Infinix Hot 20 Play https://www.91mobiles.com/tamil Thu, 01 Dec 2022 11:38:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 வெறும் ரூ 8,999க்கு 6000mAh பேட்டரி, 7ஜிபி ரேம் – கலக்கும் இன்பினிக்ஸ் ஹாட் ப்ளே! https://www.91mobiles.com/tamil/specs-and-price-of-infinix-hot-20-play/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=specs-and-price-of-infinix-hot-20-play Thu, 01 Dec 2022 11:36:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4035 இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட ஹாட் சீரிஸின் ‘இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது ஹாட் சீரிஸின் இன்னொரு மொபைலான ‘இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே’ மொபைலைப் பற்றி பார்க்கலாம். பட்ஜெட் விலையில் பலவிதமான வசதிகளோடு இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது. டிஸ்ப்ளே இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே மொபைல் 6.82 அங்குல HD plus LCD டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. மேலும் இதில் 90Hz ரிப்ரெஷ் ரேட்டும் பஞ்ச் […]

The post வெறும் ரூ 8,999க்கு 6000mAh பேட்டரி, 7ஜிபி ரேம் – கலக்கும் இன்பினிக்ஸ் ஹாட் ப்ளே! first appeared on .

]]>

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட ஹாட் சீரிஸின் ‘இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது ஹாட் சீரிஸின் இன்னொரு மொபைலான ‘இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே’ மொபைலைப் பற்றி பார்க்கலாம். பட்ஜெட் விலையில் பலவிதமான வசதிகளோடு இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.

டிஸ்ப்ளே

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே மொபைல் 6.82 அங்குல HD plus LCD டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. மேலும் இதில் 90Hz ரிப்ரெஷ் ரேட்டும் பஞ்ச் ஹோல் டிசைனும் இருக்கிறது.

கேமரா

இந்த மொபைலில் 13மெகா பிக்சல் முதன்மை கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 8 மெகா பிக்சல் கேமரா ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக Quad LED ஃப்ளாஷ் ஒன்றும் இருக்கிறது.

சிப்செட் & இயங்குதளம்

இது ஒரு இரட்டை சிம் 4ஜி மொபைல் ஆகும். இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 ப்ராசஸர் இருக்கிறது. இது A53 Quad Core (2.3Ghz) ப்ராஸசர் ஆகும். மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.

மெமரி

இந்த மொபைலில் 4ஜிபி LPDDR4X பிசிகல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே இதில் விர்சுவல் ரேம் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 3 ஜிபி விர்சுவல் ரேம் வசதியையும் பெற முடியும். மொத்தத்தில் இந்த மொபைல் 7 ஜிபி ரேம் வசதியைக் கொண்டு இருக்கிறது. சேமிப்பு வசதிக்கென இந்த மொபைலில் 64ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒரு மைக்ரோ SD கார்டு மூலம் ஒரு 256GB அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும். இதற்கென தனியாக ஒரு மைக்ரோ SD ஸ்லாட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

நிறங்கள்

4ஜி மொபைலான இந்த் இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே போன் லுனா புளூ, ஃபாண்டசி பர்பில், அரோரா கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

பேட்டரி

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே மொபைலில் 6000mAh power monster பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதை சார்ஜ் செய்ய 18W fast charging சப்போர்ட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே இதில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

கனெக்டிவிட்டி

இந்த 4ஜி மொபைலில் டேட்டா ட்ரான்ஸ்பர் மற்றும் சார்ஜிங் போன்றவற்றிற்கு என Type C போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர DTS 3D ஆடியோ, Wi-Fi, GPS, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், OTG போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும் உள்ளன. பாதுகாப்புக்கு என இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே மொபைலில் பிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை

இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிமுக சலுகையாக ரூ. 8,999 என்ற விலைக்கு கிடைக்கும் இதன் விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. இதோடு இந்த மொபைலுக்கு வங்கி அட்டை சலுகைகளும், கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும்.

The post வெறும் ரூ 8,999க்கு 6000mAh பேட்டரி, 7ஜிபி ரேம் – கலக்கும் இன்பினிக்ஸ் ஹாட் ப்ளே! first appeared on .

]]>
பெரிய டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Infinix Hot 20 Play https://www.91mobiles.com/tamil/new-budget-smartphone-infinix-hot-20-play-launched-specs-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-budget-smartphone-infinix-hot-20-play-launched-specs-features Wed, 26 Oct 2022 05:52:02 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3218 இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Hot 20 Play எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82 அங்குல எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும். மேலும் 720×1640பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் […]

The post பெரிய டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Infinix Hot 20 Play first appeared on .

]]>

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Hot 20 Play எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82 அங்குல எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும். மேலும் 720×1640பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு 12

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போன் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி முதன்மை கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் போன்.

ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் உடன் வெளியாகும் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே மொபைல் 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு விதமான இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் இருக்கிறது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்தி சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது.

பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேசிங் ப்ளாக் (Racing Black), லூனா ப்ளூ (Luna Blue), ஆரோரா க்ரீன் (Aurora Green), மற்றும் ஃபேண்டஸி பர்ப்பிள் (Fantasy Purple) என்ற நான்கு வண்ணங்களில் இந்த மொபைல் வெளியாகிறது.

கனெக்டிவிட்டி

இது ஒரு டூயல் சிம் வசதி கொண்ட போன் ஆகும். இதில், 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எடை 209.6 கிராம் ஆகும்.

The post பெரிய டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Infinix Hot 20 Play first appeared on .

]]>