htc wildfire e plus https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:36:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 வெளியானது எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் பட்ஜெட்போன் https://www.91mobiles.com/tamil/new-android-12-go-smartphone-launched-around-rs-10000-budget-check-htc-wildfire-e-plus-specification/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-android-12-go-smartphone-launched-around-rs-10000-budget-check-htc-wildfire-e-plus-specification Thu, 27 Oct 2022 08:40:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3267 எச்டிசி நிறுவனம் புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. HTC Wildfire E Plus புதிய HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரஷ்யாவில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். சிப்செட் மீடியாடெக் […]

The post வெளியானது எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் பட்ஜெட்போன் first appeared on .

]]>

எச்டிசி நிறுவனம் புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

HTC Wildfire E Plus

புதிய HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரஷ்யாவில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிப்செட்

மீடியாடெக் எம்டி6739 சிப்செட் HTC Wildfire E Plus ஆனது குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 சிப்செட் உடன் 1.5ஜிகாஹெர்ட் கார்டெக்ஸ்-ஏ53 ஜிபியு மற்றும் பவர்விஆர் ஜிஇ8100 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. இதனால் இந்த எச்டிசி ஸ்மார்ட்போன் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் அந்நிறுவனம் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

ரெஃப்ரெஷ் ரேட்

எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

HTC Wildfire E Plus ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது.

கேமரா

HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் முன்பக்கத்தில் 5எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த எச்டிசி ஸ்மார்ட்போன்.

பேட்டரி

HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் 5150 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த எச்டிசி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இயங்குதளம்

டூயல்-சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைஃபை 8011, புளூடூத் 4.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை

இந்த HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் தற்போது கருப்பு நிறத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது. இந்த மொபைலின் விலை $129 (இந்திய மதிப்பில் ரூ.10,600) ஆக உள்ளது. ஆனால் இந்த போன் இந்தியாவில் ரூ.9,999-க்குள் கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

The post வெளியானது எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் பட்ஜெட்போன் first appeared on .

]]>