ilayaraja https://www.91mobiles.com/tamil Thu, 10 Nov 2022 05:57:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மும்பையின் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி! https://www.91mobiles.com/tamil/actor-rajini-role-in-laal-salaam-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actor-rajini-role-in-laal-salaam-movie Thu, 10 Nov 2022 05:57:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3519 ஜெயிலர் படத்தைத் தெடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதன் அதிகாரபூர்வ் அறிவிப்பு விரைவில் வெளியாகின்றது. மேலும் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் ரஜினி. கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் காதாபாத்திரம் பற்றிய […]

The post மும்பையின் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி! first appeared on .

]]>

ஜெயிலர் படத்தைத் தெடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதன் அதிகாரபூர்வ் அறிவிப்பு விரைவில் வெளியாகின்றது. மேலும் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் ரஜினி.

கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் காதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி ரஜினி இப்படத்தில் மும்பையை சார்ந்த டானாக நடிப்பதாகவும், அவர் 30 நிமிடங்கள் லால் சலாம் படத்தில் வருவார் என்றும் தகவல் வந்துள்ளது. மேலும் பாட்ஷா படத்தை போன்று ரஜினியின் கதாபாத்திரம் லால் சலாம் படத்தில் செம மாஸாக இருக்கும் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாளை (நவம்பர் 11) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர், தனி விமானத்தில் மதுரை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐக்கிய அமீரகம் இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்து இருக்கிறது. ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் கமல்ஹாசன், பாவனா மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post மும்பையின் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி! first appeared on .

]]>