Galaxy F54 5G https://www.91mobiles.com/tamil Tue, 06 Jun 2023 11:51:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது Samsung Galaxy F54 5G https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-f54-5g-launched-in-india-price-specifications-offer/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-f54-5g-launched-in-india-price-specifications-offer Tue, 06 Jun 2023 11:51:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8602   Samsung Galaxy F54 5G போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் 5G பேண்டுகள் (Band) ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர் இரண்டிலும் சீராக வேலை செய்கின்றன. சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் திறன் மிக்க கேமரா கொண்ட இந்த மொபைல் நடுத்தர பட்ஜெட் (Mid range) பிரிவில் வெளியாகி இருக்கிறது. அதன் அம்சங்கள், விவரக்குறிப்புகள், விலை மற்றும் விற்பனை பற்றிய அனைத்து தகவல்களையும் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.   Samsung Galaxy F54 5G […]

The post 108MP கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது Samsung Galaxy F54 5G first appeared on .

]]>

Highlights

  • இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999.
  • இதில் Exynos 1380 சிப்செட் உள்ளது.

 

Samsung Galaxy F54 5G போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் 5G பேண்டுகள் (Band) ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர் இரண்டிலும் சீராக வேலை செய்கின்றன. சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் திறன் மிக்க கேமரா கொண்ட இந்த மொபைல் நடுத்தர பட்ஜெட் (Mid range) பிரிவில் வெளியாகி இருக்கிறது. அதன் அம்சங்கள், விவரக்குறிப்புகள், விலை மற்றும் விற்பனை பற்றிய அனைத்து தகவல்களையும் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

 

Samsung Galaxy F54 5G விலை மற்றும் விற்பனை

Samsung Galaxy F54 5G போன், 256GB சேமிப்புத்திறன், 8GB RAM உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.29,999. Galaxy F54 5G மொபைலை  Flipkart மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் Meteor Blue மற்றும் Stardust Silver வண்ணங்களில் வாங்கலாம். அறிமுகச் சலுகையாக சாம்சங் நிறுவனம் ரூ.2,000 தள்ளுபடியை வழங்குகிறது.  எனவே இதன் விலை சில நாட்களுக்கு ரூ.27,999 ஆக இருக்கும்.

Samsung Galaxy F54 5G அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்

 

  • 6.7″ சூப்பர் AMOLED+ திரை
  • Exynos 1380 சிப்செட்
  • 108MP பின்புற கேமரா
  • 32MP செல்ஃபி கேமரா
  • 25W ஃபாஸ்ட் சார்ஜிங் &  6,000mAh பேட்டரி

 

திரை

Galaxy F54 5G ஆனது சூப்பர் AMOLED+ பேனலில் கட்டப்பட்ட பெரிய 6.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும் பஞ்ச் ஹோல் ஸ்டைல் ​​திரையாகும்.

 

சிப்செட்

Galaxy F54 5G ஆனது சாம்சங்கின் 5nm ஃபேப்ரிக்கேஷனில் கட்டமைக்கப்பட் Exynos 1380 octa-core செயலியுடன் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைல் Android 13 அடிப்படையிலான OneUI 5.1 இயங்குதளத்தில் இயங்குகிறது.

பின் கேமரா

இந்த சாம்சங் போனில் புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா உள்ளது. இந்த மொபைலில் OIS அம்சத்துடன் வரும் f/1.8 அப்பசருடன் கூடிய 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. மேலும், பின்புற கேமரா அமைப்பில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன.

 

முன் கேமரா

செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக, Samsung Galaxy F54 5G ஃபோன் 32 மெகாபிக்சல் முன் கேமரா f/2.2 அப்பசருடன் கூடிய சென்சாரோடு வருகிறது.

 

பேட்டரி

Galaxy F54 5G மொபைல், பவர் பேக்கப்பிற்காக 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

The post 108MP கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது Samsung Galaxy F54 5G first appeared on .

]]>
இந்தியாவில் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் Samsung Galaxy F54 5G மொபைலின் விலை கசிந்துள்ளது. https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-f54-5g-price-in-india-leaked-before-6-june-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-f54-5g-price-in-india-leaked-before-6-june-launch Wed, 31 May 2023 12:02:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8477   Samsung Galaxy F54 5G போன் இந்தியாவில் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாம்சங் போன் 108 மெகாபிக்சல் கேமரா சென்சாருடன் வெளியாகும்  என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அறிமுகத்திற்கு முன்பே,  இந்த Galaxy F54 5G போன் விலையும் கசிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. Samsung Galaxy F54 5G (கசிந்த) விலை   8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி விலை ரூ.28,499 சாம்சங் கேலக்ஸி F54 5ஜி போனின் விலை […]

The post இந்தியாவில் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் Samsung Galaxy F54 5G மொபைலின் விலை கசிந்துள்ளது. first appeared on .

]]>

Highlights

  • இந்த போனின் விலையை டிப்ஸ்டர் பராஸ் வெளியிட்டுள்ளார்.
  • இதன் விலை ரூ.28,499 என கூறப்படுகிறது.
  • இது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டிருக்கும்.

 

Samsung Galaxy F54 5G போன் இந்தியாவில் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாம்சங் போன் 108 மெகாபிக்சல் கேமரா சென்சாருடன் வெளியாகும்  என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அறிமுகத்திற்கு முன்பே,  இந்த Galaxy F54 5G போன் விலையும் கசிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

6 ஜூன் samsung galaxy f54 5g இந்தியாவில் முன்பதிவு தேதி

Samsung Galaxy F54 5G (கசிந்த) விலை

 

  • 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி விலை ரூ.28,499

சாம்சங் கேலக்ஸி F54 5ஜி போனின் விலை குறித்த தகவல் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி மூலம் தெரியவந்துள்ளது. இந்த மொபைல் போன் இந்தியாவில் ரூ.28,499 விலையில் வெளியிடப்படும் என ட்விட்டர் மூலம் பராஸ் தெரிவித்துள்ளார். இந்த விலையில் வரும் மொபைல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும், உறுதியான விலைக்கு ஜூன் 6 வரை காத்திருக்க வேண்டும்.

108MP கேமரா ஃபோன் Samsung Galaxy M54 5G அறிமுகப்படுத்தப்பட்டது விலை விவரக்குறிப்புகள்

Samsung Galaxy F54 5G (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

  • 6.7″ AMOLED 120Hz திரை
  • ரேம் – 6 GB
  • Samsung Exynos 1380
  • 6,000mAh பேட்டரி
  • 108MP பின்புற கேமரா
  • 32எம்பி செல்ஃபி கேமரா

 

டிஸ்ப்ளே – கசிவின் படி, இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல்எச்டி+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவில் வெளியிடப்படும். இது AMOLED பேனலில் தயாரிக்கப்பட்டு 120Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்யும்.

சிப்செட் – Samsung Galaxy F54 5G Xenos 1380 octa-core சிப்செட்டோடு வரலாம்.   வெளியான கசிவுகளின்படி இந்த போன் Android 13 அடிப்படையிலான OneUI 5 இல் வெளியிடப்படும்.

பின்புற கேமரா – இந்த ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் பின்புற கேமராவை கொண்டு இருக்கும். இது OIS தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மான்ஸ்டர் ஷாட் 2.0, ஆஸ்ட்ரோலாப்ஸ், நைட்கிராபி மற்றும் ஃபன் மோட் போன்ற 16 லென்ஸ்கள் கொண்ட அம்சங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும்.

செல்ஃபி கேமரா – கசிவின்படி, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக Samsung Galaxy F54 5G ஃபோனில் 32 மெகாபிக்சல் முன் கேமராவைக் காணலாம்.

பேட்டரி – பவர் பேக்கப்பிற்காக, இந்த சாம்சங் போனில் 6,000 mAh பேட்டரி கொடுக்கப்படலாம். அது 25W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு வர வாய்ப்புள்ளது.

The post இந்தியாவில் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் Samsung Galaxy F54 5G மொபைலின் விலை கசிந்துள்ளது. first appeared on .

]]>