Galaxy S22 FE https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:33:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இணையத்தில் வெளியானது சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ரெண்டர்கள். https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a54-5g-press-renders-surface-in-four-colours/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a54-5g-press-renders-surface-in-four-colours Tue, 03 Jan 2023 06:50:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4643 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக CAD சார்ந்த ரெண்டர்கள் வெளியாகி இருந்தது. ரெண்டர்களின்படி புது ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பில், வைட் மற்றும் கிரீனிஷ் எல்லோ என நான்கு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல், AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 158.3×76.7mm அளவில் உருவாகி இருக்கிறது. இது கேலக்ஸி A53 மாடலை விட சற்றே அகலமாக […]

The post இணையத்தில் வெளியானது சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ரெண்டர்கள். first appeared on .

]]>

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

முன்னதாக CAD சார்ந்த ரெண்டர்கள் வெளியாகி இருந்தது. ரெண்டர்களின்படி புது ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பில், வைட் மற்றும் கிரீனிஷ் எல்லோ என நான்கு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல், AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 158.3×76.7mm அளவில் உருவாகி இருக்கிறது. இது கேலக்ஸி A53 மாடலை விட சற்றே அகலமாக இருக்கும் எனத் தெரிகிறது.

அம்சங்கள்

இத்துடன் 6.4 இன்ச் OLED HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 1380 பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இதில் 50MP பிரைமரி கேமரா இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம். இது மட்டுமின்றி கேலக்ஸி A74 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படாது என்றும் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் அடுத்த கேலக்ஸி A சீரிசில் டாப் எண்ட் மாடலாக இருக்கும் எனவும் தெரிகிறது. இதற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போன் கேலக்ஸி A74 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி S22 எஃப்இ

அதுபோல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்ட நிலையில், தற்போது இதன் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் டுவட்டர் பதிவில் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இரு சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை லீக்கர் டொஹியுன் கிம் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இவர் கேலக்ஸி S22 FE வெளியாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

கேலக்ஸி அன்பேக்டு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் புதிய A14, A24, A34 மற்றும் A54 என புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

மற்றொரு டிப்ஸ்டரான RGcloudS, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி டேப் S8 FE போன்ற சாதனங்களை இரண்டாவது அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யும் எனத் தெரிவித்து இருக்கிறார். கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி A74 ஸ்மார்ட்போனிற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

The post இணையத்தில் வெளியானது சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ரெண்டர்கள். first appeared on .

]]>