTA அப்டேட்டுக்குப் பின் iPhone போன்ற Dynamic island அம்சத்தைப் பெறுகிறது https://www.91mobiles.com/tamil/itel-s23-plus-ota-update-iphone-dynamic-island/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=itel-s23-plus-ota-update-iphone-dynamic-island Fri, 17 Nov 2023 07:26:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=11960 itel அதன் S23+ ஸ்மார்ட்போனுக்கான OTA அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் iPhone Dynamic Island -inspired Dynamic Bar அம்சம், கேமரா அப்டேட்கள், AR அளவீட்டு அம்சம் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. புதிய OTA அப்டேட் தொடர்பான முழு விவரங்கள் இதோ. itel OTA புதுப்பிப்பு விவரங்கள் Dynamic bar பயனர்களுக்கு ஃபேஸ் அன்லாக், பேக்ரவுண்ட் கால், சார்ஜிங் அனிமேஷன், சார்ஜ் நிறைவு நினைவூட்டல் மற்றும் குறைந்த பேட்டரி நினைவூட்டல் போன்ற அம்சங்களுக்கு விரைவான அணுகலை வழங்குகிறது. இது ஒரு […]

The post itel S23+ ஆனது சமீபத்திய OTA அப்டேட்டுக்குப் பின் iPhone போன்ற Dynamic island அம்சத்தைப் பெறுகிறது first appeared on .

]]>

Highlights

  • itel S23+ ஸ்மார்ட்போனுக்கான OTA அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அப்டேட்டில் டைனமிக் பார், cell broadcast மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
  • மேம்படுத்தப்பட்ட கேமரா செயல்திறனுக்கான கேமரா மேம்படுத்தல்களும் அப்டேட்டில் அடங்கும். 

itel அதன் S23+ ஸ்மார்ட்போனுக்கான OTA அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் iPhone Dynamic Island -inspired Dynamic Bar அம்சம், கேமரா அப்டேட்கள், AR அளவீட்டு அம்சம் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. புதிய OTA அப்டேட் தொடர்பான முழு விவரங்கள் இதோ.

itel OTA புதுப்பிப்பு விவரங்கள்

itel S23+ OTA மேம்படுத்தல்
  • Dynamic bar பயனர்களுக்கு ஃபேஸ் அன்லாக், பேக்ரவுண்ட் கால், சார்ஜிங் அனிமேஷன், சார்ஜ் நிறைவு நினைவூட்டல் மற்றும் குறைந்த பேட்டரி நினைவூட்டல் போன்ற அம்சங்களுக்கு விரைவான அணுகலை வழங்குகிறது. இது ஒரு மென்மையான பயனர் அனுபவத்தை வழங்குகிறது.
  • புதிய அப்டேட்டில் கேமரா மென்பொருளுக்கான அப்டேட்களும் அடங்கும்.  மேம்படுத்தப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தரத்தை உறுதியளிக்கிறது.
  • பயனர்கள் அவசர எச்சரிக்கைகளைப் பெற, அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த, cell broadcast அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • புதிய அப்டேட்டில் AR அளவீட்டு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

itel S23+ விவரக்குறிப்புகள்

  • டிஸ்ப்ளே: itel S23+ ஆனது 6.78-இன்ச் 60Hz AMOLED வளைந்த திரையை 500nits பிரகாசத்துடன் கொண்டுள்ளது.
  • சிப்செட்: இது Unisoc Tiger T616 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
  • கேமராக்கள்: itel S23+ ஆனது 10x ஜூம் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட 50MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக இதில் 32MP முன் கேமரா உள்ளது.
  • ரேம் மற்றும் சேமிப்பு: இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பகத்துடன் வருகிறது. இது கூடுதலாக 8ஜிபி விர்ச்சுவல் ரேமை ஆதரிக்கிறது.
  • மென்பொருள்: இந்த மொபைலானது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் அடிப்படையிலான itel OS 13 இல் இயங்குகிறது.
  • பேட்டரி & சார்ஜிங்: இது 18W சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
  • வண்ண விருப்பங்கள்: itel S23+ Lake Cyan மற்றும் Elemental Blue வண்ண வகைகளில் கிடைக்கிறது.
Itel S23 Plus முக்கிய விவரக்குறிப்புகள்
  • சிப்செட் – Unisoc T616 |
  • ரேம் – 8GB
  • டிஸ்ப்ளே – 6.78 அங்குலம் (17.22 செமீ)
  • பின் கேமரா – 50MP
  • செல்ஃபி கேமரா – 32MP
  • பேட்டரி – 5000mAh

The post itel S23+ ஆனது சமீபத்திய OTA அப்டேட்டுக்குப் பின் iPhone போன்ற Dynamic island அம்சத்தைப் பெறுகிறது first appeared on .

]]>
இன்-டிஸ்ப்ளே கேமராவோடு வெளியானது ZTE அக்சான் 30S https://www.91mobiles.com/tamil/mobilephone-zte-axon-30s-with-up-to-12gb-ram-under-screen-camera-announced/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mobilephone-zte-axon-30s-with-up-to-12gb-ram-under-screen-camera-announced Wed, 28 Sep 2022 14:20:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2666 ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ZTE அக்சான் 30S மாடலில் 6.92 அங்குல FHD+OLED 10-பிட் பேனல் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், விசி லிக்விட் […]

The post இன்-டிஸ்ப்ளே கேமராவோடு வெளியானது ZTE அக்சான் 30S first appeared on .

]]>

ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ZTE அக்சான் 30S மாடலில் 6.92 அங்குல FHD+OLED 10-பிட் பேனல் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், விசி லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் 16MP இன்-டிஸ்ப்ளே கேமரா சென்சாரும், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார், 4200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்கள்

  • 6.92 அங்குல 2460×1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
  • 120Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
  • அட்ரினோ 650 GPU
  • 8ஜிபி LPDDR5 ரேம் – 128ஜிபி UFS3.1 மெமரி
  • 12ஜிபி LPDDR5 ரேம், 256ஜிபி UFS3.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் மைஒஎஸ்12
  • 64MP பிரைமரி கேமரா
  • எல்இடி பிளாஷ்
  • 8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
  • 5MP மேக்ரோ லென்ஸ்
  • 2MP டெப்த் சென்சார்
  • 16MP செல்பி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • யுஎஸ்பி டைப் சி ஆடியோ
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
  • வைபை 6
  • ப்ளூடூத் 5.1
  • யுஎஸ்பி டைப் சி

விலை

ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் (கருப்பு) மற்றும் புளூ (நீலம்) நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 310 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கிவிட்டது.

புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பல்வேறு விதமான அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் உரையாடல்களை காட்டுகிறது. இதனையடுத்து ஆண்ட்ராய்டு பயனர்கள் இதுபோன்ற அம்சம் இல்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தைக் கொண்டு வர மிக எளிமையான வழிமுறை உள்ளது.

இதற்கு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் டைனமிக்-ஸ்பாட் (dynamicspot) எனும் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. ஜாவோமோ உருவாக்கி இருக்கும் இந்த செயலி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்றே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள நாட்ச் அளவுக்கு ஏற்ப ஐலேண்ட் அளவு மற்றும் எங்கு தோன்ற வேண்டும் என்ற விவரங்களை செட் செய்ய டைனமிக்-ஸ்பாட் வழி செய்கிறது. இத்துடன் செயலியை பல விதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எது போன்ற நோட்டிபிகேஷன்கள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.

இந்த செயலியின் இலவச பதிப்பில் அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

The post இன்-டிஸ்ப்ளே கேமராவோடு வெளியானது ZTE அக்சான் 30S first appeared on .

]]>