galaxy a04 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 10:34:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங்ல இருந்து பட்ஜெட்விலையில் வெளிவரும் இரண்டு மொபைல்கள்! https://www.91mobiles.com/tamil/2-new-samsung-phones-to-launch-in-india-soon-check-out-galaxy-a04-galaxy-a04e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2-new-samsung-phones-to-launch-in-india-soon-check-out-galaxy-a04-galaxy-a04e Thu, 15 Dec 2022 17:05:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4339 ரூ.10,000-க்குள் 2 புதிய ஸ்மார்ட்போன்களை களம் இறக்க தயாராகி வருகிறது சாம்சங் (Samsung). இதில் சுவாரசியம்  என்னவென்றால், இந்த 2 மாடல்களுமே சில சிறப்பான அம்சங்களைக் கொண்டு இருக்கின்றன. கேலக்ஸி ஏ சீரீஸ் (Galaxy A Series) ஆனது சாம்சங் நிறுவனத்தின் “அதிகம் விற்பனையாகும்” சீரீஸ்களில் (Best Selling Series) ஒன்றாகும். இதற்கிடையில் தான் சாம்சங் தனது கேலக்ஸி ஏ-சீரிஸ் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது. இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இரண்டு புதிய ஏ-சீரிஸ் […]

The post சாம்சங்ல இருந்து பட்ஜெட்விலையில் வெளிவரும் இரண்டு மொபைல்கள்! first appeared on .

]]>

ரூ.10,000-க்குள் 2 புதிய ஸ்மார்ட்போன்களை களம் இறக்க தயாராகி வருகிறது சாம்சங் (Samsung). இதில் சுவாரசியம்  என்னவென்றால், இந்த 2 மாடல்களுமே சில சிறப்பான அம்சங்களைக் கொண்டு இருக்கின்றன.

கேலக்ஸி ஏ சீரீஸ் (Galaxy A Series) ஆனது சாம்சங் நிறுவனத்தின் “அதிகம் விற்பனையாகும்” சீரீஸ்களில் (Best Selling Series) ஒன்றாகும். இதற்கிடையில் தான் சாம்சங் தனது கேலக்ஸி ஏ-சீரிஸ் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது.

இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இரண்டு புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது கேலக்ஸி ஏ04 (Galaxy A4) மற்றும் கேலக்ஸி ஏ04இ (Galaxy A04e) ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் கேலக்ஸி ஏ04 (Galaxy A04) ஸ்மார்ட்போனின் ஸ்லிம்டு டவுன் வெர்ஷனாக (Slimmed Down Version) இருக்கும். அதாவது ஒப்பீட்டளவில் சற்றே சமரசம் செய்யப்பட்ட அம்சங்களுடன் வரும் என்று அர்த்தம்!

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Samsung Galaxy A04 மற்றும் Galaxy A04e ஸ்மார்ட்போனில் ரேம் பிளஸ் (RAM Plus) அம்சம் இடம்பெறலாம். அதாவது இந்த இரண்டு போன்களுமே 8GB வரையிலான RAM-ஐ வழங்கும். ரேம் பிளஸ் என்பது இன்டர்னல் மெமரியில் இருந்து கடன் வாங்கப்படும் ஸ்டோரேஜை ரேம் ஆக மாற்றும் ஒரு அம்சமாகும். சாம்சங்கின் கூற்றுப்படி, இந்த அம்சம் ஒரு ஸ்மார்ட்போனை சீராக இயங்க வைக்கும். மேலும் Galaxy A04 மற்றும் Galaxy A04e ஆகிய இரண்டுமே பெரிய அளவிலான பேட்டரிகளைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது இந்த இரண்டு ஏ-சீரிஸ் போன்களுமே 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கலாம்.

டிஸ்ப்ளே

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் முன்னதாக வெளியான கேலக்ஸி ஏ03 (Galaxy A03) மாடலை பின்பற்றலாம். அதாவது இவைகள் 6.5 அங்குலம் என்கிற அளவிலான எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலையைப் பொறுத்தவரை Samsung நிறுவனத்தின் இந்த 2 ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும். அதாவது ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக Galaxy A04e-யின் விலை மிகவும் இன்னும் மலிவானதாக இருக்கலாம்; இது ப்ளூ, ப்ரான்ஸ் மற்றும் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இருப்பினும் இந்த 2 போன்களின் ப்ராசஸர் குறித்து எந்த தகவலும் இல்லை. முன்னரே குறிப்பிட்டபடி, Samsung Galaxy A04 மற்றும் Galaxy A04e ஆகிய இரண்டுமே, இந்த ஆண்டில் அறிமுகமான முதல் ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போனான Galaxy A03 மாடலுக்கு கிடைத்த வெற்றியை பின்தொடர்ந்து வரும் மாடல்கள் ஆகும். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி ஏ03 ஆனது 6.5-அங்குல HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.அது ட்ரூ 48MP டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது; இது லைவ் ஃபோகஸ் மூலம் கூர்மையான புகைப்படங்களை பதிவு செய்கிறது. Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் 1.6GHz ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அது 4GB அளவிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் கூட 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட One UI கோர் 3.1 மூலம் இயங்குகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதன் 3ஜிபி+32ஜிபி ஆப்ஷன் ரூ.10,499 க்கும், 4ஜிபி+64ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சாம்சங்ல இருந்து பட்ஜெட்விலையில் வெளிவரும் இரண்டு மொபைல்கள்! first appeared on .

]]>
அறிமுகம் சாம்சங் கேலக்ஸி A04 https://www.91mobiles.com/tamil/new-budget-smartphone-2022-samsung-galaxy-a04-launched-specs-features-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-budget-smartphone-2022-samsung-galaxy-a04-launched-specs-features-and-more Thu, 25 Aug 2022 05:06:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1826 சாம்சங் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனை மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ03 போனின மேம்பட்ட வெர்ஷன் தான் இந்த கேலக்ஸி ஏ04. இப்போது இந்த (Samsung Galaxy A04) ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். டிஸ்பிளே சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-angku எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு சிறந்த […]

The post அறிமுகம் சாம்சங் கேலக்ஸி A04 first appeared on .

]]>

சாம்சங் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனை மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ03 போனின மேம்பட்ட வெர்ஷன் தான் இந்த கேலக்ஸி ஏ04. இப்போது இந்த (Samsung Galaxy A04) ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-angku எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியைக் கொண்டுள்ளது.

பிராசஸர்

புதிய கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் Exynos 850 பிராசஸர் வசதி உள்ளது. இது மேம்பட்ட வேகத்தை கொடுக்கும். அதேபோல் இந்த பிராசஸர் உதவியுடன் செயலிகளை தடையின்றி பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 12 OS சார்ந்த One UI Core 4.1 மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.

சேமிப்புத்திறன்

4ஜிபி/6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி / 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

கேமரா

இந்த புதிய சாம்சங் போன் பின்பக்கத்தில் இரட்டை கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன். முன்பக்கத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களோடு வெளிவந்துள்ளது.

பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த போன் கருப்பு, வெள்ளை, பச்சை மற்றும் செம்பு ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

டூயல் சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் என்று கூறப்படுகிறது.

விற்பனை

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி ஏ04 போனின் விலை மற்றும் விற்பனைப் பற்றிய தகவலை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை. இருந்தபோதிலும் இந்த புதிய போன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அறிமுகம் சாம்சங் கேலக்ஸி A04 first appeared on .

]]>