galaxy S23 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 08:46:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 ப்ளஸ்! என்ன இருக்கு? என்ன இல்ல? https://www.91mobiles.com/tamil/specs-details-about-samsung-galaxy-s23-s23plus/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=specs-details-about-samsung-galaxy-s23-s23plus Wed, 01 Feb 2023 18:28:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5471 இன்று நடைபெற்ற சாம்சங் அன்பேக்டு (Samsung Unpacked) நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸில் மூன்று மொபைல்கள் வெளியாகின. இதில் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த அல்ட்ராவோடு சேர்த்து, கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய மொபைல்களும் வெளியாகின. அல்ட்ராவில் இருந்த ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், வயர்லெஸ் சார்ஜிங், டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உட்பட பல அம்சங்கள் இந்த இரண்டு மொபைல்களிலும் இருந்தன. இந்த மொபைல்களின் […]

The post சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 ப்ளஸ்! என்ன இருக்கு? என்ன இல்ல? first appeared on .

]]>

Highlights

  • சாம்சங் அன்பேக்டு நிகழ்வில்கேலக்ஸி S23 அல்ட்ராவோடு சேர்த்து, கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய மொபைல்களும் வெளியாகின.
  • அல்ட்ராவில் இருந்த பல சிறந்த அம்சங்கள் இந்த இரு மொபைல்களிலும் இருந்தன.

இன்று நடைபெற்ற சாம்சங் அன்பேக்டு (Samsung Unpacked) நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸில் மூன்று மொபைல்கள் வெளியாகின. இதில் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த அல்ட்ராவோடு சேர்த்து, கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய மொபைல்களும் வெளியாகின. அல்ட்ராவில் இருந்த ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், வயர்லெஸ் சார்ஜிங், டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உட்பட பல அம்சங்கள் இந்த இரண்டு மொபைல்களிலும் இருந்தன. இந்த மொபைல்களின் அம்சங்களை விரிவாக இப்போது பார்க்கலாம்.

திரை

கேலக்ஸி S23 மொபைலில் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் கூடிய 6.1 அங்குல FHD+ திரை வழங்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில் கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலில் 6.6 அங்குல FHD+ திரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இரண்டு மொபைல்களும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இதோடு ‘விஷன் பூஸ்டரும்’ வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S23 மொபைலானது 70.9 x 146.3 x 7.6mm அளவில் 168 கிராம் எடையில் வெளியாகி இருக்கிறது. அதே வேளையில் கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலானது 76.2 x 157.8 x 7.6mm அளவில் 196 கிராம் எடையில் வெளியாகி இருக்கிறது.

கேமரா

கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் என  இரு மொபைல்களிலும் பின்பக்கத்தில் மூன்று முன்பக்கத்தில் ஒன்று என மொத்தம் 4 கேமராக்கள் இடம்பெற்று இருக்கின்றன. இதில் முதன்மை கேமராவாக f1.8 அப்பசர் உடைய 50MP வைடு ஆங்கிள் கேமரா உள்ளது. இதனையடுத்து 12MP அல்ட்ரா வைடு கேமரா ஒன்றும், 10MP டெலிபோட்டோ கேமரா ஒன்றும் பின்பக்கத்தில் இருக்கிறது. கூடவே ஒரு LED லைட் ஒன்றும் உள்ளது.

செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்க்கொள்ளவும் முன்பக்கத்தில் 12MP கேமரா ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

 

சிப்செட்

கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் போலவே இந்த இரு மாடல்களூம் சமீபத்திய முதல்தர சிப்செட்டான ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இதனால் மொபைல் திறம்பட செய்ல்படும்.

இயங்குதளம்

அதுபோல சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் போலவே ஆண்ட்ராய்டு 13 மேல் கட்டமைக்கப்பட்ட சாம்சங்கின் One UI5.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கென Samsung Knox,   Samsung Knox Vault போன்றவையும் இந்த இரு மொபைல்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

 

மெமரி

கேலக்ஸி S23 மொபைல் 3 விதமான மெமரி வேரியண்ட்களில் வெளியாகிறது.

8 GB ரேம் + 128 GB சேமிப்புத்திறன்

8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்

8 GB ரேம் + 512 GB சேமிப்புத்திறன்

ஆனால், கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைல் இரண்டு விதமான மெமரி வேரியண்ட்களில் மட்டுமே வெளியாகிறது.

8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்

8 GB ரேம் + 512 GB சேமிப்புத்திறன்

பேட்டரி

கேலக்ஸி S23 மொபைலில் 3900mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான சார்ஜரை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 50% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலை WPC முறையில் வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.

அதுவே கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலில் 4700mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கபட்டுள்ளது. ஆனால், இதற்கும் சார்ஜரை தனியாக விலை கொடுத்தே வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 65% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலையும் WPC முறையில் வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.

கனெக்டிவிட்டி

இந்த இரு மாடல்களும் 5G மொபைல்கள் ஆகும். இந்த மொபைல்களில் LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct Bluetooth V5.3 போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகளும் இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் இருக்கிறது.  இதுதவிர IP68 ரேட்டிங்ஸோடு கூடிய வாட்டர் ரெஸிஸ்டன்ஸ், தூசு, அழுக்கு தடுப்பு வசதியும் இருக்கிறது.

 

விலை

சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் மொபைல்களின் இந்திய விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

The post சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 ப்ளஸ்! என்ன இருக்கு? என்ன இல்ல? first appeared on .

]]>
200MP கேமராவுடன் வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி எஸ்23? https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-s23-smartphones-important-specs-leaked/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-s23-smartphones-important-specs-leaked Mon, 07 Nov 2022 06:09:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3419 சிப்செட் Samsung நிறுவனம் அறிமுகம் செய்யும் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 200 மெகாபிக்சல் கேமரா, ஸ்னாப்ட்ராகன் சிப்செட் உடன் வெளியாகும் என பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகின்றன. குவால்காமின் CFO, ஆகாஷ் பல்கிவாலா சமீபத்தில் பங்கேற்ற மூதலீட்டாளர்கள் மாநாட்டில், 2023 இல் வெளியாகும் கேலக்ஸி எஸ்23 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினார். அதேபோல் குவால்காமின் […]

The post 200MP கேமராவுடன் வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி எஸ்23? first appeared on .

]]>
சிப்செட்

Samsung நிறுவனம் அறிமுகம் செய்யும் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 200 மெகாபிக்சல் கேமரா, ஸ்னாப்ட்ராகன் சிப்செட் உடன் வெளியாகும் என பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகின்றன.

குவால்காமின் CFO, ஆகாஷ் பல்கிவாலா சமீபத்தில் பங்கேற்ற மூதலீட்டாளர்கள் மாநாட்டில், 2023 இல் வெளியாகும் கேலக்ஸி எஸ்23 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினார். அதேபோல் குவால்காமின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ்டியானோ அமோன், வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி S23 தொடர் உலகளவில் Snapdragon சிப்செட்களைப் பயன்படுத்தக்கூடும் என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் சாம்சங் அதன் Galaxy S23 தொடருக்கான புதிய Exynos 2300 சிப்செட்டில் வேலை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளியாகும் என கூறப்படும் இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2023 இல் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

கேமரா

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்23 தொடரின் அடிப்படை வேரியண்ட் ஆக கேலக்ஸி எஸ்23 மற்றும் உயர்நிலை வேரியண்ட் ஆக கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதுவரை சாம்சங் ஸ்மார்ட்போனில் பார்த்திராத அதிக மெகாபிக்சல் கேமரா இதில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 200 மெகாபிக்சல் கேமரா உடன் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

சாம்சங் நிறுவனம் முன்னதாக அறிமுகமான கேலக்ஸி எஸ்22 தொடரில் எஸ்22 அல்ட்ரா மாடல் ப்ரீமியம் மாடல் ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அம்சங்கள்

சாம்சங் மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளியாகும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களும் இதே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்பட்டது. சுமார் ரூ.1 லட்சம் விலைப்பிரிவில் இருந்த ஸ்மார்ட்போனில் கூட இதே சிப்செட் தான் இருந்தது. இந்த நிலையில் இதைவிட மேம்பட்ட சிப்செட் ஆக அறிமுகமாகும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

போல்டபிள் மற்றும் ஃப்ளிப்

ப்ரீமியம் ரகப் பிரிவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் சாம்சங். ரொம்ப வருஷமா ஸ்மார்ட்போன் யூஸ் பண்றோம். புதுப்புது அம்சங்கள் வருதே தவிர வடிவமைப்பு அப்படியே தானப்பா இருக்கு ஒரு மாற்றமும் இல்லையே. சதுரமான தோற்றம் முன்னாடி டிஸ்ப்ளே, பின்னாடி கேமரா கம்பெனி பெயர் மட்டும் வேறவேற. அம்சங்கள் மாறுதே தவிர வடிவமைப்பு அப்படியேதான் இருக்கு என்று சிந்திக்கும் மக்களின் குறைகளை தீர்க்க அறிமுகமான ஸ்மார்போன்கள் தான் போல்டபிள் மற்றும் ஃப்ளிப் மாடல்கள் ஆகும்.

தள்ளுபடி

ஃபோல்டபிள் மாடலை டிஸ்ப்ளே உடன் அப்படியே புத்தகம் போல் மடிக்கலாம். ஃப்ளிப் மாடலை அப்படியே மேல் இருந்து கீழ் புறத்தில் டிஸ்ப்ளே உடன் மடிக்கலாம். பல்வேறு நிறுவனங்களும் ஃபோல்டபிள் மாடல்களை அறிமுகம் செய்து வந்தாலும் இந்த பிரிவில் மிகவும் புகழ் பெற்றது சாம்சங் தான். சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் மாடல்கள் சுமார் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் அறிமுகமானது. உச்ச விலை அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் வெவ்வேறு வகையிலான தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

The post 200MP கேமராவுடன் வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி எஸ்23? first appeared on .

]]>
அடுத்த ஆண்டில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி S23 https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-s23-might-have-big-battery-than-galaxy-s22/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-s23-might-have-big-battery-than-galaxy-s22 Thu, 13 Oct 2022 10:58:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3002 சாம்சங் நிறுவனம் கேல்கஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், வென்னிலா கேலக்ஸி S23 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனில் S22 மாடலில் வழங்கப்பட்டு இருந்த 6.1 அங்குல FHD […]

The post அடுத்த ஆண்டில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி S23 first appeared on .

]]>

சாம்சங் நிறுவனம் கேல்கஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், வென்னிலா கேலக்ஸி S23 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனில் S22 மாடலில் வழங்கப்பட்டு இருந்த 6.1 அங்குல FHD டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புது மாடலில் பாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்த்த அளவுக்கு வழங்கப்படாது என்றே தெரிகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி S23 மாடல் நான்கு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இதேபோன்று லீக் ஆன ரெண்டர்களில் கேலக்ஸி S23 வெள்ளை நிறம் கொண்டிருந்தது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனில் 3900 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 மாடலில் 3700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் புதிய மாடலில் 25 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்கிரீன் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கேலக்ஸி S23 சீரிசில் டாப் எண்ட் மாடலான S23 அல்ட்ரா 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு, 10MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 40MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி முன்னணி ஆன்லைன் வலைதளங்களால் நடத்தப்பட்ட சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனம் அமோக வரவேற்பை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய பண்டிகை கால விற்பனையில் சாம்சங் நிறுவனம் 26 சதவீத பங்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட விற்பனையில் சாம்சங் நிறுவனம் சுமார் 33 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது. இதில் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களான கேலக்ஸி S21 FE, கேலக்ஸி S22 அல்ட்ரா, கேலக்ஸி S22 பிளஸ், கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடல்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் துவங்கி கேலக்ஸி F13 மற்றும் கேல்கஸி M13 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு இருந்தது.

சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஷாவ்மி இரண்டாம் இடத்தையும், ரியல்மி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 25 லட்சம் மற்றும் 22 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன. இதன் மூலம் இரு நிறுவனங்களும் முறையே 20 சதவீதம் மற்றும் 17 சதவீத பங்குகளை பெற்றுள்ளன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு வழங்கப்பட்டது. எனினும், முதல் மூன்று இடங்களில் ஐபோன் 13 இடம்பெறவில்லை. இந்த ஆண்டு விற்பனையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ள போதிலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை இரண்டு சதவீதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அடுத்த ஆண்டில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி S23 first appeared on .

]]>