huawei mate 50 https://www.91mobiles.com/tamil Wed, 21 Sep 2022 13:32:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங் போனிலும் வருகிறது சாட்டிலைட் இணைப்பு https://www.91mobiles.com/tamil/like-apple-samsung-is-also-set-to-launch-a-satellite-connectivity/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=like-apple-samsung-is-also-set-to-launch-a-satellite-connectivity Wed, 21 Sep 2022 13:32:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2510 வெளியாகி இருக்கும் தகவல் உண்மை எனில் சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சாட்டிலைட் இணைப்பை கொண்டுவர இருக்கிறது. எந்த கேலக்ஸி தொடரில் இந்த அம்சம் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் எஸ் தொடரில் இடம்பெறலாம் எனத் தகவல்கள் கூறுகிறது. சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் போன்கள் சாட்டிலைட் இணைப்புடன் அறிமுகமானது. இதையடுத்து சாம்சங் அதன் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாட்டிலைட் இணைப்பு அம்சத்தை […]

The post சாம்சங் போனிலும் வருகிறது சாட்டிலைட் இணைப்பு first appeared on .

]]>

வெளியாகி இருக்கும் தகவல் உண்மை எனில் சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சாட்டிலைட் இணைப்பை கொண்டுவர இருக்கிறது. எந்த கேலக்ஸி தொடரில் இந்த அம்சம் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் எஸ் தொடரில் இடம்பெறலாம் எனத் தகவல்கள் கூறுகிறது.

சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போன்கள்

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் போன்கள் சாட்டிலைட் இணைப்புடன் அறிமுகமானது. இதையடுத்து சாம்சங் அதன் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாட்டிலைட் இணைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் சாட்டிலைட் இணைப்பு ஆதரவை தங்களது ஸ்மார்ட்போன்களில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் ரிக்கியோலோ மூலம் வெளியான இந்த தகவலில் எந்த சாம்சங் போன்களில் இந்த அம்சம் இடம்பெறும் என்பது சரியாக குறிப்பிடப்பட வில்லை. ஐபோன் 14 சீரிஸ் இல் சாட்டிலைட் இணைப்பு என்பது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே தற்போதுவரை கிடைக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் சாட்டிலைட் இணைப்பு ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சாட்டிலைட் இணைப்பு சேவை

ஆப்பிளின் புதிய ஐபோன் 14 சீரிஸ் போன்களான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் இந்த சாட்டிலைட் இணைப்பு சேவை இடம்பெற்றுள்ளது. இதனுடன் சூப்பர் ப்ரீமியம் ஆப்பிள் வாட்ச்-ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதிலும் சாட்டிலைட் இணைப்பு ஆதரவு இருக்கிறது. செல்லுலார் மற்றும் வைஃபை இணைப்பு இல்லாதபோது அவசரகால சேவைகளுக்கு செயற்கைக்கோள் மூலமாக அவசரகால SOSஐ பயன்படுத்த இந்த சேவை அனுமதிக்கிறது.

வெளியான கசிவுத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் அதன் ப்ரீமியம் கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் ஃபோல்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தை முதல் கட்டமாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் மட்டும் இந்த சேவை கொண்டுவரப்படுமா இல்லை அனைத்து நாடுகளிலும் கொண்டுவரப்படுமா என்ற தகவல் தெரியவில்லை.

முதல் சாட்டிலைட் ஸ்மார்ட்போன் எது?

சாட்டிலைட் இணைப்புடன் வெளியான முதல் போன் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் அல்ல. ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது ஹூவாய் நிறுவனம் ஆகும்.

Huawei Mate 50 சீரிஸ்

Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்தது. ஒரு ஸ்மார்ட்போனை ப்ளாக்ஷிப் என குறிப்பிட என்னென்ன அம்சங்கள் தேவையோ அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேலோங்கி இருக்கிறது. Huawei Mate 50 சீரிஸ் இல் மூன்று மாடல்கள் வெளியானது. பெரிஸ்கோப் டெலிபோட்டோ மேக்ரோ கேமரா இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அது சாட்டிலைட் இணைப்பு தான்.

இதுதான் Beidou Satellite Message 3 நெறிமுறை என அழைக்கப்படும் செயற்கைக்கோள் இணைப்பு வசதி வழங்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன். செல்லுலார் இணைப்பு இல்லாமலேயே நீங்கள் ஒரு மெசேஜையும் இருப்பிடத்தை பகிர முடியும். இதனால் செயற்கைக்கோள் ஆதரவை வழங்கும் உலகின் முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவழி தகவல்தொடர்புகள்

தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் இல் சாட்டிலைட் இணைப்பு இடம்பெற்றது. செயற்கைக்கோள் அம்சத்திற்கு என புதிய தனிப்பயன் வன்பொருள் மற்றும் பெஸ்போக் மென்பொருளை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் பெரிய ஆண்டெனாக்கள் எதுவும் இல்லாமல், செயற்கைக்கோளை அணுக முடியும். இது இருவழி தகவல்தொடர்புகளை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாம்சங் போனிலும் வருகிறது சாட்டிலைட் இணைப்பு first appeared on .

]]>
உலகின் முதல் சாட்டிலைட் கனெக்‌ஷன் உள்ள போன்! https://www.91mobiles.com/tamil/world-s-first-flagship-smartphone-with-satellite-connection-huawei-mate-50-series/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=world-s-first-flagship-smartphone-with-satellite-connection-huawei-mate-50-series Wed, 07 Sep 2022 04:37:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2108 Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை ப்ளாக்ஷிப் என குறிப்பிட்ட என்னென்ன அம்சங்கள் எல்லாம் தேவையோ அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேலோங்கி இருக்கிறது. கடந்த சில காலமாக Huawei Mate 50 சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இதனால் Huawei பிரியர்களிடம் இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் […]

The post உலகின் முதல் சாட்டிலைட் கனெக்‌ஷன் உள்ள போன்! first appeared on .

]]>

Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை ப்ளாக்ஷிப் என குறிப்பிட்ட என்னென்ன அம்சங்கள் எல்லாம் தேவையோ அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேலோங்கி இருக்கிறது.

கடந்த சில காலமாக Huawei Mate 50 சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இதனால் Huawei பிரியர்களிடம் இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

Huawei Mate 50 சீரிஸ்

Huawei Mate 50 சீரிஸ் இல் மூன்று மாடல்கள் வெளியாகி இருக்கிறது. அது மேட் 50 மற்றும் மேட் 50 ப்ரோ ஆகும். மற்றொன்று RS Porsche டிசைன் பதிப்பாகும். இது மேட் 50இ என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உயர்தர சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ மேக்ரோ கேமரா இதில் உள்ளது. மேலும் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் மூன்று மாடல் ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகும் அனைத்து ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் தான் இருக்கிறது. இது வேகம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் சுமூகமாகவும் நீடித்தும் இருக்கிறது.

கேமரா

50 எம்பி பிரதான கேமரா மேட் 50 தொடரில் ப்ரீமியம் மாடலாக இருப்பது மேட் 50 ப்ரோ ஆகும். இதில் 10 பிட் வண்ண தெளிவுத்திறன் உடன் கூடிய 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்டைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இதில் பிரதான கேமராவாக 50 எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதனுடன் 13 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் மூன்றாம் நிலை கேமராவாக டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது. சிறப்பான கேமரா அம்சம் சிறப்பான கேமரா அம்சம் புகைப்படத்தை மேம்படுத்தி வழங்கும் வகையில் டெலிபோட்டோ லென்ஸ் இல் RYYB சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த கேமராவில் OIS ஆதரவும் இருக்கிறது. ஒட்டு மொத்தமாக கேமரா தொகுதி என்பது தனித்தனியாக தரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 13 எம்பி அல்ட்ராவைட் சென்சார் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் ஃபேஸ் அன்லாக் அம்சத்திற்கு என 3D ToF சென்சார் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

Mate 50 Pro ஆனது 66 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. பேட்டரி ஆதரவில் சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்மார்ட்போனில் 1% சார்ஜ் இருந்தாலும் கூட, மூன்று மணிநேரம் வரை போனை காத்திருப்பு நிலையில் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ, ஆரஞ்ச், சில்வர், ப்ளாக் மற்றும் வயலட் வண்ண ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது.

சாட்டிலைட் இணைப்பு

சாட்டிலைட் இணைப்பு ஆதரவு சாட்டிலைட் இணைப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், Beidou Satellite Message 3 நெறிமுறை என அழைக்கப்படும் செயற்கைக்கோள் இணைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. செல்லுலார் இணைப்பு இல்லாமலேயே நீங்கள் மெசேஜையும் இருப்பிடத்தை பகிர முடியும். செயற்கைக்கோள் ஆதரவை வழங்கும் உலகின் முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட் 50 சிறப்பம்சங்கள் மேட் 50 சிறப்பம்சங்கள் மேட் 50 மாடலை பொறுத்தவரை இதில் 90Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைட் கேமரா லென்ஸ் ப்ரோ மாடல் போன்றே இருக்கிறது. மூன்றாம் நிலையில் இருக்கும் டெலிபோட்டோ லென்ஸாக இதில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 4460 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது. சார்ஜிங் ஆதரவுகள் ப்ரோ மாடல் போன்றே உள்ளது. பிரத்யேக ஓஎஸ் ஆதரவு RS Porsche டிசைன் பதிப்பு ஏரத்தாள ஒரே அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிசைன் என்பது பிற இரண்டு மாடல்களை விட சிறப்பாக இருக்கிறது. மூன்று மாடல்களும் புதிய HarmonyOS 3.0 மூலம் இயக்கப்படுகிறது. சில நெருக்கடிகள் காரணமாக இந்த ஸ்மார்ட்போன்களில் 5G அணுகல் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை, இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.57,458 ஆகும்.

The post உலகின் முதல் சாட்டிலைட் கனெக்‌ஷன் உள்ள போன்! first appeared on .

]]>
பேட்டரி தீர்ந்தாலும் போன் பேசலாம் – அசத்தும் ஹூவாய் https://www.91mobiles.com/tamil/huawei-mate-50-line-might-make-calls-with-a-dead-battery/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=huawei-mate-50-line-might-make-calls-with-a-dead-battery Wed, 31 Aug 2022 17:14:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1955 ஹூவாய் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்தமான ஹார்மோனி ஒஎஸ்-ல் இயங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஹூவாய், தற்போது ஒரு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை மட்டும் அறிமுகம் செய்யும் வழக்கத்திற்கு மாறி இருக்கிறது. இந்த நிலையில், 2022 ஆண்டிற்கு ஹூவாய் மேட் 50 (huawei mate 50) ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு P50 ப்ரோ ஸ்மார்ட்போனை […]

The post பேட்டரி தீர்ந்தாலும் போன் பேசலாம் – அசத்தும் ஹூவாய் first appeared on .

]]>

  • ஹூவாய் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்தமான ஹார்மோனி ஒஎஸ்-ல் இயங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஹூவாய், தற்போது ஒரு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை மட்டும் அறிமுகம் செய்யும் வழக்கத்திற்கு மாறி இருக்கிறது.
இந்த நிலையில், 2022 ஆண்டிற்கு ஹூவாய் மேட் 50 (huawei mate 50) ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு P50 ப்ரோ ஸ்மார்ட்போனை மிகச் சிறந்த கேமரா அம்சங்களுடன் வெளியிட்டு இருந்தது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் கூகுள் மற்றும் இதர அமெரிக்க நிறுவனங்களின் சிப்செட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹார்மனி ஒஎஸ்-ஐ உருவாக்கி இருக்கிறது. பல்வேறு சிக்கல்களை கடந்தும் ஹூவாய் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதை நிறுத்தவில்லை.

அந்த வகையில், ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனில் எமர்ஜன்சி பேட்டரி மோட் எனும் அம்சம் வழங்கப்பட இருப்பதாக சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த வசதி எல்லா ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சமானது ஸ்மார்ட்போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்து போனாலும், அழைப்புகளை எப்படியாவது மேற்க்கொள்ளச் செய்திடும் என கூறப்படுகிறது.

இந்த அம்சம் ஹார்மனி ஒஎஸ் 3.0-இன் கீழ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் மேட் 50 மாடல்களில் இந்த ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அம்சம் அழைப்புகளை மேற்கொள்வதோடு குறுந்தகவல் அனுப்புவது, டாக்யுமெண்ட் மற்றும் லொகேஷன் கோட்களை ஸ்கேன் செய்யும் எனவும் கூறப்படுகிறது.

The post பேட்டரி தீர்ந்தாலும் போன் பேசலாம் – அசத்தும் ஹூவாய் first appeared on .

]]>