garmin https://www.91mobiles.com/tamil Sat, 13 Aug 2022 11:00:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கார்மின் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு ரூ9000 வரை தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/garmin-independence-day-sale-get-up-to-rs-9000-off-on-smartwatches/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=garmin-independence-day-sale-get-up-to-rs-9000-off-on-smartwatches Sat, 13 Aug 2022 11:00:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1610 சுதந்திர தினத்தை ஒட்டி கார்மின் நிறுவனம் சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த விற்பனையில் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்மின் நிறுவனம் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஜிபிஎஸ் வசதி கொண்ட மூன்று ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கார்மின் இந்தியா அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஃபோர்-ரன்னர் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் ஓட்டப்பயிற்சி மற்றும் உடலை […]

The post கார்மின் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு ரூ9000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>

  • சுதந்திர தினத்தை ஒட்டி கார்மின் நிறுவனம் சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்து இருக்கிறது.
  • இந்த விற்பனையில் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்மின் நிறுவனம் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஜிபிஎஸ் வசதி கொண்ட மூன்று ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கார்மின் இந்தியா அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஃபோர்-ரன்னர் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் ஓட்டப்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டப் பந்தய வீரர்கள், அத்லெட்களை மனதில் வைத்து இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

  • கார்மின் ஃபோர்-ரன்னர் 955 மற்றும் ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
  • கார்மின் ஃபோர்-ரன்னர் 45 லாவா ரெட் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12,990 என்ற விலைக்குக் கிடைக்கும்.
  • கார்மின் ஃபோர்-ரன்னர் 45 பிளாக் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 13,990 என்ற விலைக்குக் கிடைக்கும்.
  • கார்மின் ஃபோர்-ரன்னர் 745 பிளாக் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42,990 என்ற விலைக்குக் கிடைக்கும்.
  • கார்மின் ஃபோர்-ரன்னர் 745 மேக்மா ரெட் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42,990 என்ற விலைக்குக் கிடைக்கும்.
  • கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் பிளாக் ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 30,990 என்ற விலைக்குக் கிடைக்கும்.
  • கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் லாவா ரெட் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 29,990 என்ற விலைக்குக் கிடைக்கும்.

சுதந்திர தின சிறப்பு சலுகைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கார்மின் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த சலுகையை விற்பனையை பயன்படுத்தி அசத்தல் தள்ளுபடியைப் பெறலாம்.

The post கார்மின் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு ரூ9000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>