Galaxy A25 5G https://www.91mobiles.com/tamil Thu, 21 Dec 2023 06:46:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Samsung Galaxy A25 5G, Galaxy A15 5G ஆகியவை டிசம்பர் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a25-5g-galaxy-a15-5g-india-launch-expected-on-26-december/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a25-5g-galaxy-a15-5g-india-launch-expected-on-26-december Thu, 21 Dec 2023 06:46:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=12529 சாம்சங் தனது இரண்டு A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். இது Samsung Galaxy A25 5G மற்றும் Galaxy A15 5G என்ற பெயர்களுடன் நுழையப் போகிறது. நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், மொபைலின் வெளியீட்டு தேதி ஏற்கனவே டிப்ஸ்டரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல்கள் டிசம்பர் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய அறிக்கை மற்றும் அதன் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம். Galaxy A25 5G மற்றும் Galaxy A15 5G வெளியீட்டு தேதி (கசிந்தது) சாம்சங்கின் […]

The post Samsung Galaxy A25 5G, Galaxy A15 5G ஆகியவை டிசம்பர் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். first appeared on .

]]>

Highlights

  • இரண்டு போன்களும் ரூ.25,000க்கு குறைவாகவே வெளியிடப்படலாம்.
  • Galaxy A25 5G இல் Exynos 1280 சிப் பொருத்தப்பட்டிருக்கலாம்.
  • மொபைல்கள் 50MP ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். 

சாம்சங் தனது இரண்டு A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். இது Samsung Galaxy A25 5G மற்றும் Galaxy A15 5G என்ற பெயர்களுடன் நுழையப் போகிறது. நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், மொபைலின் வெளியீட்டு தேதி ஏற்கனவே டிப்ஸ்டரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல்கள் டிசம்பர் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய அறிக்கை மற்றும் அதன் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Galaxy A25 5G மற்றும் Galaxy A15 5G வெளியீட்டு தேதி (கசிந்தது)

  • சாம்சங்கின் Galaxy A25 5G மற்றும் Galaxy A15 5G வெளியீட்டு தேதி AnLeaks மற்றும் TechOutlook இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது .
  • இந்த மொபைல் டிசம்பர் 26ஆம் தேதி இந்தியாவிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
  • விலையைப் பற்றி பேசுகையில், சாம்சங் இரண்டு போன்களையும் இந்தியாவில் ரூ.25,000க்கும் குறைவாக அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சாம்சங் இந்த மாத தொடக்கத்தில் வியட்நாமில் Galaxy A15 5G மற்றும் Galaxy A25 5G ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

Samsung Galaxy A25 5G இன் விவரக்குறிப்புகள் (குளோபல்)

டிஸ்ப்ளே: Samsung Galaxy A25 5G ஃபோனில் 6.5 இன்ச் FullHD + AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 1080 x 2340 பிக்சல் அடர்த்தி, 120Hz புதுப்பிப்பு மற்றும் 1000nits பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

சிப்செட்: இந்த மொபைலில் octacore Exynos 1280 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 2.4 GHz வரையிலான வேகத்தில் வேலை செய்கிறது.

சேமிப்பு: Galaxy A25 5G ஆனது 128 GB சேமிப்பகத்துடன் 6 GB RAM மற்றும் 128 GB சேமிப்பகத்துடன் 8 GB RAM என இரண்டு வேரியண்டுகளில் வெளியாகும்.

கேமரா: ஃபோனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இது OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

பேட்டரி: பேட்டரியைப் பொறுத்தவரை, 5,000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடைக்கிறது.

Samsung Galaxy A15 5G (குளோபல்) இன் விவரக்குறிப்புகள்

டிஸ்ப்ளே: Samsung Galaxy A15 5G ஆனது 6.5 இன்ச் FullHD + Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 1080 x 2340 பிக்சல் அடர்த்தி, 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 800நிட்ஸ் பிரகாசம் கிடைக்கும்.

சிப்செட்: சிறந்த செயல்திறனுக்காக Galaxy A15 5Gயில் Dimension 6100+ சிப்செட்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

சேமிப்பகம்: டேட்டாவைச் சேமிக்க, இந்த மொபைலில் 8GB ரேம் + 256GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

கேமரா: புகைப்படம் எடுப்பதற்காக ஃபோனில் மூன்று பின்புற கேமரா உள்ளது. இது LED ஃபிளாஷ் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை, 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

பேட்டரி: பேட்டரியைப் பொறுத்தவரை, 5000mAh பேட்டரி வழங்கப்படுகிறது.  மேலும், சார்ஜ் செய்வதற்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

The post Samsung Galaxy A25 5G, Galaxy A15 5G ஆகியவை டிசம்பர் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். first appeared on .

]]>
Samsung Galaxy A25 விலை மற்றும் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a25-price-and-specifications-leaked/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a25-price-and-specifications-leaked Tue, 14 Nov 2023 10:44:51 +0000 https://www.91mobiles.com/tamil/?p=11888 Samsung Galaxy A25 5G கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப உலகின் தலைப்புச் செய்திகளில் உள்ளது. நிறுவனம் இந்த மொபைலைப் பற்றி மௌனம் காத்தாலும்,  அதன் கசிவுகள் தொடர்ந்து வெளி வந்தபடி உள்ளன. இன்று மீண்டும் இந்த சாம்சங் மொபைல் தொடர்பான ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் Galaxy A25 5G இன் அனைத்து விவரக்குறிப்புகள் மற்றும் மொபைலின் உலகளாவிய விலை கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம். Samsung Galaxy A25 5G விலை […]

The post Samsung Galaxy A25 விலை மற்றும் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன first appeared on .

]]>

Samsung Galaxy A25 5G கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப உலகின் தலைப்புச் செய்திகளில் உள்ளது. நிறுவனம் இந்த மொபைலைப் பற்றி மௌனம் காத்தாலும்,  அதன் கசிவுகள் தொடர்ந்து வெளி வந்தபடி உள்ளன. இன்று மீண்டும் இந்த சாம்சங் மொபைல் தொடர்பான ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் Galaxy A25 5G இன் அனைத்து விவரக்குறிப்புகள் மற்றும் மொபைலின் உலகளாவிய விலை கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

Samsung Galaxy A25 5G விலை (கசிந்தது)

கசிவின் படி, Samsung Galaxy A25 5G போன் இரண்டு மெமரி வகைகளில் வெளியிடப்படும். இதன் அடிப்படை மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் விலை சுமார் யூரோ 300 அதாவது ரூ 26,900. அதேசமயம் பெரிய மாறுபாடு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பகத்துடன் சந்தையில் வரலாம். இதன் விலை யூரோ 400 க்கு குறைவாக இருக்கும். அதாவது ரூ.34,900 அளவில் இருக்கும். இதுவே இந்த போனின் உலகளாவிய விலை என்பதால் அதன் இந்திய விலை குறைவாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy A25 5G விவரக்குறிப்புகள் (கசிந்தது)

  • 6.5″ FHD+ டிஸ்ப்ளே
  • Samsung Exynos 1280 சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு
  • 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா
  • 13MP செல்ஃபி கேமரா
  • 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 5000m5Ah பேட்டரி

திரை : Samsung Galaxy A25 5G ஃபோன் தொடர்பான கசிவில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6.5 இன்ச் டிஸ்ப்ளேவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ‘U’ வடிவ வாட்டர் டிராப் நாட்ச் திரையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது FullHD+ பிக்சல் தெளிவுத்திறனைக் கொண்டிருக்கும்.

OS : இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 உடன்  வெளியாகலாம். இருப்பினும், முந்தைய கசிவில், இது சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளம் 14 உடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரியவந்தது. அதே நேரத்தில், இந்த போனில் OneUI கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட் : கசிவின் படி, Galaxy A25 5G ஃபோன், நிறுவனத்தின் 5 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷனில் கட்டப்பட்ட Exynos 1280 octacore சிப்செட்டில் வெளியிடப்படும். இதில் 2.4 GHz கடிகார வேகத்துடன் 2 Cortex-A78 கோர்கள் மற்றும் 2.0 GHz கடிகார வேகத்துடன் 6 Cortex-A55 கோர்கள் இருக்கும்.

நினைவகம் : Samsung Galaxy A25 5G ஃபோனை 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என்ற இரண்டு ரேம் வகைகளில் அறிமுகப்படுத்தலாம். இவை 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில், தொலைபேசி மெய்நிகர் ரேமையும் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பின் கேமரா : புகைப்படம் எடுப்பதற்காக ஃபோனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் காணலாம். கசிவின் படி, பின் பேனலில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் வழங்கப்படும்.

முன் கேமரா : Samsung Galaxy A25 5G ஃபோன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 13 மெகாபிக்சல் முன் கேமராவுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்.

பேட்டரி : பவர் பேக்கப்பிற்காக, Galaxy A25 5G சந்தையில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும், இதன் மூலம் 25W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் காணலாம்.

The post Samsung Galaxy A25 விலை மற்றும் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன first appeared on .

]]>
Galaxy A25 5G புகைப்படங்கள் கசிந்தன. மற்றொரு குறைந்தவிலை மொபைலை வெளியிடுகிறது சாம்சங். https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a25-5g-render-image-leak-design-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a25-5g-render-image-leak-design-revealed Thu, 29 Jun 2023 09:19:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9086   சாம்சங் தொடர்பான புதிய கசிவு வெளிவந்துள்ளது. அதில் நிறுவனம் தனது ‘Galaxy A’ Seriesன் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி என்ற பெயரில் சந்தைக்கு கொண்டு வரப்படும். இந்த கசிவில், போனின் ரெண்டர் படமும் பகிரப்பட்டுள்ளது. அதில் மொபைலின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களையும் அவற்றின் விவரங்களையும் இப்போது பார்க்கலாம். Samsung Galaxy A25 5G (கசிந்த) ரெண்டர் படங்கள் […]

The post Galaxy A25 5G புகைப்படங்கள் கசிந்தன. மற்றொரு குறைந்தவிலை மொபைலை வெளியிடுகிறது சாம்சங். first appeared on .

]]>

 

சாம்சங் தொடர்பான புதிய கசிவு வெளிவந்துள்ளது. அதில் நிறுவனம் தனது ‘Galaxy A’ Seriesன் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி என்ற பெயரில் சந்தைக்கு கொண்டு வரப்படும். இந்த கசிவில், போனின் ரெண்டர் படமும் பகிரப்பட்டுள்ளது. அதில் மொபைலின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களையும் அவற்றின் விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

Samsung Galaxy A25 5G (கசிந்த) ரெண்டர் படங்கள்

முன்பக்கத் தோற்றம்: மொபைலின் முன் பேனலில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்ச் மிகவும் சிறியதாகவும், ‘யு’ வடிவத்திலும் உள்ளது. திரையின் மூன்று பக்கங்களிலும் பெசல் லேஸ்கள் இருக்கும் இடத்தில், கீழே அகலமான ’சின்’ பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் முன் பேனலில் திரைக்கு சற்று மேலே வைக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் விளிம்புகள் வளைந்த விளிம்புகள்.

பின்பக்கத் தோற்றம்: Samsung Galaxy A25 5G இன் பின்புறப் பேனல் தட்டையாகக் காட்டப்பட்டுள்ளது. மேல் வலதுபுறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் உள்ளன. இந்த மூன்று லென்ஸ்களும் செங்குத்தாக வைக்கப்பட்டு அவற்றின் பக்கத்தில் ஒளிரும் விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் பிராண்டிங் பேனலின் கீழே உள்ளது. புகைப்படங்களில், தொலைபேசி ஒரு தட்டையான சட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.

பக்க வடிவமைப்பு: ஃபோனின் வலது பேனலில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பவர் பட்டன் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் ஆகும். சிம் கார்டு ஸ்லாட் இடது பேனலில் உள்ளது. போனின் கீழ் பேனலில் USB Type C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் இடது பக்கத்தில் 3.5mm ஜாக் மற்றும் வலது பக்கத்தில் ஸ்பீக்கர் உள்ளது. கசிவில், இந்த போனின் அளவுகள் 162 x 77.5 x 8.3 மிமீ என கூறப்பட்டுள்ளது.

Samsung Galaxy A25 5G (கசிந்த) விவரக்குறிப்புகள்

 

  • 6.44″ LCD டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்
  • 64MP பின்புற கேமரா
  • 24MP முன் கேமரா
  • 5,100mAh பேட்டரி

திரை: கேலக்ஸி ஏ25 5ஜி போனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கசிவில் கூறப்பட்டுள்ளது. இது LCD பேனலாக இருக்கலாம். இது 90Hz புதுப்பிப்பு வீத ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்: இந்த சாம்சங் போன் MediaTek இன் Dimensity 700 Octacore சிப்செட்டில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது. சாம்சங்கின் OneUI ஸ்கின் கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் இந்த போனில் காணப்படும்.

முன் கேமரா: இந்த ஸ்மார்ட்போன் புகைப்படம் எடுப்பதில் சிறப்பாக இருக்கும். கசிவின் படி, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக கேலக்ஸி A25 5G இல் 24 மெகாபிக்சல் முன் கேமரா கொடுக்கப்படலாம்.

பின்புற கேமரா: தொலைபேசி மூன்று பின்புற கேமராவுடன் வெளியாகலாம். 64MP  முதன்மை சென்சார் இதில் கொடுக்கப்படலாம். இது தவிர 12MP மற்றும் 8MP   கொண்ட மேலும் இரண்டு கேமராக்களும் இருக்கும்.

பேட்டரி: பவர் பேக்கப்பிற்காக, Samsung Galaxy A25 5G போனில் 5,100 mAh பேட்டரியை வழங்குவதற்கான பேச்சு கசிவில் வெளிவருகிறது. இதனுடன், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வருவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

The post Galaxy A25 5G புகைப்படங்கள் கசிந்தன. மற்றொரு குறைந்தவிலை மொபைலை வெளியிடுகிறது சாம்சங். first appeared on .

]]>