Golden globe award https://www.91mobiles.com/tamil Wed, 11 Jan 2023 12:28:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது! https://www.91mobiles.com/tamil/rrr-team-for-getting-golden-globe-award-for-nattu-nattu-song/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rrr-team-for-getting-golden-globe-award-for-nattu-nattu-song Wed, 11 Jan 2023 12:28:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4913 ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இது ஆஸ்கருக்கு நிகரான விருது ஆகும். இந்த விருதை பெற்றுள்ள முதல் ஆசிய பாடல் என்ற பெருமையையும் நாட்டு கூத்து பாடல் பெற்றுள்ளது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார். அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆர்ஆர்ஆர் படம் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சுதந்திர போராட்டக் காலத்தை மையமாக வைத்து வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச […]

The post RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது! first appeared on .

]]>

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இது ஆஸ்கருக்கு நிகரான விருது ஆகும்.

இந்த விருதை பெற்றுள்ள முதல் ஆசிய பாடல் என்ற பெருமையையும் நாட்டு கூத்து பாடல் பெற்றுள்ளது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார். அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆர்ஆர்ஆர் படம்

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சுதந்திர போராட்டக் காலத்தை மையமாக வைத்து வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் 1200 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் கீரவாணி

இந்தப் படத்திற்கு பிரபல தெலுங்குப்பட இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக படத்தின் நாட்டு நாட்டு பாடல் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் பாடலில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் போட்டிப் போட்டு நடனமாடியிருந்தனர். இந்தப் பாடல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

சர்வதேச கவனம்

ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் பல விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. தற்போது ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் நாட்டு கூத்து பாடல் கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர்.

கோல்டன் க்ளோப் விருது

ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர். விழாவில் கெத்தாக சென்று விருதை பெற்றுக் கொண்டார் இசையமைப்பாளர் கீரவாணி. அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இளையராஜா வாழ்த்து

ஏஆர் ரஹ்மான், தெலுங்குப்பட நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்டவர்களும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இளையராஜா மகிழ்ச்சி

படக்குழுவினரின் கடின உழைப்பே அவர்களுக்கு இந்த விருதை பெற்றுத் தந்துள்ளதாகவும் இதையடுத்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள இளையராஜா, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

The post RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது! first appeared on .

]]>
கோல்டன் குளோப் விருது நாமினேஷனுக்குச் சென்றது ராஜமெளலியின் RRR! https://www.91mobiles.com/tamil/rrr-movie-got-nominated-in-golden-global-award/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rrr-movie-got-nominated-in-golden-global-award Tue, 13 Dec 2022 11:26:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4275 இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 போன்ற தரமான படங்களை இயக்கி வருகிறார். இந்த படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பாகுபலி 2 திரைப்படம் […]

The post கோல்டன் குளோப் விருது நாமினேஷனுக்குச் சென்றது ராஜமெளலியின் RRR! first appeared on .

]]>

இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 போன்ற தரமான படங்களை இயக்கி வருகிறார். இந்த படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.

இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2ம் இடம் வகிக்கிறது.

பாகுபலி என்ற மகத்தான வெற்றிப்படத்தை கொடுத்த ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

நண்பர்கள் பற்றிய கதை

சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர். இதில், அல்லுரி சீதாராம ராஜு என்ற ரோலில் ராம்சரணும், கொமாரம் பீம் என்ற வேடத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்திருந்தார்கள். இருவருமே சிறந்த நடிகர்களாக இருந்த போதும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு இருவரின் நடிப்பும் உச்சு கொட்ட வைத்தது.

கோல்டன் குளோப்

இந்நிலையில் இத்திரைப்படம் 80வது குளோப் விருது நாமினேஷனில் தேர்வாகி உள்ளது டோலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாது இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கோல்டன் குளோப் விருது விளங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா அடுத்த மாதம் ஜனவரி 10ந் தேதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் சிறந்த நடிகர், நடிகை, ஆங்கிலம் அல்லாத படம் உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ‘ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம்’ பிரிவிலும், ‘சிறந்த பாடல்’ பிரிவிலும் RRR திரைப்படம் நாமினேஷன் ஆகி இருக்கிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

இதில், ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி உள்ளது. ஜனவரி 10ந் தேதி நடைபெறும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படம் விருதை பெறுமா? இல்லையா என்பது தெரியவரும். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இவர் தவிர சினிமா துறை சார்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post கோல்டன் குளோப் விருது நாமினேஷனுக்குச் சென்றது ராஜமெளலியின் RRR! first appeared on .

]]>