hyundai ioniq 5 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 07:52:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் முன்பதிவு துவங்கியது! https://www.91mobiles.com/tamil/hyundai-ioniq-5-electric-car-unveiled-in-india-booking-launch-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-ioniq-5-electric-car-unveiled-in-india-booking-launch-details Thu, 22 Dec 2022 07:08:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4478 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) செக்மெண்ட்டில், இந்த கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதுடன், இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய இணையதளம் https://clicktobuy.hyundai.co.in/IONIQ/#/selectacar ப்ளாட்பார்ம் இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் […]

The post 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் முன்பதிவு துவங்கியது! first appeared on .

]]>

Highlights

  • ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5)எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புக்கிங்கையும் துவங்கி இருக்கிறது.
  • இந்த ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) செக்மெண்ட்டில், இந்த கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதுடன், இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய இணையதளம்

https://clicktobuy.hyundai.co.in/IONIQ/#/selectacar

ப்ளாட்பார்ம்

இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக கோனா எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் (Hyundai Kona) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரானது, கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுடன் நேருக்கு நேராக போட்டியிடும். ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே E-GMP (Electric – Global Modular Platform) பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

பேட்டரி

இந்திய சந்தைக்கான ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும். 350 kW DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10ல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வசதிகள்

அத்துடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) போன்ற பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான வகையில், இன்னும் பல்வேறு வசதிகளையும் (Features) ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இதில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், போஸ் சவுண்ட் சிஸ்டம், வெண்டிலேட்டட் இருக்கைகள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

கூடுதல் வசதிகள்

அத்துடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் டேஷ்போர்டில், சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இன்ஜின் பார்க்கிங் பிரேக், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

 

நிறம்

இதற்கிடையே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பூட் ஸ்பேஸ் 571 லிட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ராவிட்டி கோல்டு மேட், ஆப்டிக் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் பேர்ல் என 3 கலர் ஆப்ஷன்களில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

விலை

ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில்தான் (2023 Auto Expo) விலைகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவுள்ளதால், ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்க முடியும். குறிப்பாக கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாக இருக்கலாம்.

The post 18 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் முன்பதிவு துவங்கியது! first appeared on .

]]>
எப்படி இருக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5? புகைப்படங்கள் வெளியானது. https://www.91mobiles.com/tamil/hyundai-ioniq-5-electric-car-interiors-officially-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-ioniq-5-electric-car-interiors-officially-revealed Wed, 14 Dec 2022 11:36:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4300 இந்தியாவில் பல எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமானபடி இருக்கிறது. அதில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இன்னும் சில வாரங்களில், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த காரின் இன்டீரியர் எப்படி இருக்கும்? என்பதை ஹூண்டாய் நிறுவனம் புகைப்படங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்தியுள்ளது. வசதிகள் இதன்படி இந்த காரின் முன் பகுதியில் எலெக்ட்ரிக் முறையில் […]

The post எப்படி இருக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5? புகைப்படங்கள் வெளியானது. first appeared on .

]]>

இந்தியாவில் பல எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமானபடி இருக்கிறது. அதில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இன்னும் சில வாரங்களில், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த காரின் இன்டீரியர் எப்படி இருக்கும்? என்பதை ஹூண்டாய் நிறுவனம் புகைப்படங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்தியுள்ளது.

வசதிகள்

இதன்படி இந்த காரின் முன் பகுதியில் எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்லைடிங் சென்டர் கன்சோலையும் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த காரில் உட்புறத்தில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் ட்யூயல் டோன் இன்டீரியம் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், க்ரோம் அலங்கார வேலைப்பாடுகள், மூட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரின் டேஷ்போர்டில், பெரிய திரை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொரு பகுதி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகவும் செயல்படும். இதுபோன்ற வடிவமைப்பு தற்போது பல்வேறு கார்களிலும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வுன்சூ கிம் கூறுகையில், ”இது வெறும் போக்குவரத்திற்கான காராக மட்டும் இருக்காது. வீட்டிற்கு வெளியே ஒரு வீட்டை போன்று இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். இந்த காரில் உட்புறத்தில் தாராளமான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை மேம்படும். ஹூண்டாய் ஐயோனிக் 5 கார், வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள், சௌகரியம், சிறப்பான அனுபவம் ஆகியவற்றை வழங்கும்” என்றார்.

திறன்

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரானது, இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. Electric Global Modular Platform என்பதன் சுருக்கம்தான் E-GMP. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முக்கியமான போட்டியாளர் ஆகும். ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முக்கியமான சிறப்பம்சம் ஆகும். இதன் காரணமாக கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

முன்பதிவு

இதற்கிடையே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளதால், புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் குவிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக ஹூண்டாய் கோனா (Hyundai Kona) என்ற எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (MG ZS EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது. வரும் காலங்களில் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம்.

The post எப்படி இருக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5? புகைப்படங்கள் வெளியானது. first appeared on .

]]>
விரைவில் புக்கிங்கை துவங்குகிறது ஹூண்டாய் ஐயானிக் 5 https://www.91mobiles.com/tamil/hyundai-ioniq-5-electric-car-india-official-booking-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-ioniq-5-electric-car-india-official-booking-details Wed, 30 Nov 2022 08:49:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3992 இந்தியாவில் டாடா (Tata), எம்ஜி மோட்டார் (MG Motor) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற பல்வேறு நிறுவனங்கள் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரையில் கோனா என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்திய சந்தையில் தனது 2வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் முழு வீச்சில் […]

The post விரைவில் புக்கிங்கை துவங்குகிறது ஹூண்டாய் ஐயானிக் 5 first appeared on .

]]>

இந்தியாவில் டாடா (Tata), எம்ஜி மோட்டார் (MG Motor) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற பல்வேறு நிறுவனங்கள் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரையில் கோனா என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்திய சந்தையில் தனது 2வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து அடுத்து வரவுள்ள எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகும்.

முன்பதிவு

இந்த எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்கு கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் காணப்படுகிறது. இப்படி ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தற்போது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு வெகு விரைவில் முன்பதிவு தொடங்கப்பட இருக்கிறது. வரும் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து (December 20) ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு தொடங்கப்படும் என ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2023 (Auto Expo 2023) திருவிழாவில் வைத்து ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைலேஜ்

இ-ஜிஎம்பி என சுருக்கமான அழைக்கப்படும் Electric-Global Modular Platform (E-GMP) அடிப்படையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 58 kWh மற்றும் 72.6 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச ரேஞ்ச் (Range) 480 கிலோ மீட்டர்கள் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பேட்டரி ஆப்ஷன்களுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படும்.

வசதிகள்

இதன்படி பனரோமிக் சன்ரூஃப், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றுக்கு தலா 1 திரைகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் என பல்வேறு வசதிகளை ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசைனை பொறுத்தவரையில், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை இடம்பெறலாம். மேலும் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மிகச்சிறந்த எலெக்ட்ரிக் காராக ஹூண்டாய் ஐயோனிக் 5 இருக்கலாம். இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, ஹூண்டாய் ஐயோனிக் 5 மிக முக்கியமான போட்டியாளராக இருக்கும். கியா இவி6 எலெக்ட்ரிக் காரை விட, ஹூண்டாய் ஐயோனிக் 5 மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

இந்திய சந்தைக்கு சிபியூ வழியில்தான் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் கொண்டு வரப்பட்டுள்ளது. (Completely Built Unit என்பதன் சுருக்கம்தான் CBU. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனவே வரிகள் (Tax) உள்ளிட்ட காரணங்களால், கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார், 59.95 லட்ச ரூபாய் முதல் 64.95 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

எதிர்பார்ப்பு

ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை போல் அல்லாமல், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவுள்ளது. எனவே கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு மிகவும் குறைவான விலையை ஹூண்டாய் நிறுவனத்தால் நிர்ணயம் செய்ய முடியும். இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

The post விரைவில் புக்கிங்கை துவங்குகிறது ஹூண்டாய் ஐயானிக் 5 first appeared on .

]]>