infinix Note 12 2023 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:25:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவுக்கு எப்போ வரும் Infinix Note 12 2023 https://www.91mobiles.com/tamil/infinix-note-12-2023-launched-with-mediatek-helio-g99-soc-know-price-and-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-note-12-2023-launched-with-mediatek-helio-g99-soc-know-price-and-specifications Mon, 17 Oct 2022 05:21:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3054 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமான இன்ஃபினிக்ஸ் மொபைல்ஸ் புதிய Note சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த போன் இன்பினிக்ஸ் நோட் 12 2023 (Infinix Note 12 2023) என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget Segment) வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜிபி வரை எக்ஸ்பண்டபிள் ரேம் ஆதரவு, 50 மெகாபிக்சல் கேமரா, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]

The post இந்தியாவுக்கு எப்போ வரும் Infinix Note 12 2023 first appeared on .

]]>

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமான இன்ஃபினிக்ஸ் மொபைல்ஸ் புதிய Note சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த போன் இன்பினிக்ஸ் நோட் 12 2023 (Infinix Note 12 2023) என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget Segment) வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜிபி வரை எக்ஸ்பண்டபிள் ரேம் ஆதரவு, 50 மெகாபிக்சல் கேமரா, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் இந்தியாவுக்கும் வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஒரே ஒரு குறைபாடு இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

Infinix Note 12 2023

Infinix Note 12 (2023) ஸ்மார்ட்போன் மாடலில் 2023 என்ற எண் அடுத்த வருடத்தைக் குறிக்கிறது என்றாலும், இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் இப்போதே ரிவீல் செய்துவிட்டது. இந்தியாவில் ஏற்கனவே இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Note 12 5G மற்றும் Infinix Note 12 Pro 5G மாடல்களை அறிமுகம் செய்துள்ளதால், இந்த புதிய மாடல், இந்த இரண்டு மாடலுக்கு கீழே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சிறப்பம்சம்

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போனின் விலை பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்த புதிய ஸ்மார்ட்போனின் முழுமையான சிறப்பம்சங்களை முதலில் பார்த்துவிடலாம். Infinix Note 12 2023 ஸ்மார்ட்போன் முழு HD+ உடன் கூடிய 6.7 அங்குல AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் 60Hz ரெப்ரெஷ் ரேட் உடன் முன்பக்கத்தில் கேமராவிற்காக ஒரு சிறிய நாட்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும்.

கேமரா & சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போன் 5ஜிபி வரை எக்ஸ்பண்டபிள் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50MP பிரைமரி சென்சார் உடன் AI லென்ஸுடன் கூட 2MP செகண்டரி கேமரா சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் முன்பக்கத்தில் புகைப்படம் எடுக்கவும், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளவும் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது.

குறைபாடு

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போன் புதிய 6nm MediaTek Helio G99 சிப்செட் உடன் வருகிறது. ஆம், நீங்கள் யூகித்தது சரி தான், இந்த போன் 4G சேவையில் இயங்கும் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இப்போது 5ஜி போன்களுக்கான முக்கிய வியாபார சந்தையாக மாறிவிட்ட பிறகு, இன்பினிக்ஸ் 4ஜி போனை அறிமுகம் செய்வது எந்த விதத்தில் வரவேற்கப்படும் என்பது நமக்கு தெளிவாகத் தெரியவில்லை.

விலை

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் $199 என்ற விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.16,400 என்ற விலையை நெருங்குகிறது. இந்த போன் ப்ளூ (நீலம்), க்ரேய் (சாம்பல்) மற்றும் வைட் (வெள்ளை) ஆகிய மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான இந்திய வெளியீட்டு விவரங்களை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

The post இந்தியாவுக்கு எப்போ வரும் Infinix Note 12 2023 first appeared on .

]]>