galaxy A54 5G https://www.91mobiles.com/tamil Wed, 15 Mar 2023 12:25:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP கேமராவோடு Galaxy A54 5G & 48MP கேமராவோடு Galaxy A34 5G மொபைல்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் https://www.91mobiles.com/tamil/samsung_galaxy_a54_a34_official_price_availablitity-news/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung_galaxy_a54_a34_official_price_availablitity-news Wed, 15 Mar 2023 12:25:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6907   பல வார கசிவுகளுக்குப் பிறகு, சாம்சங்கின் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மிட்-ரேஞ்ச் மொபைல்களான Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5Gமொபைல்கள் இறுதியாக அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இரு மொபைல்களும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் மேல் சாம்சங்கின் One UI 5.1 ஸ்கின் உடன் வெளியாகி இருக்கின்றன. இது தவிர, தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்கான IP67 மதிப்பீட்டையும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளன. இதுவே இரு மொபைல்களுக்கு இடையே […]

The post 50MP கேமராவோடு Galaxy A54 5G & 48MP கேமராவோடு Galaxy A34 5G மொபைல்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் first appeared on .

]]>

Highlights

  • மிட்ரேஞ்ச் விலைப்பிரிவில் கேலக்ஸி ஏ54 5G & கேலக்ஸி ஏ34 5G என இரண்டு மொபைல்கள் வெளியானது
  • இரண்டிலும் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உள்ளன.
  • இந்த மாதம் ஐரோப்பா & ஆசிய நாடுகளில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும்.

 

பல வார கசிவுகளுக்குப் பிறகு, சாம்சங்கின் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மிட்-ரேஞ்ச் மொபைல்களான Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5Gமொபைல்கள் இறுதியாக அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இரு மொபைல்களும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் மேல் சாம்சங்கின் One UI 5.1 ஸ்கின் உடன் வெளியாகி இருக்கின்றன. இது தவிர, தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்கான IP67 மதிப்பீட்டையும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளன. இதுவே இரு மொபைல்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை ஆகும். மற்றபடி சிப்செட், கேமராக்கள், மெமரி என எல்லாவற்றிலும் இரு மொபைல்களும் வேறுபடுகின்றன. இரு மொபைல்களின் அம்சங்களையும், வசதிகளையும் விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5G

டிஸ்ப்ளே

சுவாரஸ்யமாக, Galaxy A54 5G சிறிய ஃபோன் ஆகும், இது 6.4 அங்குல 1080p சூப்பர் AMOLED பேனலுடன் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் விஷன் பூஸ்டர் ஆதரவுடன் வருகிறது. Galaxy A54 ஆனது 158.2×76.7×8.2mm அளவில், 202g எடையில் வெளியாகி இருக்கிறது.

Galaxy A34 5G ஆனது 6.6 அங்குல சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் 1080p தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் விஷன் பூஸ்டர் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் 161.3×78.1×8.2mm  அளவில் உள்ளது. இதன் எடை 199g கிராம்கள் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ54 5G

கேமரா

Samsung Galaxy A54 5G ஆனது பின்பக்கத்தில் f/1.8 அப்பசருடன் கூடிய 50MP பிரதான கேமரா, f/2.2  அப்பசருடன் கூடிய 12MP நிலையான-ஃபோகஸ் கொண்ட அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் f/2.4 அப்பசருடன் கூடிய 5MP பிரத்யேக மேக்ரோ கேமரா என மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் f/2.2 அப்பசருடன் கூடிய 32MP செல்ஃபி கேமரா உள்ளது.

அதேவேளையில் Samsung Galaxy A34 5G ஆனது f/1.8 அப்பசருடன் கூடிய 48MP பிரதான கேமரா, f/2.2 அப்பசருடன் கூடிய 8MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் f/2.4 அப்பசருடன் கூடிய 5MP  மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மொபைலின் முன்பக்கத்தில் இருக்கும் செல்ஃபி கேமராவில் 13எம்பி சென்சார் உள்ளது.

 

சிப்செட் & மெமரி

Galaxy A54 5G மொபைல் ஆனது 5nm Exynos 1380 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Galaxy A34 5G ஆனது 6nm MediaTek Dimensity 1080 ஐக் கொண்டுள்ளது. நீங்கள் 6GB அல்லது 8GB RAM உடன் 128GB அல்லது 256GB விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் இந்த போன்களை வாங்கலாம்.

நிறங்கள் & விலை

Galaxy A34 5G மொபைல் ஆனது Lime, Graphite, Violet மற்றும் Silver ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த மொபைலின்  6ஜிபி ரேம் + 128GB சேமிப்புத்திறன் கொண்ட மாடல்  €390 (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 34,240) விலையில் வருகிறது. அதுவே 8ஜிபி + 256GB சேமிப்புத்திறன் கொண்ட மாடல் €460 (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 40,338) விலையில் வருகிறது. அறிமுகச் சலுகையில் இதன் விலை இன்னும் குறையலாம்.

அதேபோல் Galaxy A54 5Gஆனது லைம், கிராஃபைட், வயலட் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இதன்  6/128GB மாடல் €490 (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 42,963) என்ற விலைக்கும், 8/256GB மாடல்  (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 47,358) என்ற விலைக்கும் விற்பனைக்கு வருகிறது. இதற்கும் அறிமுகச்சலுகை இருக்கும். இந்த மாதம் முதல் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும்.

The post 50MP கேமராவோடு Galaxy A54 5G & 48MP கேமராவோடு Galaxy A34 5G மொபைல்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் first appeared on .

]]>
A சீரிஸில் கேலக்ஸி A34 5G மற்றும் கேலக்ஸி A54 5G இரண்டு மொபைல்களை சாம்சங் வெளியிட இருப்பதாகத் தகவல். https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a54-5g-galaxy-a34-5g-smartphone-might-launching-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a54-5g-galaxy-a34-5g-smartphone-might-launching-soon Tue, 14 Feb 2023 07:58:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5815 புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் சிறந்த பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஏனெனில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மரா்ட்போனில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5G என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.   Galaxy A34 […]

The post A சீரிஸில் கேலக்ஸி A34 5G மற்றும் கேலக்ஸி A54 5G இரண்டு மொபைல்களை சாம்சங் வெளியிட இருப்பதாகத் தகவல். first appeared on .

]]>

Highlights

  • சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • இவை கேலக்ஸி A34 5G மற்றும் கேலக்ஸி A54 5G என்ற பெயர்களில் வெளியாகும் எனத் தகவல்

புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் சிறந்த பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஏனெனில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மரா்ட்போனில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5G என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

 

Galaxy A34 5G விலை

டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் தரப்பில் கூறப்படும் தகவலின்படி, Galaxy A34 5G ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை தோராயமாக ரூ.36,200 எனவும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை தோராயமாக ரூ.41,500 என நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

Galaxy A54 5G விலை

அதேபோல் Galaxy A54 5G ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பக வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இரண்டு மாடல்களும் சுமார் ரூ.46,000 முதல் ரூ.51,000 என்ற விலைப்பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது.

 

Samsung Galaxy A54 5G சிறப்பம்சங்கள்

சாம்சங்கின் Galaxy A54 5G ஸ்மார்ட்போனானது  பிளாக், வயலட், வைட் மற்றும் க்ரீன் வண்ண நான்கு வண்ண விருப்பங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் உட்பட டிரிபிள் ரியர் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.4 அங்குல முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Samsung Galaxy A34 5G சிறப்பம்சங்கள்

ஓஎஸ் டிப்ஸ்டர் SnoopyTech ட்வீட்டின் மூலம் வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி A34 5G ஆனது 6.6 அங்குல டிஸ்ப்ளே உடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆவ்சம் சில்வர், ஆவ்சம் வயலட், ஆவ்சம் லைம் மற்றும் ஆவ்சம் கிராஃபைட் என 4 வண்ண விருப்பத்தில் வெளியாக இருக்கிறது. வரவிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது Samsung Galaxy A33 இன் வாரிசாக சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த போனானது SM-A346M என்ற மாடல் எண்ணுடன் US ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) என்ற இணையதளத்தில் முன்பு காணப்பட்டது. இந்த பட்டியலின்படி, புதிய ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ப்ளூடூத் SIG தரவுத்தளம் மற்றும் Geekbench தளத்திலும் காணப்பட்டிருக்கிறது.

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. Geekbench இன் சிங்கிள் கோர் சோதனையில் 778 புள்ளிகளும் மல்டி கோர் சோதனையில் 2,322 புள்ளிகளும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றிருக்கிறது. Samsung Galaxy A34 5G ஆனது இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) இணையதளத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

கேமரா

இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கா மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post A சீரிஸில் கேலக்ஸி A34 5G மற்றும் கேலக்ஸி A54 5G இரண்டு மொபைல்களை சாம்சங் வெளியிட இருப்பதாகத் தகவல். first appeared on .

]]>
இணையத்தில் வெளியானது சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ரெண்டர்கள். https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a54-5g-press-renders-surface-in-four-colours/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a54-5g-press-renders-surface-in-four-colours Tue, 03 Jan 2023 06:50:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4643 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக CAD சார்ந்த ரெண்டர்கள் வெளியாகி இருந்தது. ரெண்டர்களின்படி புது ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பில், வைட் மற்றும் கிரீனிஷ் எல்லோ என நான்கு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல், AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 158.3×76.7mm அளவில் உருவாகி இருக்கிறது. இது கேலக்ஸி A53 மாடலை விட சற்றே அகலமாக […]

The post இணையத்தில் வெளியானது சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ரெண்டர்கள். first appeared on .

]]>

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

முன்னதாக CAD சார்ந்த ரெண்டர்கள் வெளியாகி இருந்தது. ரெண்டர்களின்படி புது ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பில், வைட் மற்றும் கிரீனிஷ் எல்லோ என நான்கு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல், AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 158.3×76.7mm அளவில் உருவாகி இருக்கிறது. இது கேலக்ஸி A53 மாடலை விட சற்றே அகலமாக இருக்கும் எனத் தெரிகிறது.

அம்சங்கள்

இத்துடன் 6.4 இன்ச் OLED HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 1380 பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இதில் 50MP பிரைமரி கேமரா இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம். இது மட்டுமின்றி கேலக்ஸி A74 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படாது என்றும் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் அடுத்த கேலக்ஸி A சீரிசில் டாப் எண்ட் மாடலாக இருக்கும் எனவும் தெரிகிறது. இதற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போன் கேலக்ஸி A74 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி S22 எஃப்இ

அதுபோல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்ட நிலையில், தற்போது இதன் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் டுவட்டர் பதிவில் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இரு சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை லீக்கர் டொஹியுன் கிம் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இவர் கேலக்ஸி S22 FE வெளியாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

கேலக்ஸி அன்பேக்டு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் புதிய A14, A24, A34 மற்றும் A54 என புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

மற்றொரு டிப்ஸ்டரான RGcloudS, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி டேப் S8 FE போன்ற சாதனங்களை இரண்டாவது அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யும் எனத் தெரிவித்து இருக்கிறார். கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி A74 ஸ்மார்ட்போனிற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

The post இணையத்தில் வெளியானது சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ரெண்டர்கள். first appeared on .

]]>
ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி? https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a54-5g-to-be-launched-soon-at-a-budget-price-with-25-watts-fast-charging-facility/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a54-5g-to-be-launched-soon-at-a-budget-price-with-25-watts-fast-charging-facility Fri, 11 Nov 2022 06:59:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3555 சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம். டிஸ்பிளே சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 அங்குல Super AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் […]

The post ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி? first appeared on .

]]>

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 அங்குல Super AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாக உதவும்.

ஆண்ட்ராய்டு 13

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-A5460 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கும்

ஸ்டோரேஜ்

இந்த கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்

கனெக்டிவிட்டி

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி இணையத்தில் கசிந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி? first appeared on .

]]>