infinix smart 6 hd https://www.91mobiles.com/tamil Tue, 09 Aug 2022 12:40:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விற்பனைக்கு வந்தது Infinix Smart 6 HD https://www.91mobiles.com/tamil/infinix-smart-6-hd-sale-with-launch-price-and-discount-details-from-flipkart/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-smart-6-hd-sale-with-launch-price-and-discount-details-from-flipkart Tue, 09 Aug 2022 12:40:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1491 Infinix நிறுவனம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 எச்டி (Infinix Smart 6 HD) என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது, இந்த ஸ்மார்ட்போனிற்கான விற்பனை இந்தியாவில் சில அறிமுக சலுகைகளுடன் துவங்கியுள்ளது. இந்த குறுகிய கால அறிமுக சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இந்த மொபைலை வெறும் ரூ. 5000 விலையில் வாங்கிட முடியும். சீனாவின் ட்ரான்ஸ்ஷன் குழுமத்திற்குச் சொந்தமான Infinix பிராண்ட், இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியா ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்காக […]

The post விற்பனைக்கு வந்தது Infinix Smart 6 HD first appeared on .

]]>

Infinix நிறுவனம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 எச்டி (Infinix Smart 6 HD) என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது, இந்த ஸ்மார்ட்போனிற்கான விற்பனை இந்தியாவில் சில அறிமுக சலுகைகளுடன் துவங்கியுள்ளது. இந்த குறுகிய கால அறிமுக சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இந்த மொபைலை வெறும் ரூ. 5000 விலையில் வாங்கிட முடியும்.

சீனாவின் ட்ரான்ஸ்ஷன் குழுமத்திற்குச் சொந்தமான Infinix பிராண்ட், இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியா ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்காக மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. இது Mediatek Helio A22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 மெகாபிக்சல் AI-ஆதரவு கொண்ட ரியர் கேமராவை கொண்டுள்ளது. Infinix Smart 6 HD ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனம் என்றாலும் கூட, இதில் உள்ள சிறப்பம்சங்கள் எல்லாம் குறிப்பிடும்படியாகவே அமைந்துள்ளது. இந்த போன் DTS சரவுண்ட் சவுண்டுடன் கூடிய ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த விலையில், இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 135 மணிநேர பேச்சு நேரத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன் இந்தியாவில் 2ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒற்றை வேரியண்ட் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6,799 ஆகும். ஆனால், இதன் விலையை இன்னும் குறைக்க சில வழிகள் இருக்கிறது. இந்த விலை ஒரு அறிமுக கால சிறப்பு விற்பனை விலை என்று கூறப்படுகிறது. இந்த அறிமுக சலுகையின் காலம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது குறித்த எந்த வார்த்தையும் இல்லை. இருப்பினும், இந்த விலையில் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது அக்வா ஸ்கை, ஃபோர்ஸ் பிளாக் மற்றும் ஆரிஜின் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

Flipkart இ-காமர்ஸ் இணையதளம் ICICI வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் இந்த டிவைஸை வாங்கும் போது சுமார் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
அதேபோல், கோடக் மஹிந்திரா வங்கி கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி டிவைஸை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Infinix Smart 6 HD சிறப்பம்சம் Infinix Smart 6 HD சிறப்பம்சம் Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன் சாதனம் 6.6′ இன்ச் கொண்ட எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் குவாட் கோர் 12nm உடைய MediaTek Dimensity A22 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த டிவைஸ் 2GB LPDDR4X ரேம் மூலம் இயக்கப்படுகிறது. கூடுதலாக இன்டர்னல் ஸ்டோரேஜைப் பயன்படுத்தி ரேம் அளவை கிட்டத்தட்ட 4ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம். Infinix Smart 6 HD ஆனது 32GB வரை சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது.

இது தவிர, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்மார்ட்போனின் சேமிப்புத்திறனை 512ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். இது இரண்டு நானோ சிம் ஆதரவுடன், ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதளத்தில் இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை, இது இரட்டை LED ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் AI ரியர் கேமராவுடன் வருகிறது.

முன்பக்கத்தில் டூயல் LED ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை Infinix Smart 6 HD கொண்டுள்ளது. இது 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v4.2 மற்றும் GPS/ A-GPS ஆகியவற்றை ஆதரிக்கிறது. மலிவு விலையில் டீசெண்டான அம்சங்களுடன் வாங்க கிடைக்கும் சிறந்த போனாக இந்த Infinix Smart 6 HD மொபைல் இருக்கிறது.

The post விற்பனைக்கு வந்தது Infinix Smart 6 HD first appeared on .

]]>