eas e https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 07:11:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவின் குறைந்தவிலை எலெக்ட்ரிக் காரை ரூ 2,000க்கு முன்பதிவு செய்யலாம்! https://www.91mobiles.com/tamil/india-s-cheapest-electric-car-pmv-eas-e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=india-s-cheapest-electric-car-pmv-eas-e Fri, 18 Nov 2022 10:49:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3722 இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய எரிபொருட்கள் மிகவும் அதிகப்படியான விலையில் (Price) விற்பனை செய்யப்படுவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு பலரும் விரும்புகின்றனர். ஆனால் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியாமல், தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே ஓட்டும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் […]

The post இந்தியாவின் குறைந்தவிலை எலெக்ட்ரிக் காரை ரூ 2,000க்கு முன்பதிவு செய்யலாம்! first appeared on .

]]>

இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய எரிபொருட்கள் மிகவும் அதிகப்படியான விலையில் (Price) விற்பனை செய்யப்படுவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு பலரும் விரும்புகின்றனர். ஆனால் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியாமல், தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே ஓட்டும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV Electric). மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்தான் தற்போது மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரை ரூ 2,000க்கு முன்பதிவு செய்யலாம்! இந்த காருக்கு ஈஸ்-இ (Eas-E) என பெயரிடப்பட்டுள்ளது.

முன்பதிவு

பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. வெறும் 2 ஆயிரம் ரூபாயை மட்டும் முன்பணமாக கட்டினால், இந்த எலெக்ட்ரிக் காரை புக்கிங் செய்து கொள்ள முடியும். விலையுடன், முன்பணமும் மிகவும் குறைவாக இருப்பதால், இந்த எலெக்ட்ரிக் காருக்கு 6 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்து விட்டன. பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இந்த புதிய எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இணையதளம்

https://pmvelectric.com/

பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரானது, மிகவும் சிறிய மைக்ரோ-கார் (Micro-car) ஆகும். பொதுவாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மைக்ரோ-கார்களில் ட்யூப்லர் சேஸிஸ்தான் (Tubular Chassis) பயன்படுத்தப்படும். ஆனால் பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் மோனோகாக் சேஸிஸ் (Monocoque Chassis) பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு விஷயத்தில் புத்தம் புதிய ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் தலைசிறந்து விளங்கும் என பிஎம்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைலேஜ்

120 கிலோ மீட்டர்கள், 160 கிலோ மீட்டர்கள் மற்றும் 200 கிலோ மீட்டர்கள் என மொத்தம் 3 ரேஞ்ச் (Range) ஆப்ஷன்களில் பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். 15A சாக்கெட்டை பயன்படுத்தி, பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள முடியும். வெறும் 4 மணி நேரத்திற்கு உள்ளாகவே இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி முழுமையாக நிரம்பி விடும் என பிஎம்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு 75 பைசாவிற்கும் குறைவாகவே செலவாகும் என பிஎம்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாப் ஸ்பீடு

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த புதிய ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் வெறும் 5 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும் என பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருக்கை வசதி

இந்த எலெக்ட்ரிக் காரில், முன் பகுதியில் ஒன்று, பின் பகுதியில் ஒன்று என மொத்தம் 2 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 2 இருக்கைகள் மட்டுமே இருந்தாலும் கூட, நான்கு கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இரண்டு பகுதிகளின் வழியாகவும் இந்த எலெக்ட்ரிக் காருக்கு உள்ளே பயணிகள் ஏறி, இறங்கி கொள்ள முடியும்.

வசதிகள்!

ஆன்போர்டு நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளை ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் பிஎம்வி நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் டிரைவிங் மோடுகள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிமோட் பார்க்கிங் அஸிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாலோ மீ ஹோம் லைட்கள் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

விலை

பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 4.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையாகும். இதன் மூலம் இந்திய சந்தையின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (India’s Cheapest Electric Car) என்ற பெருமையை பிஎம்வி ஈஸ்-இ பெற்றுள்ளது.

இந்த பிரீமியம் பைக்குகளை வாங்கும் விலையில், பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்கி விட முடியும். மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் காரின் அதிக ரேஞ்ச் வழங்கும் பேட்டரி பொருத்தப்பட்ட வெர்ஷன்களின் விலை முறையே 6.79 லட்ச ரூபாய் மற்றும் 7.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

யாருக்கானது?

நகர பகுதிகளில் தினசரி அலுவலகம் சென்று வருவதற்கு பெட்ரோல், டீசல் கார்களை பயன்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும். இதன் மூலம் பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுப்படுத்தலாம். அத்துடன் இது மிகவும் சிறிய மைக்ரோ-கார் என்பதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சமாளிப்பதற்கும் உதவி செய்யும்.

The post இந்தியாவின் குறைந்தவிலை எலெக்ட்ரிக் காரை ரூ 2,000க்கு முன்பதிவு செய்யலாம்! first appeared on .

]]>
மும்பை நிறுவனத்தின் உலகின் விலை குறைந்த எலக்ட்ரிக் கார் https://www.91mobiles.com/tamil/pmv-electric-announced-launch-date-of-eas-e-microcar/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=pmv-electric-announced-launch-date-of-eas-e-microcar Fri, 04 Nov 2022 10:18:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3404 உலகின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV Electric). இந்நிறுவனம் வருகின்ற 16 ஆம் தேதி அன்று ஈஸ்-இ (Eas-e) எனும் புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. நிறுவனம் மின்சார கார் உற்பத்தியில் களமிறங்கி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் இ-வாகனம் இதுவே ஆகும். இது ஓர் மைக்ரோ […]

The post மும்பை நிறுவனத்தின் உலகின் விலை குறைந்த எலக்ட்ரிக் கார் first appeared on .

]]>

உலகின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV Electric). இந்நிறுவனம் வருகின்ற 16 ஆம் தேதி அன்று ஈஸ்-இ (Eas-e) எனும் புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. நிறுவனம் மின்சார கார் உற்பத்தியில் களமிறங்கி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் இ-வாகனம் இதுவே ஆகும்.

இது ஓர் மைக்ரோ ரக மின்சார காராகும். தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே ஈஸ்-இ மைக்ரோ எலெக்ட்ரிக் காரை பிஎம்வி எலெக்ட்ரிக் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இந்த மின் வாகனத்தின் வருகையை இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்க தொடங்கியிருக்கின்றனர்.

இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ தொடங்கி 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வேரியண்டை பொருத்து ரேஞ்ஜ் மாறுபடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் காரை 3 kW ஏசி சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 4 மணி நேரங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஈஸ்-இ பார்ப்பதற்கு மிக சிறியதாக இருந்தாலும் பிற கார்களைப் போலவே அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இருக்கிறது.

டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், ரிமோட் மூலம் சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, ரிமோட் பார்க் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், சீட் பெல்ட்டுகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் இந்த கார் மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 4 லட்சம் தொடங்கி ரூ. 5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த காரை 2,915 mm நீளத்திலும், 1,157 mm அகலத்திலும், 1,600 மிமீ உயரத்திலும் மற்றும் 2,087 mm கிரவுண்ட் கிளியரன்ஸிலும் உருவாக்கியிருக்கின்றது.

எனவே சற்று குறைவான இட வசதிக் கொண்டதாக இது இருக்கலாம். அதேவேலையில், நிறுவனம் அறிவுறுத்தும்படி நபர்கள் இந்த காரில் பயணித்தால் போதிய அளவு இட வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் மைக்ரோ ரக காரையே இந்த மாதம் 16 ஆம் தேதி பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய் இருக்கிறது.

பிஎம்வி நிறுவனம் ஏற்கனவே இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளை தொடங்கிவிட்டது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.pmvelectric.com) ப்ரீ புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றில் இருந்தும் இந்த காருக்கு ப்ரீ புக்கிங் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎம்வி நிறுவனம் வெகு விரைவில் ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளைத் தொடங்க இருக்கின்றது. இந்த பணிகள் தொடங்கும்பட்சத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் இ-காரை டெலிவரியை ஆரம்பிக்கும். குறிப்பாக இதன் விலை எப்போது அதிகாரப்பூர்வமாக என்ற கேள்வியே மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் எழும்பியிருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் அதன் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. ஏர் இவி எனும் மின்சார காரையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் 2023 ஆம் ஆண்டிற்கு அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு போட்டியாகவே பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மின்சார காரை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது.

The post மும்பை நிறுவனத்தின் உலகின் விலை குறைந்த எலக்ட்ரிக் கார் first appeared on .

]]>