galaxy f22 https://www.91mobiles.com/tamil Fri, 05 Aug 2022 11:17:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங்கின் ரூ12,499 போனை இப்போ ரூ 10,499க்கு வாங்கலாம்! https://www.91mobiles.com/tamil/best-battery-backup-budget-smartphone-2022-samsung-galaxy-f22-get-rs-2000-price-cut/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-battery-backup-budget-smartphone-2022-samsung-galaxy-f22-get-rs-2000-price-cut Fri, 05 Aug 2022 11:16:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1401 சாம்சங் நிறுவனத்தின் ‘பேட்டரி-பேஸ்டு’ (அதாவது தரமான பேட்டரி லைஃப்பை வழங்கும்) ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் மீது “நம்ப முடியாத அளவிலான” விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பட்ஜெட் போன் இப்போது சூப்பர்-பட்ஜெட் போனாகி விட்டது! கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த F22 இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமானது. தற்போது இந்த இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களுமே இந்த “விலை வீழ்ச்சியை” சந்தித்து உள்ளன. பழைய விலை VS புதிய விலை Samsung Galaxy F22 ஸ்மார்ட்போன் […]

The post சாம்சங்கின் ரூ12,499 போனை இப்போ ரூ 10,499க்கு வாங்கலாம்! first appeared on .

]]>

சாம்சங் நிறுவனத்தின் ‘பேட்டரி-பேஸ்டு’ (அதாவது தரமான பேட்டரி லைஃப்பை வழங்கும்) ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் மீது “நம்ப முடியாத அளவிலான” விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பட்ஜெட் போன் இப்போது சூப்பர்-பட்ஜெட் போனாகி விட்டது!

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த F22 இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமானது. தற்போது இந்த இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களுமே இந்த “விலை வீழ்ச்சியை” சந்தித்து உள்ளன.

பழைய விலை VS புதிய விலை

Samsung Galaxy F22 ஸ்மார்ட்போன் ஆனது 4GB + 64GB மற்றும் 6GB + 128GB என்கிற ஸ்டோரேஜ் ஆப்ஷகளின் கீழ் முறையே ரூ.12,499 மற்றும் ரூ.14,499 க்கு அறிமுகமானது. தற்போது இந்த இரண்டின் மீதும் ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இப்போது 4ஜிபி ரேம் மாடலை ரூ.10,499 க்கும், 6ஜிபி ரேம் மாடலை ரூ.12,499 க்கும் வாங்கலாம்.

இதுதவிர டெனிம் ப்ளூ மற்றும் டெனிம் பிளாக் என்கிற 2 நிறத்தேர்வுகளில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் மீது வங்கி சலுகை ஒன்றும் அணுக கிடைக்கிறது. நீங்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பட்சத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மீது கூடுதலாக ரூ.1,000 என்கிற தள்ளுபடியை பெறலாம்.

அம்சங்கள்

இந்த போனில் 6.4-அங்குல HD+ Super AMOLED Infinity-U டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த UI 3.1 மூலம் இயங்குகிறது.

பேட்டரி

“எனக்கு பேட்டரி தான் முக்கியம்!” என்பவர்கள் Galaxy F22 மாடலை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். இதில், 6000mAh பேட்டரி இருக்கிறது. இதோடு 15W USB-C ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இருந்தாலும் 25W வரையிலான சார்ஜிங்கையும் ஆதரிக்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 130 மணிநேர மியூசிக் பிளேபேக், 40 மணிநேர டாக் டைம், 25 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 24 மணிநேர இன்டர்நெட் ப்ரவுஸிங் நேரத்தை வழங்கும்.

கேமராக்கள்

கேமராக்களை பொறுத்தவரை, இது குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ISOCELL Plus தொழில்நுட்பம் மற்றும் GM2 சென்சார்-ஐ கொண்ட 48MP முதன்மை கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் (123-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) + 2MP மேக்ரோ லென்ஸ் + 2MP டெப்த் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 13MP செல்ஃபி கேமரா உள்ளது.
அடிப்படைத் தேவைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் பேட்டரி லைஃப் சிறப்பாக உள்ளது தான், ஆனாலும் இதன் “பெரிய” 6000mAh பேட்டரியை 15W சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்ய, இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்ல பேட்டரி இருக்கிறது, ஆக சூப்பராக கேமிங் செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் செயல்திறன் சுமார் தான்! அதே போல, இதில் குவாட் ரியர் கேமராக்கள் இருந்தாலும் புகைப்படத்தின் சில சமயங்களில் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக குறைந்த வெளிச்சத் தருணங்களில்.
இனிமேல் முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான்!

The post சாம்சங்கின் ரூ12,499 போனை இப்போ ரூ 10,499க்கு வாங்கலாம்! first appeared on .

]]>