electricity https://www.91mobiles.com/tamil Tue, 20 Jun 2023 05:24:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 க்ருஹ ஜோதி திட்டம்: கர்நாடகாவில் 200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவது எப்படி? https://www.91mobiles.com/tamil/gruha-jyothi-zero-electricity-bills-for-consumers-who-utilise-lesser-units-than-eligible-average-in-karnataka/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=gruha-jyothi-zero-electricity-bills-for-consumers-who-utilise-lesser-units-than-eligible-average-in-karnataka Tue, 20 Jun 2023 05:24:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8838   2022-23 ஆம் ஆண்டின் பயன்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சராசரியை விட குறைவான மின்சார அலகுகளை (யூனிட்களை) பயன்படுத்தும் தகுதியான அனைத்து நுகர்வோருக்கும் மின் கட்டணத்தை நீக்குவதாக அம்மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் க்ருஹ ஜோதி திட்டம் தொடர்பான அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.   இதன்படி முந்தைய ஆண்டு சராசரியுடன் சேர்த்து, அரசாங்கம் 10% கூடுதல் யூனிட்களை நுகர்வோருக்கு வழங்கும். இந்த சராசரியை விட அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு நிகர பில் வித்தியாசமாக கிடைக்கும். 200 […]

The post க்ருஹ ஜோதி திட்டம்: கர்நாடகாவில் 200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவது எப்படி? first appeared on .

]]>

Highlights

  • கர்நாடகாவில் தகுதி உள்ள அனைத்து நுகர்வோருக்கும் 200 யூனிட் மின்சாரத்தை வழங்க உள்ளது
  • இது வாடகை வீட்டில் இருப்போருக்கும் பொருந்தும்
  • ஏற்கனவே இருக்கும் அனைத்து மின் திட்டங்களும் இந்த திட்டத்தோடு இணைக்கப்படும்.

 

2022-23 ஆம் ஆண்டின் பயன்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சராசரியை விட குறைவான மின்சார அலகுகளை (யூனிட்களை) பயன்படுத்தும் தகுதியான அனைத்து நுகர்வோருக்கும் மின் கட்டணத்தை நீக்குவதாக அம்மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் க்ருஹ ஜோதி திட்டம் தொடர்பான அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

இதன்படி முந்தைய ஆண்டு சராசரியுடன் சேர்த்து, அரசாங்கம் 10% கூடுதல் யூனிட்களை நுகர்வோருக்கு வழங்கும். இந்த சராசரியை விட அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு நிகர பில் வித்தியாசமாக கிடைக்கும். 200 யூனிட் வரம்பை மீறுபவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

 

மற்ற திட்டங்கள் என்னவாகும்?

அதாவது மாதத்திற்கு சராசரியாக 100 யூனிட் வரம்பு வைத்திருக்கும் நுகர்வோர் ஒரு மாதத்தில் சுமார் 150 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், கூடுதல் 50 யூனிட்டுகளுக்கு அவர்கள் பில் செலுத்த வேண்டும். இதனால், ஒவ்வொரு மாதமும் மீட்டர் அளவிடும் பணி தொடரும். தற்போதுள்ள பாக்ய ஜோதி, குடீர ஜோதி மற்றும் அம்ருத ஜோதி ஆகிய திட்டங்கள் க்ருஹ ஜோதி திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

என்ன செய்ய வேண்டும்?

இந்தத் திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான நிலுவைத் தொகையை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும், இல்லையெனில் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் வீட்டு இணைப்புகளுக்கானதாக இருந்தாலும், ஒரு பயனாளி ஒரு இணைப்புக்கு மட்டுமே பலன்களைப் பெற முடியும். இதன் பலன்களைப் பெற, நுகர்வோர் சேவா சிந்து போர்ட்டலில் விண்ணப்பித்து, வாடிக்கையாளர் ஐடி/கணக்கு ஐடியை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

 

வாடகை வீட்டுக்குக் கிடைக்குமா?

ஒரு பயனாளிக்கு ஒரு இணைப்பு என்பது வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு, தாங்கள் இந்த பலனைப் பெற முடியுமா என்ற கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து வாடகை வீட்டில் இருப்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்தால் பலனைப் பெறலாம் என்று பெஸ்காம் அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார்.

 

பல இணைப்புகளை வைத்திருப்பவர் மற்றும் எந்தவொரு நுகர்வோரும் இந்த திட்டத்தை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பத்ற்காக இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. குத்தகைதாரர்கள் க்ருஹ ஜோதி திட்டத்தின் பயனைப் பெற, சேவா சிந்து போர்ட்டலில் தங்கள் வாடகை ஒப்பந்தங்களை சமர்ப்பிக்க வேண்டும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

 

எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் செலவு சரிசெய்தல் வந்த பிறகு, திட்டத்தை செயல்படுத்த ‘எஸ்காம்’களுக்கு நிதியுதவி அடுத்த மாதம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

The post க்ருஹ ஜோதி திட்டம்: கர்நாடகாவில் 200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவது எப்படி? first appeared on .

]]>