galaxy z flip 4 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 14:37:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங்கின் 8 போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள்! https://www.91mobiles.com/tamil/8-samsung-flagship-smartphones-including-galaxy-s22-series-get-huge-discounts/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=8-samsung-flagship-smartphones-including-galaxy-s22-series-get-huge-discounts Mon, 19 Dec 2022 05:29:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4370 சாம்சங் (Samsung) நிறுவனமானது, 2022 கிறிஸ்துமஸ் மற்றும் 2023 நியூ இயர் ஹாலிடே சீஸனுக்கான (Holiday Season) தனது புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த ஹாலிடே சீசன் சலுகையில் கீழ் மொத்தம் 8 ஸ்மார்ட்போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கிறது. அந்த 8 ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் கேலக்ஸி ஃபிளிப் போன்ற பிளாக்ஷிப் மாடல்களும், மிட் ரேன்ஜ் விலை சில மாடல்களும் உள்ளன. அதென்ன மாடல்கள்? என்னென்ன போன்கள் மீது என்னென்ன […]

The post சாம்சங்கின் 8 போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள்! first appeared on .

]]>

சாம்சங் (Samsung) நிறுவனமானது, 2022 கிறிஸ்துமஸ் மற்றும் 2023 நியூ இயர் ஹாலிடே சீஸனுக்கான (Holiday Season) தனது புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த ஹாலிடே சீசன் சலுகையில் கீழ் மொத்தம் 8 ஸ்மார்ட்போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கிறது. அந்த 8 ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் கேலக்ஸி ஃபிளிப் போன்ற பிளாக்ஷிப் மாடல்களும், மிட் ரேன்ஜ் விலை சில மாடல்களும் உள்ளன. அதென்ன மாடல்கள்? என்னென்ன போன்கள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது? பார்க்கலாம்.

Galaxy Z Flip4 & Galaxy Z Fold4

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான Galaxy Z Flip4 மற்றும் Galaxy Z Fold4 மீதான சலுகைகளை பொறுத்தவரை, ரூ.1,54,999 க்கு கிடைத்த Galaxy Z Fold4 ஆனது இப்போதைய சலுகையில் ரூ.1,46,999 க்கு கிடைக்கும். அதாவது ரூ.8,000 என்கிற பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.8,000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கும். கூடுதலாக, Galaxy Z Fold4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.34,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic BT 46mm-ஐ கூடுதலாக ரூ.2,999 கொடுத்து பெற்று கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பட்சத்தில் கூடுதலாக 10 சதவீத கேஷ்பேக்கையும் பெறலாம்.

அதேவேளையில் Galaxy Z Flip4 மீதான சலுகைகளை பொறுத்தவரை, ரூ.89,999 க்கு பதிலாக ரூ.82,999 க்கு கிடைக்கும். அதாவது ரூ.7,000 என்கிற பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.7000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கும். மேலும் Galaxy Z Flip4 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களும் கேலக்ஸி வாட்ச்4 கிளாசிக் பிடி 46 மிமீ-ஐ வெறும் ரூ.2,999 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும்!

Galaxy S22 series

Galaxy Z Flip4 மற்றும் Galaxy Z Fold4 மீதான தள்ளுபடிகளை தவிரத்து Galaxy S22 series ஸ்மார்ட்போன்கள் மீதும் ஹாலிடே சீசன் சலுகைகள் கிடைக்கின்றன. ரூ.1,09,999 க்கு கிடைத்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் ஆனது ரூ.5,000 பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.7,000 அப்கிரேட் போனஸுக்குப் பிறகு ரூ.1,02,999 க்கு கிடைக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ராவை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.26,999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச்4 பிடி 44எம்எம்-ஐ வெறும் ரூ.2,999-ஐ கொடுத்து வாங்கி கொள்ளலலாம்.

அதேபோல், ரூ.72,999 என்கிற விலையில் உள்ள கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை ரூ.54,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்கலாம். மேலும் கேலக்ஸி எஸ்22-ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி பட்ஸ்2-ஐ வெறும் ரூ.2,999 க்கு பெறலாம். ஒருவேளை நீங்கள் கேலக்ஸி எஸ்22+ மாடலை வாங்க விரும்பினால் அது ரூ.84,999 க்கு பதிலாக வெறும் ரூ.59,999 க்கு வாங்க முடியும். இதில் ரூ.15,000 என்கிற பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.13,000 என்கிற அப்கிரேட் போனஸ் மற்றும் ரூ.10,000 என்கிற உடனடி கேஷ்பேக்கும் அடங்கும்.

Galaxy Z Fold3

சாம்சங் நிறுவனம் அதன் சற்றே பழைய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன Galaxy Z Fold3 மீதும் ஹாலிடே சீசன் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த கீழ் Galaxy Z Fold3 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 என்கிற பேங்க் கேஷ்பேக்கை பெறலாம் மற்றும் ரூ.26,999 மதிப்புள்ள Galaxy Watch4 BT 44mm ஐ வெறும் ரூ.2,999 க்கு வாங்கலாம். இதேபோல Galaxy ZFlip3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.84,999 க்கு பதிலாக ரூ.59,999 என்ற விலைக்கே கிடைக்கிறது. அதாவது இதன் மீது ரூ.15,000 என்கிற உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.10,000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கிறது.

Mid-range போன்கள்

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் Galaxy S21 FE ஸ்மார்ட்போன் மீது ரூ.3,000 என்கிற பேங்க் கேஷ்பேக், ரூ.7,000 என்கிற உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.10,000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கிறது. ஆக நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை உங்களால் வெறும் ரூ.39,999 க்கு வாங்க முடியும். இதேபோல Galaxy S20 FE ஆனது ரூ.32,999 க்கு கிடைக்கும், இதில் ரூ.5,000 என்கிற உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.3,000 என்கிற அப்கிரேட் போனஸும் அடங்கும்.

இப்படியாக சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்4, கேலக்ஸி ஃபிளிப்4, கேலக்ஸி ஃபோல்ட்3, கேலக்ஸி ஃபிளிப்3, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்22 பிளஸ், கேலக்ஸி எஸ்21 எஃப்இ, கேலக்ஸி எஸ்20 எஃப்இ என மொத்தம் 8 ஸ்மார்ட்போன்கள் மீது ஹாலிட் சீசன் சலுகைகள் கிடைக்கின்றன.

எங்கு கிடைக்கும்?

இந்த சலுகைகள் Samsung.com, Amazon, Flipkart மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக கிடைக்கும். மேலும், இந்த ஹாலிடே சீசன் சலுகைகள் ஆனது வருகிற டிசம்பர் 25, 2022 வரை மட்டுமே கிடைக்கும்!

The post சாம்சங்கின் 8 போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள்! first appeared on .

]]>
Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4 விலை & சலுகைகள் https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-z-fold-4-flip-4-india-price-pre-booking-free-offer-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-z-fold-4-flip-4-india-price-pre-booking-free-offer-details Wed, 17 Aug 2022 08:22:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1656 சமீபத்தில் நடந்து முடிந்த Galaxy Unpacked 2022 நிகழ்வில், சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4) அறிமுகமாகின. 16 ஆகஸ்ட் முதல் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், Samsung நிறுவனம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. Galaxy Z Flip 4 விலை Bora Purple, […]

The post Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4 விலை & சலுகைகள் first appeared on .

]]>

சமீபத்தில் நடந்து முடிந்த Galaxy Unpacked 2022 நிகழ்வில், சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4) அறிமுகமாகின. 16 ஆகஸ்ட் முதல் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், Samsung நிறுவனம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

Galaxy Z Flip 4 விலை

Bora Purple, Graphite மற்றும் Pink Gold என்கிற 3 நிறத் தேர்வுகளில் வரும் Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் 8GB+128GB வேரியண்ட் ஆனது ரூ.89,999 க்கும், 8GB+256GB வேரியண்ட் ஆனது ரூ.94,999க்கும் கிடைக்கும். கிளாஸ் கலர்ஸ் மற்றும் ஃபிரேம் ஆப்ஷன்களை வழங்கும் பெஸ்போக் எடிஷன் (Bespoke Edition) ஆனது சாம்சங் லைவ் மற்றும் சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ரூ.97,999க்கு கிடைக்கும்.

Galaxy Z Fold 4 விலை

Gray Green, Beige மற்றும் Phantom Black என்கிற 3 நிறத் தேர்வுகளில் வரும் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் 12GB+256GB வேரியண்ட் ஆனது ரூ.1,54,999 க்கும் மற்றும் 12GB+512GB வேரியண்ட் ஆனது ரூ.1,64,999 க்கும் கிடைக்கும். 12ஜிபி+1டிபி வேரியண்ட்டை வாங்க விரும்புவோர்கள், சாம்சங் லைவ் மற்றும் சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ரூ.1,84,999க்கு வாங்கலாம்.

Pre-booking

கேலக்ஸி Z Flip 4 மற்றும் கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு, 16, 2022 முதல், முன்னணி ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக தொடங்கி இருக்கிறது.

சாம்சங் Galaxy Z Fold 4 சலுகைகள்

கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.34,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic 46mm BT மாடல் ஆனது வெறும் ரூ.2,999 க்கு கிடைக்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.8,000 கேஷ்பேக்கையும் பெறலாம் அல்லது ரூ.8,000 என்கிற அப்கிரேட் போனஸைப் பெறலாம்.

சாம்சங் Galaxy Z Flip 4 சலுகைகள்

கேலக்ஸி Z Flip 4 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.31,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic 42mm BT மாடல் ஆனது வெறும் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.7,000 கேஷ்பேக்கையும் பெறலாம் அல்லது ரூ.7,000 என்கிற அப்கிரேட் போனஸை பெறலாம். மேலும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருடத்திற்க்கான, ரூ.11,999 மதிப்புள்ள சாம்சங் கேர் பிளஸ் ஆனது வெறும் ரூ.6,000 க்கு அணுக கிடைக்கும். மேலும் 24 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் EMI சலுகையும் கிடைக்கும்.

ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் வாங்கினால்?

கூடுதலாக, ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் Samsung Live-இன் போது Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ,5,199 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் டுயோ இலவசமாக வழங்கப்படும். உடன் ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் Samsung Live-இன் போது Galaxy Z Flip 4 பெஸ்போக் எடிஷனை வாங்கினால், வயர்லெஸ் சார்ஜர் டூயோ உடன் ரூ.2,000 மதிப்புள்ள ஸ்லிம் கிளியர் கவர் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

Samsung.com அல்லது Samsung Exclusive ஸ்டோர்களில் முன்பதிவு செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட Samsung Live ஆஃபர்களைப் பெறலாம்.

The post Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4 விலை & சலுகைகள் first appeared on .

]]>