IOS https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 09:10:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பிங் சர்ச் மூலம் மொபைலுக்கும் வந்தது ChatGPT! https://www.91mobiles.com/tamil/chatgpt-powered-new-bing-search-now-available-on-ios-and-android-mobile-phones/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=chatgpt-powered-new-bing-search-now-available-on-ios-and-android-mobile-phones Thu, 23 Feb 2023 12:57:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6048 தற்போது சாட் ஜிபிடி-யை இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் மட்டுமல்ல, புதிய பிங் சர்ச்சிற்கான ப்ரீவியூ ரிலீஸ் (Preview Release) ஐஓஎஸ் டிவைஸ்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் இந்தியா (Microsoft India) அறிவித்துள்ளது. அதாவது புதிய பிங் சேர்ச்சை ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமின்றி ஐபோன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம். இதை எப்படி பயன்படுத்துவது, இதன் வளர்ச்சி என்ன என்பதைப் பார்க்கலாம்.   பயன்படுத்துவது எப்படி? முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக […]

The post பிங் சர்ச் மூலம் மொபைலுக்கும் வந்தது ChatGPT! first appeared on .

]]>

Highlights

  • சாட்ஜிபிடி அடிப்படையிலான பிங் (ChatGPT Powered Bing) தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு வந்துள்ளது!
  • புதிய பிங் சேர்ச்சை ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமின்றி ஐபோன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம்.

தற்போது சாட் ஜிபிடி-யை இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் மட்டுமல்ல, புதிய பிங் சர்ச்சிற்கான ப்ரீவியூ ரிலீஸ் (Preview Release) ஐஓஎஸ் டிவைஸ்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் இந்தியா (Microsoft India) அறிவித்துள்ளது. அதாவது புதிய பிங் சேர்ச்சை ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமின்றி ஐபோன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம். இதை எப்படி பயன்படுத்துவது, இதன் வளர்ச்சி என்ன என்பதைப் பார்க்கலாம்.

 

பயன்படுத்துவது எப்படி?

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக எட்ஜ் (Edge) அல்லது பிங் (Bing) ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்திருப்பதை உறுதி செய்துகொள்ளவும். அதுமட்டுமின்றி பிங் ஏஐ ப்ரீவியூவில் சைன்-இன் மற்றும் லாக்-இன் செய்திருப்பதையும் உறுதி செய்துகொள்ளவும். மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ப்ரீவியூ ரீலீஸை அணுகக்கூடிய எவருமே (ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள்) தங்கள் ஸ்மார்ட்போனில் / ஐபோனில் உள்ள மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் ஆப்பின் (Microsoft Edge Mobile App) ஹோம் பேஜ் வழியாக புதிய பிங் சேர்ச்சை பயன்படுத்த முடியும்.

மொபைலுக்கு வந்துள்ள புதிய பின் சர்ச் ஆனது டெஸ்க்டாப்பில் இருப்பது போலவேத்தான் செயல்படும். அதாவது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் ஆப்பின் கீழே உள்ள பிங் ஐகானை (Bing Icon) கிளிக் செய்தால் போதும், நீங்கள் சாட் செஷனிற்கு (Chat Session) அழைத்து செல்லப்படுவீர்கள். அங்கே சாட்ஜிபிடி அடிப்படையிலான ஏஐ சாட்பாட் (ChatGPT Powered AI Chatbot) கிடைக்கும். அது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். மேலும் அது கதை எழுவது முதல் கோடிங் எழுதுவது வரை.. மொழிபெயர்ப்பு முதல் பரிந்துரைகள் வரையிலான உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும்.

 

வாய்ஸ் சர்ச்

பிங்கிற்கான புதிய மொபைல் ஆப்பை (New Bing Mobile App) அறிமுகம் செய்த கையோடு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதில் வாய்ஸ் சேர்ச் (Voice Search) அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ கால் பிளாட்ஃபார்மான ஸ்கைப்பிலும் (Skype) கூட ஏஐ-பவர்டு பிங் சேர்க்கப்பட்டுள்ளது. இதெல்லாமே வெறும் ஆரம்பம் தான். ஏனென்றால் வரும் நாட்களில் டீம்ஸ் (Teams) போன்ற நிறுவனத்தின் மற்ற தகவல்தொடர்பு ஆப்களிலும் கூட ஏஐ-பவர்டு பிங் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்தை பங்கு

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த நகர்வு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதிலும், கூகுள் நிறுவனத்தின் தேடல் விளம்பர சந்தை பங்கை (Search Advertising Market Share) தன்வசம் இழுக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். ஸ்டாட்கவுன்டர் (StatCounter) தரவுகளின்படி, கூகுளின் உலகளாவிய தேடல் சந்தை பங்கானது, டெஸ்க்டாப்பில் 85 சதவிகிதமும், ஸ்மார்ட்போன்களில் 96 சதவிகிதமும் உள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் பிங் சர்ச்சிடம் வெறும் 8.9% (டெஸ்க்டாப் சந்தை) மற்றும் 0.48% ( மொபைல் சந்தை) பங்குகள் மட்டுமே உள்ளது.

The post பிங் சர்ச் மூலம் மொபைலுக்கும் வந்தது ChatGPT! first appeared on .

]]>
மொபைல் பேட்டரி ஆயுளை அதிகரிக்க 7 டிப்ஸ்! https://www.91mobiles.com/tamil/how-to-increase-battery-life/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-increase-battery-life Sat, 12 Nov 2022 06:00:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3575 ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது மிகவும் வேகமாக காலி ஆவதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான, மற்றும் நம்மில் பலரும் யூகித்து கூட பார்க்க முடியாத ஒரு காரணம் உள்ளது. அதுதான் – கல்பிங் ஆப்ஸ் (Gulping Apps). அதாவது, உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் போனின் பேட்டரியை உறிஞ்சி குடிக்கும் ஆப்கள். லோ பேட்டரி (Low Battery) தொடர்பான இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 5G ஸ்மார்ட்போன்கள் […]

The post மொபைல் பேட்டரி ஆயுளை அதிகரிக்க 7 டிப்ஸ்! first appeared on .

]]>

ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது மிகவும் வேகமாக காலி ஆவதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான, மற்றும் நம்மில் பலரும் யூகித்து கூட பார்க்க முடியாத ஒரு காரணம் உள்ளது. அதுதான் – கல்பிங் ஆப்ஸ் (Gulping Apps). அதாவது, உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் போனின் பேட்டரியை உறிஞ்சி குடிக்கும் ஆப்கள்.
லோ பேட்டரி (Low Battery) தொடர்பான இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 5G ஸ்மார்ட்போன்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட உள்ளது! அதாவது இப்போது (4ஜி போன்கள் வழியாக) நீங்கள் சந்திக்கும் லோ பேட்டரி பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. 5ஜி நெட்வொர்க்கின் கீழ் இயங்கும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆனது “ஒப்பீட்டளவில்” மிகவும் வேகமாக காலி ஆவதை வல்லுநர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்-ஐ அதிகரிக்க உதவும் எளிமையான டிப்ஸ்கள் (Simple Tips) உள்ளன. அவைகளில் ஏதேனும் சிலவற்றை செய்தாலும் கூட போதும். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

01. சோஷியல் மீடியா ஆப்கள்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர், டிண்டர் போன்ற சோஷியல் மீடியா ஆப்களில் – எது தேவை இல்லையோ, அதன் – நோட்டிஃபிக்கேஷன்களை நிறுத்தி வைக்கவும்! இது ஒரு சின்ன காரியம் தான் ஆனால் பேட்டரி லைஃப்பில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்!

02. தேவை இல்லாத நோட்டிஃபிக்கேஷன்களை டிசேபிள் செய்த கையோடு சோஷியல் மீடியா ஆப்களின் பேக்கிரவுண்ட் டேட்டா பயன்பாட்டையும் (Background data usage) கட்டுப்படுத்துங்கள். இதை செய்வதன் வழியாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட சோஷியல் மீடியா ஆப்பில் இருந்து வெளியேறியதுமே, அது ஃப்ரீஸ் (Freeze) ஆகிவிடும் அல்லது முற்றிலும் ஷட் டவுன் (Shut Down) செய்யப்படும். எனவே அவைகளால் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை சீரழிக்க முடியாது! Background data usage-ஐ கட்டுப்படுத்தும் முறை Android மற்றும் iOS ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது.

3. தேவை இல்லாத நேரங்களில் மொபைல் டேட்டா அல்லது வைஃபையை ஆஃப் செய்வது மற்றொரு வழி ஆகும். தூங்கும் போது, குளிக்கும் போது, சாலையில் வாகனம் ஓட்டும் போது, முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது, தியேட்டரில் சினிமா பார்க்கும் போது என இப்படி பல இடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை உங்களால் பயன்படுத்தவே முடியாது அல்லவா? அதுபோன்ற நேரங்களில் மொபைல் டேட்டாவை அல்லது வைஃபையை ஆப் செய்து விடவும்; இது நிச்சயம் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்-ஐ அதிகரிக்கும்!

04. ‘லைட்’ வெர்ஷன்களை புறக்கணிக்க வேண்டாம்! பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற முக்கியமான சோஷியல் மீடியா ஆப்களுக்கு லைட் வெர்ஷன்கள் (Light Versions) உள்ளன. பொதுவாக லைட் வெர்ஷன்கள் ஆனது குறைந்த அளவிலான ரிசோர்ஸ்களையே எடுத்துக்கொள்ளும். இது டேட்டா நுகர்வை குறைப்பதோடு சேர்த்து மொபைல் பேட்டரியின் பயன்பாட்டையும் குறைக்கும்!

05. பேசாமல் வெப்சைட்டிற்கு போயிடுங்க! பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களை, ஆப்களின் வழியாக பயன்படுத்துவது போல, அந்தந்த சோஷியல் மீடியாக்களின் வெப்சைட் வெர்ஷன்களையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம். மொபைலில் உள்ள பேஸ்புக் ஆப் ஆனது மிகப்பெரிய பேட்டரியை உறிஞ்சும் மறுகையில் அதன் வெப்சைட் வெர்ஷன் ஆனது மிகவும் குறைவான அளவிலேயே பேட்டரியை பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டருக்கும் கூட இதையே கூறலாம்!

06. லோ பவர் மோட் அல்லது லோ பேட்டரி மோட்! எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெலாம் லோ பவர் மோட் (Low Power Mode) அல்லது லோ பேட்டரி மோட்-ஐ (Low battery mode) இயக்கலாம். இந்த அம்சம் iOS மற்றும் Android ஆகியே இரண்டிலுமே கிடைக்கிறது. இதை நீங்கள் எனேபிள் செய்யும் பட்சத்தில், பேக்கிரவுண்ட்டில் நடக்கும் ஆப் அப்டேட்கள் நிறுத்தப்படும் மற்றும் அடிப்படை செயல்பாடுகளை மட்டுமே செய்யும்படி மொபைல் போனின் சிஸ்டம் ஆனது கட்டுப்படுத்தப்படும். சில ஆண்ட்ராய்டு போன்களில் அல்ட்ரா பேட்டரி சேவர் மோட் (Ultra Battery Saver mode). அது இன்னும் திறம்பட செயல்படும்; முடிந்த அளவில் மொபைல் போன் பேட்டரியை சேமிக்கும்!

07. டாஸ்க் ஸ்விட்ச்சர்! கடைசியாக, ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலுமே இருக்கும் டாஸ்க் ஸ்விட்ச்சரை (Task Switcher) ஓப்பன் செய்யலாம். இது ஆப்களை போர்ஸ் க்ளோஸ் (Force close) செய்ய உதவும். அதேசமயம் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளையும் அதிகரிக்கும்.

The post மொபைல் பேட்டரி ஆயுளை அதிகரிக்க 7 டிப்ஸ்! first appeared on .

]]>
வாட்ஸப்பில் வருது காலண்டர்.. எதுக்கு தெரியுமா? https://www.91mobiles.com/tamil/whatsapp-lets-you-search-messages-by-date-here-s-how-it-works/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=whatsapp-lets-you-search-messages-by-date-here-s-how-it-works Tue, 13 Sep 2022 12:13:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2278 வாட்ஸ்அப் செயலியில் புத்தம் புதிய அம்சம் ஒன்று விரைவில் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய அம்சம் அந்த புதிய அம்சம் என்னவென்றால், பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாகத் தேதி குறிப்பிட்டுத் தேடும் வகையில் ‘காலண்டர் ஐகான்’ அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த புத்தம் புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து WABetaInfo கூறுகையில், சமீபத்தில் வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு யுபிஐ மூலம் […]

The post வாட்ஸப்பில் வருது காலண்டர்.. எதுக்கு தெரியுமா? first appeared on .

]]>

வாட்ஸ்அப் செயலியில் புத்தம் புதிய அம்சம் ஒன்று விரைவில் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய அம்சம்

அந்த புதிய அம்சம் என்னவென்றால், பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாகத் தேதி குறிப்பிட்டுத் தேடும் வகையில் ‘காலண்டர் ஐகான்’ அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த புத்தம் புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து WABetaInfo கூறுகையில், சமீபத்தில் வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை எளிதாக்கியது. அதேபோல் விரைவில் ஐஒஎஸ் பயனர்களுக்கு ‘காலண்டர் ஐகான்’ அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும், பின்பு முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா

குறிப்பாக வாட்ஸ்அப் பீட்டா iOS 22.0.19.73 மூலம் இந்த வசதியை பயன்படுத்தக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

அதாவது நீங்கள் உங்களது நண்பர்களுக்கு முன்பு அனுப்பிய மெசேஜை பார்க்க விரும்பினால், முதலில் அவர்களது சாட் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2

அடுத்து அங்கு இருக்கும் காலண்டர் ஐகான் கிளிக் செய்தவுடன், காலண்டர் காண்பிக்கப்படும்.

வழிமுறை-3

அதன்பின்பு நீங்கள் எந்த தேதியில் பேசிய மெசேஜ் வேண்டுமோ, அந்த தேதியை சரியாக குறிப்பிட்டு செலக்ட் செய்யலாம். அவ்வளவுதான். அந்த குறிப்பிட்ட நாளுக்கான சாட்களை நீங்கள் பார்க்க முடியும்.

வழிமுறை-4

அதேபோல் இந்த காலண்டர் வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், அதே சாட் பக்கத்தில் scroll செய்தால் போதும் காலண்டர் மறைந்துவிடும்.

ஆண்ட்ராய்டுக்கு எப்போது?

நீங்கள் குறிப்பிட்ட தேதியில் பேசிய மெசேஜ் திரும்ப சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் இந்த அம்சம் முதலில் ஐஒஎஸ் பயனர்களுக்கு தான் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை.

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ந்து இதுபோன்ற அருமையான அம்சங்களை கொண்டுவந்தபடி இருக்கிறது. இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் மற்ற செயலிகளை விட அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த வாட்ஸ்அப் செயலி. அதாவது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 24 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் நீக்கியதாக அதன் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர் புகார்கள்,தவறான தகவல் பரப்புதல் போன்ற கணக்குகளும் இதில் அடக்கம். குறிப்பாக மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் IT விதிகளின் கீழ், வெளியிடப்பட்ட மாதாந்திர அறிக்கையில் இது குறிப்பிட்டுள்ளது.

The post வாட்ஸப்பில் வருது காலண்டர்.. எதுக்கு தெரியுமா? first appeared on .

]]>