indian 2 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 14:22:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? https://www.91mobiles.com/tamil/writer-jeyamohan-says-interesting-information-about-indian-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=writer-jeyamohan-says-interesting-information-about-indian-2 Fri, 16 Dec 2022 07:17:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4353 இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த வெற்றியும் ஷங்கரின் இமேஜை தூக்கி நிறுத்தியது. இந்தியன் 2 இந்தியன் […]

The post இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? first appeared on .

]]>

இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது
அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த வெற்றியும் ஷங்கரின் இமேஜை தூக்கி நிறுத்தியது.

இந்தியன் 2

இந்தியன் திரைப்படம் அளித்த உத்வேகத்துடன் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது. அதன் பின் கொரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஷங்கர், ராம்சரணை வைத்து ‘RC15’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் அளித்துள்ள பேட்டியில், இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் பட்டினி கிடந்து நடிக்கிறார். வாயில் எதை மென்றாலும், அது மேக்கப்பை கெடுத்துவிடும் என்பதால், ஸ்ட்ராவில் ஜூஸ்சை மட்டுமே குடித்து வருகிறார். இதைப்பார்க்கும் போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கும் என்றார் .

கதை

இந்தியன் இரண்டாம் பாகமும் முதல் பாகத்தைப் போல பீல் குட் கொண்ட படம் தான். ஆனால், இந்தியன் 2 படத்தின் கதை கொஞ்சம் பின்னால் போகும், அதாவது சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக நடந்த கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. சொல்லப் போனால் இந்தியன் தாத்தா என்ற சேனாதிபதிக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் அப்பா வருவார் என்றார்.

3 மணி நேரப்படம்

மேலும், இந்தியன் 2 படத்திற்கு 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நீளம் கொண்ட படம் என்றும், இது ஷங்கரின் கேரியரில் மிக நீண்ட திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றும் இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியன் 2 படத்தின் உருவாக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் முக்கியபங்கு ஆற்றுகிறார். திரைக்கதை உருவாக்கம், வசனம் போன்றவற்றில் அவரது பங்களிப்பு இருக்கிறது. இந்தியன் 2 படத்தில் அப்பா கதாபாத்திரமும் வருகிறது என்றால் இதிலும் கமலஹாசனுக்கு இரட்டை வேடம் இருக்கிறது. மேலும் சுதந்திரப் போராட்டத்துக்கு முந்தைய காலம் என்பதால் படத்தின் பெறும்பகுதி பீரியட் பிலிம் என்னும் வரலாற்றுப்படமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனைக் கொண்டு பார்க்கையில் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

The post இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? first appeared on .

]]>
விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! https://www.91mobiles.com/tamil/vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today Mon, 05 Dec 2022 14:04:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4091 நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் […]

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>

நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் தேதி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பணிகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோல இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அப்டேட் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்த நிலையில், விரைவில் அதுகுறித்து அவர் அப்டேட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன் என அடுத்தடுத்த நடிகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீருக்கு படக்குழு சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்காக 4 மாதங்கள் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படம் இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சூட்டிங்கிற்காக இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. முந்தைய பாகத்தில் சந்த்ரு மற்றும் சேனாபதி என இரண்டு கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிவரும் இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் கமல் மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். மாதத்தில் 20 நாட்கள் என அடுத்தடுத்து இந்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களாக ராம்சரணின் சூட்டிங்கிற்காக நியூசிலாந்து சென்றிருந்த ஷங்கர் கடந்த 3ம் தேதி நாடு திரும்பிய நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லன் கேரக்டருக்காக சத்யராஜிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்து 2023 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>
கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் இந்தியன் 2 போஸ்டர்கள் வெளியீடு! https://www.91mobiles.com/tamil/indian-2-movie-team-shared-poster-for-kamal-fans-for-his-birthday-special/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indian-2-movie-team-shared-poster-for-kamal-fans-for-his-birthday-special Mon, 07 Nov 2022 11:18:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3445 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் […]

The post கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் இந்தியன் 2 போஸ்டர்கள் வெளியீடு! first appeared on .

]]>

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டு இந்தியன் 2 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக ஆவலுடன் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வீடியோ ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்டமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த வெளியான நாயகன் திரைப்படம் இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் அந்த படத்திற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் இந்தியன் 2 போஸ்டர்கள் வெளியீடு! first appeared on .

]]>
இந்தியன் 2 படத்தில் ‘கட்டப்பா’ நடிக்கிறார் https://www.91mobiles.com/tamil/indian-2-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indian-2-movie-update Tue, 09 Aug 2022 10:23:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1479 ‘இந்தியன் 2’ படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார் என்ற பேச்சு ஒருபக்கம் இருக்க.. இன்னொரு பிரபல நடிகர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அவர் யார்? பார்க்கலாம். கமல்- ஷங்கர் – லைகா இணையும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் மீண்டும் துவங்குகிறது. அதற்காக வேலைகளை லைகா மும்முரமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெற்றிவிழாவின் போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மறுபடியும் தொடங்குவது குறித்து உதயநிதி பேசினார். கமலின் ‘விக்ரம்’ வசூலில் மகிழ்ந்த அவர், […]

The post இந்தியன் 2 படத்தில் ‘கட்டப்பா’ நடிக்கிறார் first appeared on .

]]>

‘இந்தியன் 2’ படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார் என்ற பேச்சு ஒருபக்கம் இருக்க.. இன்னொரு பிரபல நடிகர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அவர் யார்? பார்க்கலாம்.

கமல்- ஷங்கர் – லைகா இணையும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் மீண்டும் துவங்குகிறது. அதற்காக வேலைகளை லைகா மும்முரமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெற்றிவிழாவின் போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மறுபடியும் தொடங்குவது குறித்து உதயநிதி பேசினார். கமலின் ‘விக்ரம்’ வசூலில் மகிழ்ந்த அவர், அடுத்தும் கமல் படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டினார். விரைவில் ‘இந்தியன் 2’ ஆரம்பிக்கும் என்றார்.

கமலஹாசன், நெடுமுடி வேணு, விவேக், சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியாபவானி சங்கர், டெல்லிகணேஷ் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே படத்தில் இருக்கிறது. வசனங்களை ஷங்கருடன் இணைந்து ஜெயமோகன், லக்ஷ்மி சரவணகுமார், கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதனிடையே மீண்டும் படப்பிடிப்பு அடுத்த மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது என காஜல் அகர்வால் கூறியிருந்தார். இதற்கிடையே நெடுமுடி வேணு மரணமடைந்துவிட்டதால், அவருக்குப் பதிலாக அவரைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள மலையாள நடிகர் ஒருவரை நடிக்க வைக்கிறார்கள். இது தவிர, படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பார் எனப் பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பு வட்டாரத்தில், ‘அது உறுதியான தகவல் இல்லை’ என பதில் வருகிறது.

ஆனால், எதிர்பாராத விஷயமாக, படத்தில் சத்யராஜ் இணைந்திருக்கிறார். ஷங்கரின் ‘நண்பன்’ படத்திற்கு பிறகு அவர் மீண்டும் இயக்குனர் ஷங்கரோடு இணைந்துள்ளார். சத்யராஜ் வில்லனாக நடித்த காலங்களில் கமலுடன் `விக்ரம்’ , `காக்கிசட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர்கள் காம்பினேஷன் அரங்கை அதிர வைத்திருக்கின்றன. அடுத்த மாத படப்பிடிப்பில் கமல், காஜல், சத்யராஜ் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப் பட உள்ளன.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இதற்கான அரங்கம் அமைக்கும் வேலைகள் தொடங்கி இருக்கிறது. கமலுடன் நடிக்க வேண்டும் என விவேக் விரும்பினார். அது ‘இந்தியன்2’வில்தான் சாத்தியமானது. நடிகர் விவேக் மறைவிற்குப் பின், அவரது காட்சிகளை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து ஷூட் செய்ய இருப்பதாக பேச்சு எழுந்தது. ஆனால், விவேக்கிற்கு இது கடைசி படம் என்பதால், அவர் நடித்த காட்சிகளை அப்படியே படத்தில் வைத்துவிடலாம் என இயக்குநர் தரப்பு எண்ணியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

The post இந்தியன் 2 படத்தில் ‘கட்டப்பா’ நடிக்கிறார் first appeared on .

]]>