Honor X9a https://www.91mobiles.com/tamil Mon, 14 Aug 2023 05:32:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 64MP கேமரா, 40W சார்ஜிங் வசதியோடு விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Honor X9a https://www.91mobiles.com/tamil/64mp-camera-phone-honor-x9a-might-launch-in-india-soon-know-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=64mp-camera-phone-honor-x9a-might-launch-in-india-soon-know-specifications Mon, 14 Aug 2023 05:30:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10071 Honor நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நுழைய இருக்கிறது. Realme உடன் பணிபுரிந்த,  ‘மாதவ் சேத்’ இப்போது ‘ஹானர் இந்தியா’வில் சேர்ந்துள்ளார். மேலும் அவரது தலைமையில் இந்த சீன பிராண்ட் மீண்டும் இந்தியாவிற்கு வருகிறது. நிறுவனம் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனை அதன் ட்விட்டர் ஹேண்டில் மூலம் டீஸ் செய்துள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது அது ஹானர் X9a ஆக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இப்போது இந்த Honor X9A இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பார்க்கலாம். ஹானர் இந்தியா துவக்கம் […]

The post 64MP கேமரா, 40W சார்ஜிங் வசதியோடு விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Honor X9a first appeared on .

]]>

Honor நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நுழைய இருக்கிறது. Realme உடன் பணிபுரிந்த,  ‘மாதவ் சேத்’ இப்போது ‘ஹானர் இந்தியா’வில் சேர்ந்துள்ளார். மேலும் அவரது தலைமையில் இந்த சீன பிராண்ட் மீண்டும் இந்தியாவிற்கு வருகிறது. நிறுவனம் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனை அதன் ட்விட்டர் ஹேண்டில் மூலம் டீஸ் செய்துள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது அது ஹானர் X9a ஆக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இப்போது இந்த Honor X9A இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

ஹானர் இந்தியா துவக்கம்

ஹானர் இந்தியா மற்றும் மாதவ் சேத் இருவரும் பிராண்டின் ரிட்டர்ன் அதிகாரப்பூர்வமாக்கி, மெதுவாக டீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். பிராண்டின் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், முதல் ஹானர் ஸ்மார்ட்போன் அடுத்த மாத தொடக்கத்தில் அதாவது செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15க்குப் பிறகு, நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம்.

Honor X9a (குளோபல் வேரியண்டின்) விவரக்குறிப்புகள்

  • 6.67″ AMOLED டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 695
  • 64MP பின்புற கேமரா
  • 16MP முன் கேமரா
  • 40W 5,100mAh பேட்டரி

திரை : Honor X9A ஆனது 20:09 விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது 1080 x 2400 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.67-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபோன் திரையானது 1.07 பில்லியன் வண்ணங்களை ஆதரிக்கும் AMOLED பேனலில் கட்டப்பட்டுள்ளது.

சிப்செட் : இந்த மொபைல் 2.2GHz கடிகார வேகத்தில் இயங்கும் Qualcomm Snapdragon 695 Octacore சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Adreno 619 GPU கிராபிக்ஸ் இந்த போனில் கிடைக்கிறது. உலக சந்தையில், இந்த போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MagicUI 6.1 இல் வேலை செய்கிறது.

பின்புற கேமரா : புகைப்படம் எடுப்பதற்காக போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன், F / 1.8 அப்பசர் உள்ள 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சாரும் பின் பேனலில் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பக்க கேமரா : Honor X9a ஆனது செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக F / 2.45 அப்பசர் கொண்ட 16-மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி : பவர் பேக்கப்பிற்காக ஹானர் X9A இல் 5,100mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 40W சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

The post 64MP கேமரா, 40W சார்ஜிங் வசதியோடு விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Honor X9a first appeared on .

]]>